அஜய் சிங் தலைமையிலான பட்ஜெட் விமான சேவை நிறுவனமான ஸ்பைஸ்ஜெட்-க்கு ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் முன்னாள் உரிமையாளரான சன் குழுமத்தின் கலாநிதி மாறனுக்கு 380 கோடி ரூபாய் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது மட்டும் அல்லாமல் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் சொத்துகள் குறித்த விபரத்தை நான்கு வாரங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பு ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்திற்கு ஒரு பின்னடைவாகும்.

ஸ்பைஸ்ஜெட் மற்றும் அதன் குத்தகைதாரர்களுக்கான பேமெண்ட் குறித்த பிரச்சனைக்கு மத்தியில், டிசம்பர் காலாண்டில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் வர்த்தகம் அதிகரித்து நான்கு மடங்கு வருவாய் அதிகரித்துள்ளது. இதன் மூலம் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் வருவாய் டிசம்பர் காலாண்டில் 106.8 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
கலாநிதி மாறன் குடும்பத்திற்கும், ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் தற்போதைய ப்ரோமோட்டர் அஜய் சிங் மற்றும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கும் இடையே இருக்கும் ஒப்பந்த விதிமுறைகள் தொடர்பாக நீண்ட காலமாக நடந்து வரும் வழக்கின் விசாரணையில் மே 29, 2023 அன்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கலாநிதி மாறன் 2017 ஆம் ஆண்டில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் மீது வழக்குத் தொடர்ந்தார், இந்த வழக்கு ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் கலாநிதி மாறனுக்கும், அவருடைய KAL ஏர்வேஸ் நிறுவனத்திற்கும் ஒப்பந்தத்தின் படி வழங்க வேண்டிய convertible warrants மற்றும் preference shares வழங்க தவறியதன் மூலம் நஷ்டத்தை ஏற்பட்டு உள்ளதாக குற்றம் சாட்டினார்.
இந்த வழக்கிற்கு பின்பு ஸ்பைஸ்ஜெட், கலாநிதி மாறன் மற்றும் KAL ஏர்வேஸ் நிறுவனத்திற்கும் சேர வேண்டிய அசல் தொகையான 579.08 கோடியை செலுத்தியது, ஆனால் இத்தொகைக்கான வட்டிப் பகுதி நிலுவையில் இருந்தது.
நிலுவையில் இருக்கும் வட்டி தொகை 2020 அக்டோபர் மாதம் 242 கோடி ரூபாயாக இருந்தது. இது பிப்ரவரி 2023 ல் 362 கோடியாகவும், தற்போது 380 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. இந்த தொகையை தான் உடனடியாக வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications