டெல்லி யூனியன் பிரதேசத்தில் 70 உறுப்பினர்களை கொண்ட சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 5ம் தேதி நடந்தது. கடந்த சனிக்கிழமையன்று தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
மொத்தமுள்ள 70 இடங்களில் 48 இடங்களை பாஜக வென்றது. ஆளும்கட்சியாக தேர்தலை சந்தித்த ஆம் ஆத்மி 22 இடங்களை மட்டுமே வெற்றி பெற்றது. இதனையடுத்து 27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக டெல்லியை மீண்டும் கைப்பற்றியது. தலைநகரை கைப்பற்றியது பெரிய சந்தோஷமான விஷயம் என்றாலும், முதல்வராக யாரை தேர்ந்தெடுப்பது என்பது பாஜகவுக்கு தற்போது தலைவலியாக மாறியுள்ளது.

இதனால் டெல்லியின் புதிய முதல்வர் யார்?, முதல்வராக யார் தேர்வு செய்யப்பட போகிறார் என்பது குறித்து கவனம் திரும்பியுள்ளது. டெல்லி பாஜகவின் முன்னாள் தலைவர் மனோஜ் திவாரி, பர்வேஷ் வர்மா உள்ளிட்ட பல பாஜக தலைவர்கள் முதல்வர் பதிவிக்கு போட்டியிடுகின்றனர்.
அதேசமயம் கட்சி மேலிடம் பெண் முதலமைச்சரை தேர்வு செய்ய வாய்ப்புள்ளது ஊக செய்திகள் வெளியாகியுள்ளது. அதன்படி, கிரேட்டர் கைலாஷ் தொகுதியில் சவுரப் பரத்வாஜை தோற்கடித்த ஷிகா ராய் மற்றும் ஷாலிமார் பாக் தொகுதியில் பந்தனா குமாரியை தோற்கடித்த ரேகா குப்தா போன்ற பெண் தலைவர்களில் ஒருவரை முதல்வராக தேர்ந்தெடுக்கப்படலாம்.
டெல்லி முதல்வருக்கான போட்டியில் பல செல்வாக்குமிக்க தலைவர்கள் இருந்தாலும், அதில் அரவிந்த் கெஜ்ரிவாலை தோற்கடித்த பர்வேஷ் சர்மாவுக்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இவருக்கு பல விஷயங்கள் சாதகமாக உள்ளன. உதாரணமாக இவர் ஒரு ஜாட் தலைவர், தேர்தலின்போது பிரபலமான பிரச்சாரகர்களில் ஒருவராக இருந்தார். இதுதவிர இவரது தந்தை சாஹிப் சிங் வர்மாவும் முதல்வராக பணியாற்றியவர்.
பாஜக முதல்வர் வேட்பாளர்களில் மற்றொரு முக்கியமான தலை பவன் சர்மா. இவர் உத்தம் நகரிலிருந்து வெற்றி பெற்றவர். முதல்வருக்கான போட்டியில் இவரது பெயரும் அடிபடுகிறது. முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் அர்விந்தர் சிங் லவ்லி, தலித் தலைவர் ராஜ் குமார் சவுகான், பனியா சமூகத்தை சேர்ந்த விஜேந்தர் குப்தா ஆகியோரின் பெயர்களும் முதல்வர் ரேஸில் உள்ளன.
இந்த வாரம் நடைபெறும் பாஜக கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் தனது பரிந்துரைகளை முன்வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லி சட்டப்பேரவையின் புதிய சபாநாயகரை தேர்ந்தெடுப்பதையும், அமைச்சரவை உறுப்பினர்கள் பெயர்களையும் பாஜக இறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லியில் துணை முதல்வராக ஒருவரை நியமிப்பது குறித்தும் பாஜக பரிசீலிக்கும் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. என்னதான் முதல்வராக அவர் வருவார் அல்லது இவர் வருவார் என்று பல்வேறு கணிப்பகள் இருந்தாலும், பொதுவாக பாஜக முக்கிய பதவிகளுக்கு யாரும் எதிர்பாராத வண்ணம் புதிய நபரை தேர்ந்தெடுத்து அனைவருக்கும் ஆச்சரியத்தை கொடுக்கும். உதாரணமாக மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் முதல்வர்கள் தேர்வு மற்றும் குடியரச தலைவர் பதவிக்கு திரௌபதி முர்மு தேர்ந்தெடுக்கப்பட்டது ஆகியவற்றை குறிப்பிடலாம்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications