இந்தியாவின் ஐடி தலைநகரான பெங்களூரை கடுமையாகப் பாதித்த தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சனை தற்போது தலைநகர் டெல்லியிலும் தலைதூக்கியுள்ளது. இந்த தண்ணீர் பிரச்சனை பெங்களூரைப் புரட்டிப்போட்டது மட்டும் அல்லாமல் மக்களையும், முதலீட்டையும் வேறு மாநிலத்திற்குக் கொண்டு செல்லும் அளவுக்கு நிலைமை மாறியுள்ளது.
இந்த நிலையில் டெல்லியில் குளிப்பதற்கும், குடிப்பதற்கும் போதுமான தண்ணீர் கிடைக்காததால் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். ஷாஹதாரா பகுதியில் (Shahdara) உள்ள விஸ்வாஸ் நகர் (Vishwas Nagar) பகுதிவாசிகள் தண்ணீர் தட்டுப்பாடு குறித்து புகார் தெரிவித்துள்ளனர்.

இப்பகுதி குடியிருப்பாளர் ஒருவர் செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில், "எங்களுடைய அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூட தண்ணீர் இல்லை, அவ்வப்போது பக்கத்து வீட்டாரிடம் இருந்து தண்ணீர் வாங்க வேண்டிய நிலை உள்ளது. குழந்தைகளை குளிப்பாட்ட கேன் தண்ணீரை ஆர்டர் செய்ய வேண்டியுள்ளது" என்று வேதனை தெரிவித்தார்.
மற்றொரு குடியிருப்பாளர், "காலை நேரத்தில் 10 நிமிடங்களுக்கு மேல் தண்ணீர் வரவு இல்லை, மாலையில் தண்ணீர் கிடைப்பதே இல்லை" என்று மோசமான தண்ணீர் விநியோகத்தைப் பற்றி பேசினார்.
15 ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீர் விநியோகம் சீராக இருந்தது, ஆனால் இப்போது நிலைமை மோசமாகிவிட்டது என்று மற்றொரு குடியிருப்பாளர் கவலை தெரிவித்தார். "காலை 4 மணி, 5 மணி அளவில் சில சமயங்களில் தண்ணீர் கிடைக்கிறது, சில நேரங்களில் கிடைக்கவே இல்லை. வீட்டு வேலைகளைச் செய்யத் தண்ணீர் டேங்கர்களை ஆர்டர் செய்ய வேண்டிய நிலை உள்ளது" என்று அவர் கூறினார்.
தண்ணீர் தட்டுப்பாடு குறித்து 10க்கும் மேற்பட்ட புகார்கள் எழுத்துப்பூர்வமாக அளிக்கப்பட்டுள்ளன, ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை என்று இப்பகுதி மக்கள் டைம்ஸ் பத்திரிக்கையிடம் தெரிவித்தனர்.
மக்கள் புகார்கள் அளித்த பிறகு, டெல்லி ஜல் நிர்வாக அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று கடந்த இரண்டு மாதங்களில் இந்த பகுதிக்குத் தினசரி 20,000 முதல் 35,000 லிட்டர் வரை தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.
தண்ணீர் விநியோகத்தில் எந்த பிரச்சனையும் இல்லை என்று டெல்லி ஜல் நிர்வாக அதிகாரிகள் கூறினாலும், அங்கீகரிக்கப்படாத காலணிகளில் குடிநீர் குழாய்களில் சட்டவிரோதமாகத் தண்ணீர் எடுப்பது தண்ணீர் விநியோகத்தைப் பாதிக்கிறது என்பதை விளக்கியுள்ளனர்.
டெல்லி நிர்வாகம் இந்த பிரச்சினையை உடனடியாக கவனித்து, தண்ணீர் விநியோகத்தைச் சீராக்க வேண்டியது அவசியம். இல்லையெனில், எதிர்காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு மேலும் தீவிரமடையக்கூடும் என மக்கள் கூறினாலும், டெல்லி நகரின் பல இடத்தில் தண்ணீர் பிரச்சனை இருப்பதாக மக்கள் கூறி வருகின்றனர்.
இந்த பிரச்சனை தீவிரமானால் கட்டாயம் பெங்களூர் போலத் தலைப்பு செய்தியாக மாறலாம்.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications