டெல்லி அரசு 10 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட டீசல் வாகனங்களுக்கு எரிபொருள் (டீசல்) வழங்கக் கூடாது என்ற கடுமையான முடிவை முன்னதாக அறிவித்திருந்தது. ஆனால், இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியையையும், குழப்பங்களையும் ஏற்படுத்தியது. இந்நிலையில், பல மாதங்களுக்கு பிறகு, இந்தக் கட்டுப்பாட்டை அரசு பகுதியளவில் திரும்பப் பெற்றுள்ளது. இதனால், இனி சில விசேஷமான நிலைகளில் பழைய டீசல் வாகனங்களுக்கும் மீண்டும் எரிபொருள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுதொடர்பான முழுமையான விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எரிபொருள் தடை விதிக்கு பின்னணி என்ன..?: பாஜக அரசு சார்பில் 2015ஆம் ஆண்டு தேசிய பசுமை தீர்ப்பாயம் (National Green Tribunal - NGT) வழி, டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள NCR பகுதியில் காற்றுப் மாசை கட்டுப்படுத்தும் நோக்கில் ஒரு முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, 10 ஆண்டுகளை கடந்த டீசல் வாகனங்கள், 15 ஆண்டுகளை கடந்த பெட்ரோல் வாகனங்களுக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டது.

இந்தக் கட்டுப்பாடு பல ஆண்டுகளாக அமலிலும் இருந்தது. ஆனால், 2025இல், டெல்லி அரசு இதை மேலும் கடுமையாக்க, இந்த விதிகளுக்குள் வரும் வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கவே கூடாது என அறிவித்தது. இந்த நடவடிக்கை பல வாகன ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்களிடையே கடுமையான எதிர்ப்பையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியது. இதன் காரணமாக, தற்போது அரசு இந்த கடுமையான கட்டுப்பாட்டை திரும்பப் பெறும் முடிவை எடுத்துள்ளது.
வாகனங்களை விற்றவர்களுக்கு ஏமாற்றம்: டெல்லி அரசு பழைய வாகனங்களுக்கு விதித்த கடுமையான எரிபொருள் தடையால், பலரும் தங்களது பழைய வாகனங்களை விற்பனை செய்தனர். அதிலும் விலையுயர்ந்த சொகுசு கார்களை வெறும் ரூ.2 லட்சத்திற்கு எல்லாம் விற்பனை செய்தனர். அதைவிட மோசமாக, தங்களுக்குப் பிடித்த கார்களை பணியாளர்கள் பறிமுதல் செய்வதைக் கூட பார்த்தனர். இந்த நிலைமை மக்கள் மனதில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் உச்சகட்ட எதிர்ப்புகள் பதிவானதைத் தொடர்ந்து, அரசு தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்துள்ளது. ஆனால், இதன் விளைவாக தற்போது தங்கள் வாகனங்களை இழந்தவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
நிபந்தனைகளை பூர்த்தி செய்தால் மீண்டும் பழைய கார்: பழைய டீசல் வாகனங்களுக்கான எரிபொருள் தடையை டெல்லி அரசு திரும்பப் பெற்ற நிலையில், வாகனங்களை இழந்த உரிமையாளர்களுக்கு தற்போது ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. வாகனம் இன்னும் ஸ்க்ராப் (scrapped) செய்யப்படாதிருந்தால், அதனை மீண்டும் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. டெல்லி போக்குவரத்து துறை வெளியிட்ட புதிய அறிவிப்பின்படி, "வாகனம் ஸ்க்ராப் செய்யப்படாமல் இருந்தால், உரிய பரிசோதனைகளில் வாகனம் தேர்ச்சி பெறுமானால், உரிமையாளர் அதனை மீட்பதற்கான விண்ணப்பத்தை பதிவு செய்யலாம்.
என்னென்ன பரிசோதனைகள்..?: * வாகனத்தின் பராமரிப்பு நிலை
* மாசு கட்டுப்பாட்டு சான்று
* வாகன பதிவு விவரங்கள்
* தொழில்நுட்ப பரிசோதனை
உங்கள் வாகனத்தை மீட்க வேண்டுமா..?: டீசல் வாகனங்களுக்கான தடைச் சட்டத்தில் ஏற்பட்ட மாற்றத்தை அடுத்து, சில வாகன உரிமையாளர்கள் தங்களது பழைய கார்களை மீண்டும் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை பெற முடிந்துள்ளது. ஆனால், இது சில நிபந்தனைகள் மற்றும் சோதனைகளுக்கு உட்பட்டதாகும்.
முதலில் டெல்லி போக்குவரத்து துறை இணையதளம் அல்லது வாஹன் (Vahan) போர்டல்-ஐ அணுக வேண்டும். அதில், உங்கள் வாகன எண்ணை உள்ளீடு செய்து அதன் நிலையை சரிபார்க்கவும். உங்கள் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு ஒரு யார்டில் நிறுத்தப்பட்டிருக்க (மட்டுமே) வேண்டும். ஸ்க்ராப் செய்யப்படாதிருக்க வேண்டும். லீலா விற்பனை செய்யப்படாதிருக்க வேண்டும். மீட்பு (release) கோரிக்கையை ஆர்டிஓ அலுவலகம் அல்லது அமலாக்க அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். பின்னர், பார்க்கிங் அல்லது யார்டு கட்டணங்களை செலுத்த வேண்டும். பின்னர், வாகனத்தை பிட்னஸ் மற்றும் மாசு கட்டுப்பாட்டு சோதனைக்கு உட்படுத்த வேண்டும். இதில் தேர்ச்சி பெற்றால், உங்கள் பழைய வாகனம் மீண்டும் உங்களிடம் ஒப்படைக்கப்படும். ஆனால், இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இதெல்லாம் ஒரு வாய்ப்பு மட்டுமே. உறுதி கிடையாது. அரசு தரப்பிலும், அதிகாரிகள் தரப்பிலும் இறுதி முடிவு இருக்கும்.
ஏற்கனவே வாகனத்தை விற்றுவிட்டீர்களா?: வாகனத்தை டெல்லிக்கு வெளியே உள்ளவர்களுக்கு விற்றிருந்தால், அது ஸ்க்ராப் செய்யப்படவில்லையா..? அல்லது பதிவு நீக்கப்படவில்லையா..? என்பதைக் கண்டறியுங்கள். அப்படி இருந்தால், அந்த வாகனத்தை மீண்டும் வாங்குவதற்கான கோரிக்கையை வைக்கலாம். பிறகு, புதிய விதிகளின்படி டெல்லியில் மறுபதிவு செய்யும் முயற்சியும் மேற்கொள்ளலாம். ஆனால், அனைத்து வாகனங்களுக்கும் இது பொருந்தாது. சில வாகனங்கள் தேர்ச்சி பெறவில்லை என்றால், அவை ஸ்க்ராப் செய்யப்படலாம்.
More From GoodReturns

நிர்மலா சீதாராமன் எடுத்த 10 ரூபாய் முடிவு.. அடுத்தடுத்து சிக்கல் காத்திருக்கு.. என்னதான் தீர்வு?

பெட்ரோல், டீசல் விலை குறையாது..? மத்திய அரசின் 10 ரூபாய் விலை குறைப்பு பின் இருக்கும் உண்மை..!!

பெட்ரோல், டீசல் விலை குறையுமா? அதிரடியாக வரியை குறைத்த மத்திய அரசு!! வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்!!

பெட்ரோல், டீசல் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை மாறுமா? மதிப்பாய்வு முறையை மாற்றிய அரசு

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications