டெல்லி: நாட்டிலேயே முதன்முறையாக டெல்லி விமான நிலையத்தில் மூன்று டெர்மினல்களை இணைக்கும் வகையில் ரயில் சேவை அதாவது ஏர் டிரெய்ன் (air train or automated people mover (APM)) சேவை கொண்டு வரப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 2027 ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்த ரயில் போக்குவரத்து தொடங்கும்.
இந்த ரயில் சேவை மூலம் டெல்லி விமான நிலையத்தின் டெர்மினல்கள் 3, 2 மற்றும் 1 ஆகியவற்றுக்கு இடையிலான பயணம் எளிதாகிவிடும் என சொல்லப்படுகிறது. இதற்காக டெல்லி சர்வதேச விமான நிலைய நிர்வாகம், விமான நிலையத்திற்குள் ரயில் போக்குவரத்தை நிறுவுவதற்கான ஒப்பந்த புள்ளிகளை கோரியுள்ளது.

இந்த ஒப்பந்த புள்ளியில் குறிப்பிட்டுள்ள தகவலின் படி, இந்த ஏர் டிரெய்ன் சேவை நான்கு நிறுத்தங்களை கொண்டிருக்கும். டெர்மினல் 1, டெர்மினல் 2 / டெர்மினல் 3, ஏரோ சிட்டி மற்றும் கார்கோ சிட்டி ஆகியவற்றை இணைக்கும் வகையில் நான்கு ரயில் நிறுத்தங்கள் அமைக்கப்பட உள்ளன.
இதற்காக 7.7 கிலோமீட்டர் தொலைவிலான வழித்தடத்தை கண்டறிந்துள்ளதாக டெல்லி சர்வதேச விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த ரயில் சேவை பயன்பாட்டுக்கு வரும்போது டெர்மினல்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்து என்பது நிறுத்தப்படும்.
டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் இந்த ஒப்பந்த புள்ளிகளை கோரும் பணி அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் முடிவடையும் என தெரிகிறது. நவம்பர் மாதத்தில் விமான நிலைய நிர்வாகம், விமான நிலையத்தினுள் முதல் ரயில் போக்குவரத்து சேவையை அமைக்க இருக்கும் நிறுவனத்தை இறுதி செய்ய இருக்கிறது.
நடப்பாண்டு இறுதிக்குள்ளாகவே பணி ஒப்பந்தத்தை வழங்குவதற்கு விமான நிலைய நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஒப்பந்தம் பெற்று பணிகள் தொடங்கினால் 2027 ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்த விமான நிலையத்திற்குள் ரயில் சேவை அமலுக்கு வரும்.
இந்த ரயில் சேவை அமலுக்கு வந்து விட்டால் பயணிகள் டெல்லி விமான நிலையத்தில் மூன்று முனையங்களுக்கு இடையே எளிதாகவும் வேகமாகவும் பயணிக்க முடியும்.
இந்தியாவிலேயே மிகவும் பரபரப்பான விமான நிலையமாக டெல்லி விமான நிலையம் இருக்கிறது. இங்கு ஒரு ஆண்டில் சுமார் 7 கோடி பயணிகள் வந்து செல்கின்றனர். அடுத்த 6 முதல் 8 ஆண்டுகளில் இது 13 கோடியாக அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது. இத்தனை பயணிகளும் விரைவாக விமான நிலையத்துக்குள் பயணிக்க ஏதுவாக இந்த ரயில் சேவை கொண்டு வரப்பட இருக்கிறது.
Story written by: Devika
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications