இந்தியாவில் பாதுகாப்புத் துறை சார்ந்த உற்பத்தி மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது, இதேபோல் பல இந்திய நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்கள் உடன் கூட்டணி சேர்ந்து துப்பாக்கி முதல் நீர்மூழ்கிக் கப்பல் வரையில் தயாரிக்கும் பணிகளைச் செய்து வருகிறது. இதன் வாயிலாகப் பாதுகாப்புத் துறை சார்ந்த ஏற்றுமதிக்கு புதிய வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.
தற்போது கல்யாணி ஸ்ட்ரேடஜிக் சிஸ்டம்ஸ், லார்சன் அண்ட் டூப்ரோ லிமிடெட், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் உள்ளிட்ட இந்திய பாதுகாப்பு நிறுவனங்கள் தங்களது ராணுவ தளங்களைப் பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு விற்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவை எதிர்கொள்ளத் தயாராகி வரும் வேளையில் பிலிப்பைன்ஸ் தனது ராணுவத்தைச் சீரமைத்து வருகிறது, சமீபத்தில் இந்தியாவிடம் இருந்து பிரம்மோஸ் ஏவுகணையை வாங்கியது குறிப்பிடத்தக்கது. 2022 ஆம் ஆண்டில் இரு நாடுகளுக்கும் மத்தியில் 375 மில்லியன் டாலர் மதிப்புடைய மூன்று பிரம்மோஸ் பேட்டரிகளை வழங்க பிலிப்பைன்ஸ் - இந்தியா உடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
இந்திய பாதுகாப்பு நிறுவனங்கள் பாதுகாப்பு உபகரணங்கள் முதல் போர் விமானங்கள் வரையிலான அமைப்புகளை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்து வருகிறது. HAL நிறுவனத்தின் தலைவர் சிபி அனந்தகிருஷ்ணன் கூறுகையில் நைஜீரியா, பிலிப்பைன்ஸ், எகிப்து ஆகியவை இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தேஜாஸ் லைட் காம்பேக்ட் விமானங்களை வாங்குவதற்கு ஆர்வமாக உள்ளது எனத் தெரிவித்தார்.
இதன் மூலம் 2024-25 ஆம் நிதியாண்டுக்குள் இந்தியாவின் வருடாந்திர பாதுகாப்புத் துறை ஏற்றுமதி அளவு 5 பில்லியன் டாலர் அளவீட்டை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் வெளிநாட்டு நிறுவனங்கள் உடன் இந்திய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் பல்வேறு ராணுவ உபகரணங்களை இந்திய ராணுவம் வாங்குவதால் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வது குறைக்கப்பட்டு, டாலர் இருப்பும் தக்கவைக்கப்பட்டு உள்ளது.
ஒரு காலத்தில் முப்படைகளுக்கும் தேவையான ஆயுதங்களை வெளிநாட்டில் இருந்து மட்டுமே வாங்கும் நிலையில் இருந்து, தற்போது ஏற்றுமதி செய்யும் அளவுக்கு இந்தியா மாறியுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications