சீனாவின் டீப்சீக் என்ற புதிய ஏஐ ஸ்டார்ட்அப் நிறுவனம் உலகளாவிய தொழில்நுட்பத் துறையை, குறிப்பாக சிலிக்கான் வேலியை அதிரவைத்துள்ளது. ஏஐ துறையில் எங்களை விட்டால் வேறு ஆளே இல்லை என்ற வகையில் அமெரிக்க டெக் நிறுவனங்களும், அமெரிக்க செமிகண்டக்டர் நிறுவனங்களும் பெருமை பேசிவந்தது. ஆனால் சீனாவின் டீப்சீக் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் செமிகண்டக்டர் நிறுவனங்களின் சந்தை மதிப்பு ஒரே நாளில் 1 டிரில்லியன் டாலர் அளவுக்கு இழப்பு ஏற்படும் அளவு நிலைமை உருவாகியுள்ளது.
ஹெட்ஜ் பண்ட் மற்றும் ஏஐ துறையில் முக்கியமான நபரான லியாங் வென்ஃபெங் (Liang Wenfeng) நிறுவிய நிறுவனம் தான் இந்த டீப்சீக். ChatGPT, Gemini, Llama போன்றவற்றுக்கு போட்டியாக அறிமுகம் செய்யப்பட்டது தான் இந்த டீப்சீக். டீப்சீக் அறிமுகம் செய்யப்பட்டு வெறும் ஒரு வாரத்தில், அமெரிக்காவின் ஆப்பிள் ஸ்டோரில் பதிவிறக்கங்களில் ஓபன்ஏஐ-யின் சாட்ஜிபிடியை பின்னுக்குத் தள்ளியுள்ளது.

டீப்சீக் மற்ற ஏஐ நிறுவனங்களை போல் அல்லாமல் தனியாக செயல்படுகிறது. இது வென்ஃபெங் (Liang Wenfeng) நிறுவிய ஒரு குவான்டிட்டேட்டிவ் ஹெட்ஜ் பண்ட் நிறுவனமான ஹை-ஃப்ளையர் (High-Flyer) மூலம் மட்டுமே முதலீடு செய்யப்பட்டு இயங்கி வருகிறது. இதனால் யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் டீப்சீக் நிறுவனத்திற்கு இல்லை.
டீப்சீக்-வி3 எனப்படும் புதிய ஏஐ மாடல் சாட்ஜிபிடி, ஜெமினி காட்டிலும் மிகவும் சக்திவாய்ந்ததாக இருப்பது மட்டும் அல்லாமல் ஓபன்ஏஐ, கூகுள் போல் அதிகப்படியான வன்பொருள் (Hardware) கட்டமைப்பு இல்லாமல் எளிய கட்டமைப்பில் இயங்க கூடிய வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது. இதேவேளையில் இது மற்ற ஏஐ மாடல்களை காட்டிலும் சிறப்பாக இயங்க கூடிய ஒன்றாக உள்ளது.
இதனால் செமிகண்டக்டர் சிப் துறை அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. ஆர்ம், என்விடியா, பிராட்காம், சூப்பர் மைக்ரோ, தைவான் செமி, மைக்ரான், குவால்காம், ஏஎம்டி மற்றும் இன்டெல் போன்ற முக்கிய நிறுவனங்களின் பங்கு விலைகள் கணிசமான அளவில் குறைந்துள்ளன. சீனாவின் டீப்சீக் அறிமுகத்திற்கும் செமிகண்டக்டர் துறைக்கும் என்ன தொடர்பு..?
டீப்சீக், ஓபன்ஏஐ மற்றும் கூகுள் போன்ற நிறுவனங்களை விட குறைவான கம்ப்யூட்டிங் பவரை பயன்படுத்தி சக்திவாய்ந்த ஏஐ மாடல்களை உருவாக்கும் திறனை வெளிப்படுத்த முடியும் என நிரூபணம் செய்துள்ளது. இதன் மூலம் செமிகண்டக்டர் துறையில் டீப்சீக் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
அதாவது ஓபன்ஏஐ மற்றும் கூகுள் போன்ற நிறுவனங்கள் தனது ஏஐ மாடலை 100 சிப் கொண்டு செயல்படுத்தினால், சீனாவின் டீப்சீக் வெறும் 50 சிப்களை வைத்து இவ்விரண்டை காட்டிலும் சக்திவாய்ந்த ஏஐ மாடல்களை உருவாக்கியுள்ளது. இதனால் இனி வரும் காலத்தில் செமிகண்டக்டர் சிப் தேவை ஏஐ துறையில் குறையும் என கணிக்கப்பட்டு உள்ளது.
இதனால் என்விடியா போன்ற நிறுவனங்களின் உயர் செயல்திறன் கொண்ட சிப்களுக்கான தேவையை குறைக்கக்கூடும் மற்றும் பல நிறுவனங்கள் ஏஐ மாடல்களை உருவாக்க குறைந்த அளவில் மட்டுமே செலவிடப்படும். இதனால் சிப் தயாரிக்கும் நிறுவனங்களின் வர்த்தகம் பாதிக்கப்படும்.
சர்வதேச சந்தையில் இருக்கும் டாப் 10 செமிகண்டக்டர் நிறுவனங்களின் பங்கு விலை ஓவர்நைட்டில் முன்வர்த்தக கணிப்பு என்பது மிகவும் மோசமாக உள்ளது.
1. Arm, $ARM: -5.5%
2. Nvidia, $NVDA: -5.3%
3. Broadcom, $AVGO: -4.9%
4. Super Micro, $SMCI: -4.6%
5. Taiwan Semi, $TSM: -4.5%
6. Micron, $MU: -4.3%
7. Qualcomm, $QCOM: -2.8%
8. AMD, $AMD: -2.5%
9. Intel, $INTC: -2.0%
இதன் மூலம் அமெரிக்க சந்தையில் திங்கட்கிழமை வர்த்தகம் துவங்கும் போது செமிகண்டக்டர் துறையில் மட்டும் சுமார் 1 டிரில்லியன் டாலர் மதிப்பிலான சந்தை மதிப்பு இழக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications