இந்தியாவில் குயிக் காமர்ஸ் துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. முதலில் உணவுப் பொருட்கள் டெலிவரி செயலிகள் பயன்பாட்டுக்கு வந்து மக்களிடையே நன்றாக பிரபலமடைந்தன. இதனை அடுத்து மளிகை பொருட்களை டெலிவரி செய்யும் செயலிகள் பயன்பாட்டுக்கு வந்தன . தற்போது மருந்து பொருட்களை டெலிவரி செய்யும் ஒரு செயலிலும் பயன்பாட்டுக்கு வந்து மக்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது.
டெல்லியை சேர்ந்த ரஜத்குமார் ஜனவரி மாதம் Repill என்ற செயலியை தொடங்கினார். டெல்லியை அடிப்படையாகக் கொண்டு தொடங்கப்பட்டது இந்த ஆன்லைன் மருந்து டெலிவரி செயலி, உணவு டெலிவரி செயலிகளை போலவே செயல்படுகிறது. இந்த செயலி வாயிலாக நாம் நம்முடைய பிரிஸ்கிரிப்ஷனை அப்லோட் செய்து விட்டு நமக்கு தேவையான மருந்துகளை 60 நிமிடங்களுக்குள் பெற்றுக் கொள்ளலாம்.

சில சமயங்களில் குறிப்பிட்ட பிராண்டு மருந்துகள் குறிப்பிட்ட மருந்து கடைகளில் தான் கிடைக்கும். ஆனால் இந்த டெலிவரி செயலி வாயிலாக அது எந்த பகுதியில் இருந்தாலும் உங்களை வந்து சேர்ந்துவிடும் என ரஜத் தெரிவிக்கிறார். ஒரு பயனர் தனக்கு தேவையான மருந்து குறித்த விவரங்களை உள்ளீடு செய்தவுடன் இந்த செயலியானது ஒன்பது கிலோ மீட்டருக்குள் இருக்கும் மருந்தகங்களில் இந்த மருந்துகள் இருக்கின்றனவா என ஆய்வு செய்யும்.
மருந்து இருப்பது உறுதி செய்யப்பட்டது அந்த ஆர்டர் ப்ராசஸ் செய்யப்பட்டு 60 நிமிடங்களுக்குள் தங்களுடைய டெலிவரி பார்ட்னர்கள் வழியாக வாடிக்கையாளர்களை சென்று சேர்ந்து விடும். குவாலியரில் இருக்கும் சிந்தியா பள்ளியில் பள்ளி படிப்பு முடித்த ரஜத் குப்தா ஸ்காலர்ஷிப் பெற்று அமெரிக்கா சென்று கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் முதுநிலை பட்டப்படிப்பை முடித்தார். அவருக்கு அமெரிக்காவிலேயே வேலை கிடைத்தது.
ஆண்டுக்கு ஒன்றரை கோடி ரூபாய் சம்பளத்தில் மிகப்பெரிய நிறுவனத்தில் வேலை செய்து வந்த இவர் எட்டு ஆண்டுகளாக தான் பார்த்து வந்த வேலையை விட்டுவிட்டு தாயகம் திரும்பினார். அப்போது இந்தியா வந்த அவருக்கு இந்தியாவில் உணவு , மளிகை பொருட்கள் ஆகியவை ஆர்டர் செய்தவுடன் கிடைக்கின்றன. ஆனால் உயிர் காக்கும் மருந்துகள் அப்படி கிடைப்பதில்லை என்பதை அறிந்த அவர் ரீபில் என்ற செயலியை உருவாக்க தொடங்கினார்.
12 பேரை வேலைக்கு நியமனம் செய்து ரீபில் செயலியை கடந்த ஜனவரி மாதம் இவர் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். தற்போது வரை இவருடைய நிறுவனம் 500க்கும் மேற்பட்ட டெலிவரி செய்துள்ளது. கூடிய விரைவில் பெங்களூரு மற்றும் மும்பை ஆகிய நகரங்களுக்கும் விரிவாக்கம் செய்ய இருப்பதாக கூறும் அவர், இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களுக்கும் இந்த செயலியை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே தன்னுடைய நோக்கம் என தெரிவித்து இருக்கிறார்.
More From GoodReturns

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!



Click it and Unblock the Notifications