இந்திய பொருளாதாரம், மக்களின் தனிநபர் வருமானம், ஏற்றுமதி, வெளிநாட்டு முதலீடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்துவது மிகவும் முக்கியமானது. இந்த நிலையில் இந்திய எப்படி கச்சா எண்ணெய் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறதோ இதேபோல் பாதுகாப்பு துறை உபகரணங்கள், கப்பல், பைட்டர் ஜெட் விமானங்கள் ஆகியவையும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
இந்த நிலையில் வெளிநாடுகளை நம்பியிருக்கும் நிலையை மாற்ற மத்திய மேட் இன் இந்தியா திட்டத்தை செயல்படுத்தி அதிகப்படியான ராணுவம் மற்றும் பாதுக்காப்பு துறை உபகரணங்கள், தடவாளங்களை உள்நாட்டிலேயே தயாரிக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதில் முக்கிய கட்டமாக 19000 கோடி ரூபாய் திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்திய கடற்படைக்கு தேவையான ஐந்து கடற்படை ஆதரவு கப்பல்களை (FSS) சேர்பதற்காக, ஆந்திர மாநிலத்தின் துறைமுக நகரமான விசாகப்பட்டினத்தில் உள்ள ஹிந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமிடெட் (எச்எஸ்எல்) நிறுவனத்துடன் ஆகஸ்ட் 25 அன்று பாதுகாப்பு அமைச்சகம் முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
இந்த ஒப்பந்தம் மூலம் ஹிந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமிடெட் தோராயமாக ரூ.19,000 கோடி மதிப்பிலான கடற்படை ஆதரவு கப்பல்களை தயாரிக்க உள்ளது. இந்த கப்பல்கள் 44,000 டன் எடை கொண்டவை, இந்த பிரிவில் முதல் முறையாக இந்திய கப்பல் கட்டும் தளத்தில் இந்திய நிறுவனம் கட்டப்படும் முதல் கப்பல் இது. இந்த பெருமைக்குறிய விஷயத்தை மத்திய பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த 19000 கோடி ரூபாய் திட்டம் மூலம் பாதுகாப்பு துறை உற்பத்தியில் வெளிநாடுகளை நம்பியிருக்காத நிலையும், சொந்த முயற்சியில் மேக் இன் இந்தியா பயணத்தில் புதிய வேகத்தில் பயணிக்கப்பட உள்ளது இந்தியா.
இந்த திட்டத்திற்கு ஆகஸ்ட் 16 ஆம் தேதி மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில் இன்று 44,000 டன் எடை கொண்ட 5 கடற்படை கப்பல்களை தயாரிக்கும் 19000 கோடி ரூபாய் திட்டத்திற்கு ஹிந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமிடெட் உடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.
கடற்படை ஆதரவு கப்பல்கள் என்பது கடலில் உள்ள இந்திய கடற்படை கப்பல்களுக்கு எரிபொருள், நீர், ஆயுதங்கள் மற்றும் முக்கிய பொருட்களை சப்ளை செய்ய பயன்படும். இந்த கப்பல்கள் மூலம் ஆயுதம் தாங்கிய இந்திய கடற்படை கடற்படை துறைமுகத்திற்கு திரும்பாமல் நீண்ட காலத்திற்கு செயல்பட உதவும்.


Click it and Unblock the Notifications