டெல்லி: பங்குச்சந்தையில் ஐபிஓ வெளியிட்ட ஒரு எஸ்எம்ஈ நிறுவனம், தாங்கள் எதிர்பார்த்ததை விட பல மடங்கு அதிக முதலீட்டு விருப்ப விண்ணப்பங்கள் வந்திருப்பதால் அதிர்ச்சி அடைந்துள்ளது. டெல்லியை தலைமை இடமாகக் கொண்ட வெறும் எட்டு ஊழியர்களை மட்டுமே கொண்டு செயல்படக்கூடிய ஒரு நிறுவனம் ஐபிஓ வெளியீடு மூலம் 12 கோடி ரூபாயை திரட்டுவதற்கு திட்டமிட்டு இருந்த நிலையில் எதிர்பாராத விதமாக அந்த நிறுவனத்திற்கு 4,700 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டுக்கான விண்ணப்பங்கள் கிடைக்க பெற்று இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரிசோர்ஸ்ஃபுல் ஆட்டோமொபைல் (resourceful auto mobile) என்ற நிறுவனம் டெல்லியை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் யமஹா நிறுவனத்தின் இரண்டு டீலர்ஷிப் ஷோரூம்களை நடத்தி வருகிறது.

எஸ்எம்ஈ ஐபிஓ பிரிவில் இந்த நிறுவனம் ஐபிஓ வெளியீட்டினை அறிவித்திருந்தது. இந்த ஐபிஓ மூலம் இந்த நிறுவனம் சுமார் 12 கோடி ரூபாயை திரட்டுவதற்கு திட்டமிட்டு இருந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக இந்த நிறுவனத்திற்கு 4,760 கோடி ரூபாய் மதிப்பிலான நிதி திரட்டும் வகையில் ஐபிஓ விண்ணப்பங்கள் கிடைக்க பெற்றுள்ளன.
அதாவது நிறுவனம் எதிர்பார்த்ததை விட 418 மடங்கு அதிகமான விண்ணப்பங்கள் கிடைத்துள்ளது. இந்த நிறுவனத்தின் ஐபிஓ ஆகஸ்ட் 29ஆம் தேதி மும்பை பங்குச்சந்தையில் பட்டியல் இடப்பட உள்ளது.
இந்த நிறுவனம் 2 டீலர்ஷிப் ஷோரூம் உடன் மொத்தம் எட்டு ஊழியர்களை மட்டுமே கொண்டு செயல்பட்டு வருகிறது. ஐபிஓ மூலம் திரட்டும் தொகை கொண்டு புதிய ஷோரூம்களை திறக்க இருப்பதாக இந்த நிறுவனம் கூறுகிறது.
இதனிடையே பல்வேறு முதலீட்டு நிபுணர்களும் இந்த நிறுவனத்தின் ஐபிஓவை தவிர்க்கும் படி அறிவுறுத்தியுள்ளனர். ஏனெனில் இந்த நிறுவனம் மிகவும் போட்டி நிறைந்த இருசக்கர வாகன டீலர்ஷிப் நிறுவனமாக செயல்படுகிறது. மேலும் இந்த நிறுவனத்தின் நிதி செயல்பாடுகள் குறிப்பிடத்தக்கவையாக இல்லை என்பதால் சில்லரை முதலீட்டாளர்கள் பெரிய அளவிலான தொகையை இதில் முதலீடு செய்வதை தவிர்க்குமாறு கூறுகின்றனர்.
இந்த நிறுவனத்தை பொருத்தவரை 2024 ஆம் ஆண்டு பிப்ரவரியுடன் முடிந்த ஆண்டில் இதன் வருமானம் 17.23 கோடி ஆகும் ,அதில் லாபம் 1.52 கோடி ஆகும். இதன் வருமானம் கடந்த ஆண்டை விட சுமார் 2 கோடி ரூபாய் குறைவு. இந்த நிறுவனத்தின் ஐபிஓ கணிசமான லாபத்தை தரும் என்ற நம்பிக்கையின் காரணமாகவே எதிர்பார்த்ததை விட 400 மடங்கு அதிகமான விண்ணப்பங்களை பெற்றிருப்பதாக சொல்லப்படுகிறது.
Story Written by: Devika
More From GoodReturns

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

டீ குடிக்கிற காசு போதும்!5 வருடத்தில் லட்சாதிபதி ஆக இந்த மேஜிக் கணக்கை பாருங்க!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

போர் பதற்றத்திலும் லாபம் தரும் பக்கா பிளான்! பங்குச்சந்தை வீழ்ச்சியில் நீங்கள் கவனிக்க வேண்டிய SIP!

HDFC பங்கினை வாங்க இது பொன்னான நேரமா? - பங்கு மதிப்பு சரிந்துள்ள நிலையில் நிபுணர்கள் டிப்ஸ்

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

மாதம் ரூ.4 லட்சம் சம்பளம் தரும் வேலையை விட்டு ரோட்டு கடை போட்ட டெக்கி..!! சாதித்தாரா? சறுக்கினாரா?

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications