ரஷ்யாவை பந்தாடும் உக்ரைன்.. ஓரே நேரத்தில் 3 அட்டாக்.. ஆடிப்போன புடின்..!!

டிரம்ப் - புடின் மத்தியிலான டீசல் விநியோகத்துக்கான ஒப்பந்தம் செய்த பின்பு ரஷ்யா மீதும், ரஷ்ய எண்ணெய் கட்டமைப்புகள் மீதும் எவ்விதமான தாக்குதலையும் செய்யக்கூடாது என டிரம்ப் உத்தரவிட்டார். ஆனால் இந்த உத்தரவையும் மீறி உக்ரைன் ராணுவம், ரஷ்யாவின் 3 முக்கிய கட்டமைப்புகள் மீது தாக்குதல் மேற்கொண்டு உள்ளது.

இன்று உக்ரைன் ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரில் இருக்கும் முக்கியமான உள்கட்டமைப்புகள் மீது கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளது. உக்ரைன் சமீப காலமாக நீண்ட தூரம் செல்லும் ட்ரோன்களை கொண்டு ரஷ்யாவின் எல்லை பகுதியில் இருந்து மையப்பகுதியில் இருக்கும் முக்கிய கட்டமைப்புகளைத் தாக்கி வருகிறது.

இன்று நடந்த மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலில் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரில் பெரும் தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன.

ரஷ்யாவை பந்தாடும் உக்ரைன்.. ஓரே நேரத்தில் 3 அட்டாக்.. ஆடிப்போன புடின்..!!

உக்ரைன் இன்று செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரில் இருக்கும் பால்டிக் கடல் வழியாக ரஷ்யா கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நெட்வொர்க்-ஐ டார்கெட் ஆக வைத்து நடத்திய தாக்குதலில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

இந்த ட்ரோன் தாக்குதலில் ஏற்றுமதி முனையம் மீது மட்டும் அல்லாமல் எண்ணெய் சேமிப்பு கிடங்கு மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இந்த டிரோன் தாக்குதல் மூலம் மொத்த ஏற்றுமதி முனையும் தீ பற்றி எரிந்தது.

Also Read

இந்த ஏற்றுமதி நெட்வொர்க் மூலம் ரஷ்யா ஆண்டுக்கு 1.25 கோடி டன் வரை ஏற்றுமதி செய்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த தாக்குதலால் ரஷ்யா - அமெரிக்காவுக்குமான டீசல் சப்ளை பாதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அடுத்தாக ரஷ்யாவின் முன்னணி டெக் மற்றும் சமுக வலைத்தள நிறுவனமான VK-வின் டேட்டா சென்டர் மீது உக்ரைன் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. கடந்த வாரம் ரஷ்யாவின் கூகுள் என அழைக்கப்படும் Yandex நிறுவனத்திற்குச் சொந்தமாக 5 டேட்டா சென்டர்கள் மீது தாக்குதல் நடத்திய நிலையில் இன்று VK நிறுவனத்தின் டேட்டா சென்டர் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

Recommended For You

இன்று நடந்த தாக்குதலில் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் அருகே அமைந்துள்ள VK நிறுவனத்தின் டேட்டா சென்டர் மீது தாக்குதல் நடத்திய காரணத்தால் இதன் நெட்வொர்க் பாதிக்கப்பட்டு, இத்தளத்தை மக்கள் பயன்படுத்த முடியாத நிலை உருவானது.

கடந்த வாரம் அமெரிக்கா உடன் ஒப்பந்தம் செய்த பின் ரஷ்யா ராணுவம் உக்ரைன் மின் நிலையம் மீது தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக இன்று ரஷ்யாவின் லெனின்கிராட் என்னும் பகுதியில் இருக்கும் 330 கிலோவாட் திறன் கொண்ட வோஸ்டோச்னயா துணை மின் நிலையம் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது.

இன்றைய உக்ரைன் ராணுவத்தின் தாக்குதலால் எண்ணெய் ஏற்றுமதி, டிஜிட்டல் சேவைகள் மற்றும் மின்சார விநியோகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு டிரம்ப் எத்தகைய நடவடிக்கையை எடுப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஏற்கனவே இன்டலிஜென்ஸ் சேவை, ஆயுத கொள்முதல் சேவை நிறுத்தப்படும் என உக்ரைனுக்கு டிரம்ப் எச்சரித்த நிலையில் இதை உடனடியாக நிறைவேற்றுவாரா என கேள்வி எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+