உலகளவில் நடக்கும் செயற்கை நுண்ணறிவு போரில் சீனாவின் டீப்சீக் புதிய அத்தியாயத்தைத் துவங்கியுள்ளது. ஏஐ பொறுத்த வரையில் இதுநாள் வரையில் அமெரிக்க நிறுவனங்கள் மட்டுமே கோலோச்சி வரும் வேளையில் சீனாவும் களத்தில் இறங்கியுள்ளது. டெக் துறையிலும், இன்னோவேஷன் பிரிவிலும் சீனா உலக நாடுகளுக்கு டஃப் பைட் கொடுக்கும் வேளையில் ஓபன்ஏஐ நிறுவனத்தின் ChatGPT, கூகுளின் ஜெமினி, மெட்டாவின் லாமா போன்றவற்றுக்கு பெரும் போட்டியாகச் சீனாவின் டீப்சீக் உருவெடுத்துள்ளது.
சீனாவின் ஹாங்க்சோவை தளமாகக் கொண்ட ஸ்டார்ட்அப் நிறுவனம் தான் இந்த டீப்சீக் (DeepSeek). ஓபன்ஏஐ போல் அதிகம் வெளியுலகத்திற்குத் தெரியாத இதேவேளையில் டெக் துறையில் இருப்பவர்களுக்கு மட்டுமே தெரிந்த ஒரு சிறப்பான நிறுவனம் தான் இந்த டீம்சீக்.

டீப்சீக் உருவாக்கிய செயற்கை நுண்ணறிவு தளம் அறிமுகம் செய்யப்பட்டு வெறும் ஒரு வாரத்தில், அமெரிக்காவின் ஆப்பிள் ஸ்டோரில் பதிவிறக்கங்களில் ஓபன்ஏஐ-யின் சாட்ஜிபிடியை பின்னுக்குத் தள்ளியுள்ளது. இது வெறும் ஒரு வாரத்தில் நிகழ்ந்திருப்பது தான் ஆச்சரியப்பட வைக்கும் ஒரு விஷயமாக உள்ளது.
இதன் மூலம் செயற்கை நுண்ணறிவு துறையில் நிலவும் கடும் போட்டி தற்போது பல மடங்கு அதிகரிக்க உள்ளது. ஏற்கனவே எலான் மஸ்க் தனது X தளத்தின் வாயிலாக கோர்க் AI பயன்பாட்டை அதிகரிக்க முயற்சி செய்து வரும் வேளையில் சீனாவின் டீப்சீக் AI துறையில் புதிய அவதாரத்தை எடுத்துள்ளது. ஓபன்ஏஐ, கூகுள், மைக்ரோசாஃப்ட் போன்ற முன்னணி நிறுவனங்களுக்கு இது கடும் சவாலாக அமைந்துள்ளது.
டீப்சீக்கின் இந்த விரைவான வளர்ச்சிக்கு முக்கிய காரணம் அதன் சிக்கலான அமைப்பு மற்றும் மேம்பட்ட திறன்கள் தான். சந்தையில் இருக்கும் பல்வேறு AI மாடல்களை ஒப்பிடுகையில் பல பிரிவில் டீப்சீக் சிறந்து விளங்குவதாக அதன் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த அறிக்கையின் விபரத்தை டீப்சீக் தனது இணையத்தளத்திலேயே வெளியிட்டுள்ளது.
இந்நிறுவனத்தின் முக்கிய ஏஐ மாடலான டீப்சீக் ஆர்1, reinforcement learning மற்றும் chain-of-thought reasoning முறையை ஒருங்கிணைக்கும் ஹைப்ரிட் அணுகுமுறையைப் பயன்படுத்துகிறது. இதன் மூலம் சிக்கலான பணிகளை மேம்பட்ட முறையில் தீர்க்கும் சக்தி கொண்டதாக உள்ளது.
சீனாவின் Hangzhou நகரில் இருந்து இயங்கக்கூடிய இந்த டீப்சீக் நிறுவனம் டீப்சீக் ஆர்1 மற்றும் டீப்சீக் ஆர்1-ஜீரோ என இரண்டு ஏஐ மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. பதிப்புகள் கிடைக்கின்றன.
டீப்சீக் ஏஐ மாடல் மக்கள் மத்தியில் விரைவாகப் பிரபலமடைய முக்கியமான காரணம் அதன் விலை மற்றும் சிறந்த செயல்திறன் தான். ஒருபக்கம் சாட்ஜிபிடி ஒப்பிடுகையில் அதிக திறன், மறுமுனையில் சாட்ஜிபிடி காட்டிலும் மலிவான கட்டணத்தில் சேவை அளிக்கப்படுவதால் டெக் வல்லுனர்கள் மத்தியில் டீப்சீக் ஒரு வாரத்திலேயே பிரபலமடைந்துள்ளது.
ஓபன்ஏஐ-யின் ஓ1 ஒரு மில்லியன் input tokens-க்கு 15 டாலரை மட்டுமே கட்டணமாக வசூலிக்கும் நிலையில், டீப்சீக் ஆர்1 ஒரு மில்லியன் input tokens வெறும் 0.55 டாலர் கட்டணத்தை மட்டுமே வசூலிக்கிறது. மேலும், கம்ப்யூட்டர் கோடிங் எழுதுவது போன்ற முக்கிய துறைகளில் டீப்சீக் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளது. இதில் 97% வெற்றி விகிதத்தை அடைந்துள்ளது
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!



Click it and Unblock the Notifications