அரசு ஊழியர்களுக்கு Work From Home.. இது வரமா? சாபமா..? சோகத்தில் டெல்லி மக்கள்..!

தேசிய தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் மோசமடைந்து வருவதைக் கருத்தில் கொண்டு டெல்லி அரசு அலுவலகங்களில் பாதிக்கு மேற்பட்டோர் வீட்டில் இருந்தே பணியாற்றுவார்கள் என்று சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் அறிவித்துள்ளார். மாசுபாட்டைக் குறைக்க, டெல்லி அரசு அரசு அலுவலகங்களில் வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டும் எனவும், எனவே, அரசு அலுவலகங்களில் 50% ஊழியர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்வார்கள் என்று அமைச்சர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.விதிமுறையை அமல்படுத்துவது குறித்து அதிகாரிகளுடனான கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று அவர் கூறினார்

முன்னதாக, காற்று மாசுபாடு காரணமாக, டெல்லி அரசு தனது அலுவலகங்கள் மற்றும் எம்சிடி அலுவலகங்களுக்கு அலுவலக நேரத்தை அறிவித்தது. டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் (MCD) அலுவலகங்களின் நேரம் காலை 8.30 முதல் மாலை 5 மணி வரையிலும், டெல்லி அரசு அலுவலகங்களின் நேரம் காலை 10 மணி முதல் மாலை 6.30 மணி வரையிலும் நிர்ணயிக்கப்பட்டது.

அரசு ஊழியர்களுக்கு Work From Home.. இது வரமா? சாபமா..? சோகத்தில் டெல்லி மக்கள்..!

டெல்லி மற்றும் தேசிய தலைநகர் மண்டலத்தில் (NCR) காற்றின் தரம் எச்சரிக்கையான நிலையில் உயர்ந்து உள்ளது. இது உடல்நலம் மற்றும் பாதுகாப்பு குறித்த கவலைகள் குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு 460 என்ற 24 மணி நேர சராசரி காற்றின் தரக் குறியீட்டை (AQI) பதிவு செய்தது. இது திங்களன்று பதிவு செய்யப்பட்ட 494 ஐ விடக் குறைவு ஆகும். ஆனால் இன்னும் 'Severe plus' வகைப்பாட்டில் உள்ளது. 401 மற்றும் 450 க்கு இடைப்பட்ட AQI 'severe' என்ற வகைப்பாட்டில் உள்ளது. இது 451 மற்றும் 500 "Severe plus" என வகைப்படுத்தப்படுகிறது இதன் அளவுகோல் 500 ஆக உள்ளது. எனவே, இந்த மாசுகளின் அளவுகள் எல்லா வயதினரையும் குறுகிய மற்றும் நீண்ட கால நோய்களுக்கு ஆளாக்குகின்றன என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (CPCB) தரவுகளின்படி, நகரின் AQI கடந்த ஏழு நாட்களில் ஆறு நாட்களில் கடுமையாக இருந்தது. ஞாயிற்றுக்கிழமை 441 ஆகவும், திங்கட்கிழமை 417 ஆகவும், நவம்பர் 15 ஆம் தேதி 396 ஆகவும், நவம்பர் 14 ஆம் தேதி 424 ஆகவும், நவம்பர் 13 ஆம் தேதி 418 ஆகவும் இருந்தது.

காற்றின் தர மேலாண்மை ஆணையம் (CAQM) டெல்லி என்சிஆருக்குக் கடுமையான மாசுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தரப்படுத்தப்பட்ட GRAP இன் நிலை 4 இன் கீழ் , அனைத்து கட்டுமானங்களையும் தடைசெய்து பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. வானிலை முன்னறிவிப்புகள் குறைந்தபட்சம் அடுத்த மூன்று நாட்களுக்கு நகரத்திற்கு சிறிது ஓய்வு தேவை என்று கூறியுள்ளனர். மேற்பரப்பு நிலை காற்று வலுப்பெற வாய்ப்பில்லை எனவும், பல நாட்களாக டெல்லியின் காற்றில் குவிந்துள்ள மாசுக்கள் எதையும் சிதறடிக்க வாய்ப்பில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+