இந்தியாவின் பெரும் பணக்காரராக இருக்கும் முகேஷ் அம்பானி உடன் பிறந்தவர் அனில் அம்பானி மட்டும் அல்லாமல் இரு சகோதரிகளும் உள்ளனர். இரு சகோதரிகளும் தந்தை உருவாக்கிய ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தில் எவ்விதமான பதவியிலும் இல்லாத காரணத்தால் இவர்களை பலருக்கும் தெரியாது.
திருபாய் அம்பானி, கோகிலாபென் அம்பானி ஆகியோருக்கு 2 மகன்கள், 2 மகள்கள் என மொத்தம் நான்கு பிள்ளைகள் உள்ளனர். இதில் முகேஷ் அம்பானி, அனில் அம்பானி ஆகியோரை இந்திய மக்கள் அனைவருக்கும் தெரியும், ஆனால் தீப்தி மற்றும் நினா ஆகியோர் பலருக்கும் தெரியாது.

நீனா கோத்தாரி குறித்து தெரிந்துக்கொள்ள இதை கிளிக் செய்யவும்.
திருபாய் அம்பானியின் இளைய மகள் தான் தீப்தி அம்பானி 1962 ஆம் ஆண்டு பிறந்த தீப்தி, விஎம் சல்கோகர் சட்ட கல்லூரியில் சட்ட பிரிவில் பட்டம் பெற்றார். கல்லூரி படிப்பை முடித்த பின்பு தத்தராஜ் சல்கோகர் என்ற தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்கு பின்பு தீப்தி அம்பானி - தீப்தி சல்கோகர் ஆக மாறினார்.
முகேஷ் அம்பானி, அனில் அம்பானி ஆகிய இருவருக்கும் பாலிய நண்பராக இருந்தவர் தான் தத்தராஜ் சல்கோகர். அண்ணனின் நண்பரான தத்தராஜ் சல்கோகர்-ஐ காதலித்து திருமணம் செய்துக்கொண்டார் தீப்தி, இவர்களின் திருமணத்திற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இவர்களின் திருமணத்திற்கு பின்பு கோவா-வில் இருவரும் வசித்து வருகின்றனர்.
தத்தராஜ் சல்கோகர் பாம்பே பல்கலைகழகத்தில் ப்ரொடக்ஷன் இன்ஜினியரிங் படித்தவர், வார்டன் பிஸ்னஸ் ஸ்கூலில் எம்பிஏ பைனான்ஸ் பிரிவில் பட்டம் பெற்றவர். இவர் தலைமையிலான vm salgaocar corp தற்போது பல்வேறு ஹோட்டல்கள், கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகிறது. தத்தராஜ் சல்கோகர் மற்றும் தீப்தி-க்கு விக்ரம் சல்கோகர் என்ற மகனும், இஷேதா சல்கோகர் என்ற மகளும் உள்ளனர்.

இதில் இஷேதா சல்கோகர் மோசடி மன்னன் நீரவ் மோடியின் இளைய சகோதரன் நீஷால் மோடி-ஐ திருமணம் செய்துக்கொண்டார். 2016ல் நடந்த இவர்களின் திருமணம் மூலம் முகேஷ் அம்பானி தங்கை குடும்பத்திற்கும் நீரவ் மோடி குடும்பத்திற்கும் தொடர்பு ஏற்பட்டது..
இஷேதா சல்கோகர் - நீஷால் மோடி அடுத்த சில வருடத்தில் முறிந்த நிலையில் இஷேதா Nexzu Mobility நிறுவனத்தின் நிறுவனர் அதுல்யா மிட்டல் உடன் காதல்வயப்பட்டு திருமணம் செய்துக்கொண்டனர். ஸ்டீல் தொழிலதிபரான லட்சுமி மிட்டல்-ன் சகோதரியின் மகன் தான் அதுல்யா மிட்டல்.


Click it and Unblock the Notifications