சீனாவின் AI ஸ்டார்ட்அப் நிறுவனமான டீப்சீக் அறிமுகம் செய்யப்பட்ட ஒரு வாரத்தில் உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது மட்டும் அல்லாமல் இன்று அமெரிக்கப் பங்குச்சந்தையில் ஏஐ துறை சார்ந்த நிறுவனப் பங்குகளை பெரும் சரிவுக்கு தள்ளிய பெருமையைப் பெற்றுள்ளது. அதிலும் குறிப்பாக என்விடியா பங்குகளை 12 சதவீதம் வரையில் சரியும் அளவுக்கு டீம்சீக் சக்திவாய்ந்த தளமாக மாறியுள்ளது.
டீப்சீக் சேவையைப் பயன்படுத்த அதிகப்படியான மக்கள் உலகமும் முழுவதிலும் இருந்து பதிவு செய்யும் வேளையில் இத்தளத்தில் "பெரிய அளவிலான சைபர் அட்டாக் " நடந்துள்ளதால் தனது சேவைகளில் குறிப்பிடத்தக்கத் தடையை விதித்துள்ளது டீப்சீக் நிறுவனம்.

இந்த சைபர் தாக்குதலைக் கட்டுப்படுத்தும் விதமாக டீப்சீக் நிறுவனம், தனது ஏஐ தளத்திற்கு புதிய பயனர் பதிவுகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இதேபோல் சீனா மெயின்லேண்ட் மொபைல் போன் எண்களைக் கொண்ட நபர்களுக்கு மட்டுமே புதிதாகப் பதிவு செய்ய அனுமதிக்கப்பட முடிவு செய்துள்ளது. இருப்பினும், ஏற்கனவே உள்ள பயனர்கள் தடையின்றி டீப்சீக் தளத்தை பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ளது.
டீப்சீக்-ஆர்1 என்ற தனது ஓப்பன்-சோர்ஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு ஒரு வாரத்தில் அமெரிக்காவில் ஆப்பிள் ஆப் ஸ்டோர் டாப் ரேட்டிங்-ஐ பெற்றது மட்டும் அல்லாமல் டவுன்லோடில் சாதனைகளை படைத்துள்ளது. இதன் மூலம் அமெரிக்காவின் ஆப்பிள் ஸ்டோரில் முதலிடத்தைப் பிடித்ததைத் தொடர்ந்து இன்று பல முறை டீம்சீக் தளத்தில் சேவை பயன்பாடு தடைபெற்றது.
சைபர் தாக்குதல், தற்காலிக தடங்கல் என்றாலும், ஏஐ துறையில் சைபர் பாதுகாப்பின் வளர்ந்து வரும் முக்கியத்துவத்தை இந்த பிரச்சனை எடுத்துக்காட்டுகிறது.
உலகளாவிய செயற்கை நுண்ணறிவு துறையில் சீனா ஒரு புதிய அத்தியாயத்தை இந்த டீப்சீக் எழுதி வருகிறது. இந்த துறையில் இதுவரை அமெரிக்க நிறுவனங்கள் மட்டுமே முன்னிலை வகித்து வந்த நிலையில், சீனாவின் டிப்சீக் போன்ற நிறுவனங்கள் இதில் புதிய போட்டியை ஏற்படுத்தியுள்ளன.
ஓபன்ஏஐயின் ChatGPT, கூகுளின் ஜெமினி, மெட்டாவின் லாமா போன்ற பிரபலமான செயற்கை நுண்ணறிவு மாடல்களுக்கு போட்டியாக டிப்சீக் திகழ்கிறது. இதன் மூலம் செயற்கை நுண்ணறிவு துறையில் ஒரு புதிய போட்டி உருவாகியுள்ளது. சீனாவின் இந்த முன்னேற்றம், டிப்சீக் போன்ற நிறுவனங்களின் வருகையால், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இனி அமெரிக்க நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் மட்டும் இருக்காது என்பதை நிரூபிக்கிறது.


Click it and Unblock the Notifications