அனில் அம்பானி இந்தியா மற்றும் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் சகோதரர். ஒரு காலத்தில் இந்தியாவில் மிகப்பெரிய அளவில் கோலோச்சி வந்த பெரும் பணக்காரர் மற்றும் தொழிலதிபர்.
ஆனால் தொழில் வீழ்ச்சி அடைந்து தற்போது பொது நிகழ்ச்சிகளில் கூட அவர் கலந்து கொள்வதில்லை. தற்போது டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவு மூலம் அவருக்கு மேலும் ஒரு சிக்கல் எழுந்துள்ளது.

அனில் அம்பானி: ரிலையன்ஸ் என்ற தொழில் சாம்ராஜ்யத்தை இந்தியாவில் நிறுவிய திருபாய் அம்பானியின் மகன்கள் அனில் அம்பானி மற்றும் முகேஷ் அம்பானி. இவர்களில் தற்போது முகேஷ் அம்பானி தொழிலில் கொடி கட்டி பறக்கிறார்.
இந்தியாவின் பணக்காரர் பட்டியலில் முக்கிய இடத்தில் இருக்கிறார். இவரது சகோதரர் அனில் அம்பானியும் ஒரு காலத்தில் இதே செல்வாக்குடன் இருந்தவர் தான். அனில் அம்பானி உலகின் ஆறாவது பெரிய பணக்காரராக இருந்தவர்.
அவரது சொத்து மதிப்பு 1.83 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இருந்தது. ஒரு வணிக சாம்ராஜ்யத்தையே அவர் நிறுவியிருந்தார். ஆனால் பின்னாளில் அது பெரும் வீழ்ச்சி கண்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு அனில் அம்பானி திவாலாகி விட்டதாக அறிவித்தார்.
டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு: அனில் அம்பானி தனது ரிலையன்ஸ் இம்ப்ராஸ்ட்ரக்ச்சர் நிறுவனத்தின் 1100 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை விற்பனை செய்யவோ அல்லது மாற்றவோ அல்லது பிணையாக வைக்கவோ டெல்லி உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
2008ஆம் ஆண்டு சீன நிறுவனமான ஷாங்காய் எலெக்ட்ரிக் குழுமத்துக்கும் ரிலையன்ஸ் இன்ஃபிராஸ்ட்ரக்ச்சருக்கும் இடையே சசான் மின் திட்டம் தொடர்பான உபகரணங்கள் வழங்குவது என ஒப்பந்தம் போடப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் ரிலையன்ஸ் இன்ஃபிராஸ்ட்ரக்ச்சர் செயல்படவில்லை என ஷாங்காய் எலெக்ட்ரிக் குழுமம் வழக்கு தொடர்ந்தது. இதனை அடுத்து சிங்கப்பூர் நீதிமன்றம் அனில் அம்பானியின் நிறுவனம் 146 மில்லியன் டாலர்களை இழப்பீடாக ஷாங்காய் நிறுவனத்துக்கு வழங்க உத்தரவு பிறப்பித்தது.
சிங்கப்பூர் நீதிமன்றம் தீர்ப்பின் படி வழங்க வேண்டிய தொகையில் இடைக்கால நிவாரணமாக ஒரு தொகையை வழங்க கோரி ஷாங்காய் நிறுவனம் தொடர்ந்த வழக்கினை 2022ஆம் ஆண்டு தனி நீதிபதி விசாரித்தார். அதில் ஷாங்காய் நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்க மறுத்தார்.
இந்த சூழலில் ஷாங்காய் நிறுவனம் தொடர்ந்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், அனில் அம்பானியின் நிறுவனம், 1100 கோடிக்கு மேல் மதிப்புள்ள சொத்துக்களை பத்திரமாக வைத்திருக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது . அதாவது அந்த சொத்தினை விற்கவோ அல்லது மாற்றவோ தடை விதித்துள்ளது. இதனால் அனில் அம்பானிக்கு பிரச்னையை சுமூகமாக தீர்ப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
Story Written by: Devika
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications