மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 6வது முறையாகத் தாக்கல் செய்த தனது பட்ஜெட்டில் அறிவித்த முக்கியமான அறிவிப்புகளில் ஒன்று பாதுகாப்புத் துறைக்கான பட்ஜெட். 2024-25 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் அதிகப்படியான நிதி ஒதுக்கீடுகளைப் பெற்ற துறை பாதுகாப்புத் துறை தான்.
மத்திய அரசு கடந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் பாதுகாப்பு துறைக்கு ரூ.5.94 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்த நிலையில், தற்போது 4 சதவீத உயர்வில் ரூ.6.25 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

உக்ரைன் - ரஷ்யா, சீனா - தைவான், இஸ்ரேல் - பாலஸ்தீனம், ஹவுதி - செங்கடல் இப்படி உலகில் பல நாடுகள் போரிட்டும், தாக்குதல் நடத்தியும் வரும் வேளையில் அனைத்து முன்னணி பொருளாதார நாடுகளும் பாதுகாப்புத் துறைக்கான பட்ஜெட்-ஐ அதிகரித்துள்ளது.
இந்தியா 2024 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், பாதுகாப்பு அமைச்சகம் வரலாற்றில் அதிகபட்சமாக 5.94 லட்சம் கோடி ரூபாயை ஒதுக்கிய நிலையது. இது அரசின் மொத்த பட்ஜெட் செலவினத்தில் சுமார் 13.2 சதவீத பங்கீட்டையும், நவீனமயமாக்கல் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான மூலதனச் செலவாக ரூ.1.63 லட்சம் கோடியை ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது.
2023 ஆம் ஆண்டில் பாதுகாப்பு கையகப்படுத்துதல் கவுன்சில் (டிஏசி) இந்தியாவின் ஆயுதப் படைகளின் ஆயுத பலத்தை மேம்படுத்த 3.50 லட்சம் கோடி ரூபாய்க்கு மேலான திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தது என்று பாதுகாப்பு அமைச்சகம் வருடாந்திர மதிப்பாய்வு அறிக்கையில் தெரிவித்தது.
மேலும், பிரான்ஸ் நாட்டின் டிபென்ஸ் நிறுவனமான டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடம் இருந்து இந்திய கடற்படைக்கு ராணுவ உபகரணங்கள், ஆயுதங்கள், சிமுலேட்டர் மற்றும் உதிரிப்பாகங்கள் உட்பட 26 ரஃபேல் கடல் விமானங்களை வாங்குவதற்குப் பாதுகாப்பு கையகப்படுத்துதல் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.
2022 ஆம் நிதியாண்டில் 5 லட்சம் கோடி ரூபாய் அளவிலான நிதியை பாதுகாப்பு செலவினங்களுக்காகச் செலவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் 2023 அக்டோபர் மாதம் பேசுகையில், 2047 ஆம் ஆண்டில் நாம் சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகளைக் கொண்டாடும் போதுஸ இந்தியா வளர்ந்த நாடாக உருவெடுக்க, நவீன ராணுவ கருவிகள், ஆயுதங்கள் கொண்ட வலுவான ஆயுதப் படைகள் தேவை என்று கூறினார். இதற்கு ஏற்றார் போல் பாதுகாப்பு துறைக்கான நிதி ஒதுக்கீடு 4 சதவீத உயர்வில் ரூ.6.25 லட்சம் கோடியாக உள்ளது.


Click it and Unblock the Notifications