இந்திய பாதுகாப்பு துறை உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்தின் ஒரு பகுதியாக, ராணுவம், கடற்படை மற்றும் விமானப் படைக்கு சுமார் 36,400 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்களில் பாதுகாப்பு அமைச்சகம் மார்ச் 30 கையெழுத்திட்டுள்ளது.
இந்திய பாதுக்காப்பு துறையை மேம்படுத்தும் நோக்கில் முப்படைகளிலும் புதிய ஆயுத உற்பத்தி ஒப்பந்தகளை மத்திய அரசு செய்துள்ளது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் ரூ.36,000 கோடி மதிப்பிலான ஆயுதங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது.
இந்திய ராணுவம்
பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் இந்திய ராணுவத்திற்கு மேம்படுத்தப்பட்ட ஆகாஷ் ஏர் ஏவுகணைகளை இரண்டு படைப்பிரிவுகளை வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
ஏவுகணைக் கப்பல்
6 அடுத்த தலைமுறை ஏவுகணைக் கப்பல்களை வாங்க கொச்சி கப்பல் கட்டும் தளத்துக்கு ரூ.9,805 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது மத்திய பாதுகாப்பு துறை. இந்த ஒப்பந்தத்தின் படி கப்பல்களின் விநியோகம் மார்ச் 2027 முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
NGMV-க்களின சிறப்பு
NGMV கள் (next generation missile vessels) அதிவேகம் மற்றும் தாக்குதல் திறன் ஆகியவற்றை உள்ளடக்கிய அதிக ஆயுதம் தாங்கிய போர்க் கப்பல்களாக இருக்கும். எதிரி போர்க்கப்பல்கள், சரக்கு கப்பல்கள், தரை இலக்குகளுக்கு எதிராக தாக்குதல் திறனை வழங்குவதே இக்கப்பல்களின் முதன்மைப் பணியாகும்.
19,600 கோடி ரூபாய் டீல்
பாதுகாப்பு அமைச்சகம் 19,600 கோடி ரூபாய் மதிப்பில் 11 அடுத்த தலைமுறை கடல் ரோந்து கப்பல்கள் மற்றும் 6 அடுத்த தலைமுறை ஏவுகணை கப்பல்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் இந்திய கப்பல் கட்டும் தளங்களுடன் கையெழுத்திட்டுள்ளது.
லின்க்ஸ்-யு2 சிஸ்டம்!
இதுதவிர, பாதுகாப்பு அமைச்சகம் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் இந்திய கடற்படைக்கான 13 லின்க்ஸ்-யு2 சிஸ்டம்களை வாங்குவதற்கான 1700 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளது.
லின்க்ஸ்-யு2 சிஸ்டம்
லின்க்ஸ்-யு2 சிஸ்டம் என்பது நேவல் கன் ஃபயர் கன்ட்ரோல் சிஸ்டம் எனப்படும். கடல் சீற்றம் மற்றும் காற்று/மேற்பரப்பு இலக்குகளுக்கு இடையே உள்ள இலக்குகளை துல்லியமாக கண்காணித்து ஈடுபடுத்தும் திறன் கொண்ட உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட கருவியாகும்.
BDL உடன் ஒப்பந்தம்!
ஏவுகணை அமைப்பின் மூன்றாவது மற்றும் நான்காவது படைப்பிரிவுகளுக்காக பிடிஎல் நிறுவனத்திடம் இருந்து ரூ.6,000 கோடி மதிப்பிலான ஏவுகணை தயாரிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் மூலம் எதிர் நாட்டு விமானங்கள், அல்லது ட்ரோன்கள் நாட்டில் நுழையும்போது அதை துல்லியமாக கணிக்க ராணுவத்திற்கு உதவியாக இருக்கும் என அமைச்சகம் தெரிவித்துள்ளதாக ANI தெரிவித்துள்எளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications