பிரபல கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானின் முன்னாள் மனைவியும், ஆஸ்திரேலிய ஃபிட்னஸ் இன்ஃப்ளூயன்ஸருமான ஆயிஷா முகர்ஜி, சுமார் AU $894,397 (இந்திய மதிப்பில் ரூ5.7 கோடி) பணத்தை ஷிகார் தவானுக்கு திருப்பிக் கொடுக்க டெல்லி பாட்டியாலா ஹவுஸ் குடும்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அச்சுறுத்தல்கள், பணம் பறித்தல், ஏமாற்றுதல் போன்ற மோசடிச் செயல்களில் ஆயிஷா முகர்ஜி ஈடுபட்டதாக டெல்லி நீதிமன்றம் கூறியுள்ளது.
ஷிகர் தவான் மற்றும் ஆயிஷா முகர்ஜிக்கு திருமணம் நடந்து இருவரும் விவாகரத்து பெற்றனர். அப்போது ஆஸ்திரேலிய நீதிமன்றம் ஷிகர் தவானின் சொத்துக்களில் இவருக்கு செட்டில்மெண்ட் செய்ய உத்தரவிட்டது. அது செல்லாது என டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு தந்துள்ளது. தவானுக்கும் ஆயிஷாவுக்கும் இடையிலான நிதி உடன்படிக்கைக்கு வழிவகுத்த ஆவணங்கள் செல்லாது என நீதிமன்றம் அறிவித்தது. மேலும், வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட தேதியிலிருந்து முழுமையாக பணம் செலுத்தப்படும் வரை, இத்தொகைக்கு ஆண்டுக்கு 9% வட்டி செலுத்தவும் உத்தரவிட்டுள்ளது.

'பார் அண்ட் பென்ச்’ அறிக்கையின்படி, 2024 பிப்ரவரி மாதம் ஆஸ்திரேலிய நீதிமன்றம், தவானின் இந்திய நிதி, சொத்துகள் உட்பட, உலகளாவிய சொத்துப் பிரிவில் ஆயிஷாவுக்கு AU$1.17 மில்லியன் மதிப்புள்ள சொத்துகளைத் தக்கவைத்ததோடு, கூடுதலாக 15% சொத்துகளும், தவான் செலுத்த வேண்டிய AU$2.5 மில்லியனும் வழங்க ஆணையிட்டது.
ஆஸ்திரேலிய நீதிமன்றம் சொத்தை ஆயிஷாவுக்கு மாற்றித் தருமாறும், தவறினால் கடும் விளைவு ஏற்படும் என கூறியது. இந்நிலையில் ஷிகர் தவான் டெல்லி நீதிமன்றத்தில், 2012-ல் திருமணமான உடனேயே, தனது மனைவி தனக்கு எதிராக "புனையப்பட்ட, அவதூறான, பொய்யான" தகவல்களைப் பரப்பி தனது நற்பெயரையும், கிரிக்கெட் வாழ்க்கையையும் அழித்துவிடுவேன் என்று மிரட்டத் தொடங்கியதாக 'வாதிட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய நீதிமன்றம் கணக்கிட்ட தொகையானது இந்தியச் சட்ட விதிகளுக்கும், இந்து திருமணச் சட்டத்திற்கும் முரணானது என்று ஷிகர் தவான் வாதிட்டார். ஆஸ்திரேலிய நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளுக்குத் தான் கட்டுப்படவில்லை என அறிவிக்கக் கோரி அவர் முறையிட்டார்.
வழக்கை விசாரித்த டெல்லி குடும்ப நீதிமன்றம், தவானின் வாதங்களை ஏற்றுக்கொண்டு, ஆஸ்திரேலிய நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அவர் கட்டுப்பட்டவர் அல்ல என்று அறிவித்தது. நாட்டில் வெளிநாட்டு நீதிமன்றத்தின் சொத்துத் தீர்வு தொடர்பான தீர்ப்புகள் அவருக்கு எதிராகச் செயல்படுத்தப்படாது எனக் கூறி, அவற்றை ரத்து செய்தது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications