டெல்லி-யில் பிப்ரவரி 16 முதல் 20 வரை நடைபெறவுள்ள இந்தியா AI இம்பாக்ட் சம்மிட் 2026 (India AI Impact Summit 2026) காரணமாக ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் ரூம் கட்டணம் வானத்தை தொடும் அளவுக்கு உயர்ந்துள்ளன.
உலகின் முன்னணி தொழில்நுட்பத் தலைவர்கள், AI நிறுவனங்களின் CEOக்கள், அரசு அதிகாரிகள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான சர்வதேச தொழில்நுட்ப தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள இருப்பதால், டெல்லியில் ஹோட்டல் ரூம் தேவை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
இதனால் சில சொகுசு ஹோட்டல்களில் ரூம்களின் கட்டணம் ஒரு இரவுக்கு ரூ.30 லட்சத்திற்கு மேல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது சாதாரண நாட்களை விட 10-15 மடங்கு அதிகம் என்பது தான் டெல்லி மக்கள் மத்தியில் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது.

ஏன் இவ்வளவு விலை உயர்வு?
இந்த மாநாடு உலக அளவில் AI தொழில்நுட்பத்தின் எதிர்காலத்தை விவாதிக்கும் மிக முக்கியமான நிகழ்வு என்பதால் இந்தியா முழுவதும் இருக்கும் தொழில்நுட்ப தலைவர்களும், டெக் வல்லுனர்களும் கலந்துக்கொள்ள உள்ளனர். மேலும் இந்திய ஐடி சேவை துறை கடந்த 3 நாட்களில் 2.5 லட்சம் வரையிலான சந்தை மதிப்பை இழந்திருக்கும் இந்த வேளையில் இக்கூட்டம் டெக் துறைக்கு முக்கியமானதாக மாறியுள்ளது.
இந்த கூட்டத்தில் கூகுள் CEO சுந்தர் பிச்சை, ஓபன்ஏஐ CEO சாம் ஆல்ட்மேன் போன்ற உலகின் பெரிய தொழில்நுட்பத் தலைவர்கள் கலந்துகொள்ள இருப்பதால், டெல்லி நகரில் உள்ள சொகுசு ஹோட்டல்களில் இடம் கிடைப்பது மிக கடினமாகியுள்ளது.
டெல்லிக்கும் வரும் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் காரணத்தால் ஹோட்டல் ரூம் தேவை அதிகமாக இருக்க, அறைகள் குறைவாக இருப்பதால் supply and demand பிரச்சனை உருவாகி ஹோட்டல்கள் ரூம் கட்டணம் உயர்ந்துள்ளன. பெரும்பாலான ஹோட்டல்கள் முன்கூட்டியே முழுமையாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த கூட்டத்தில் கலந்துக்கொள்வதற்காக நிறுவனங்கள், அரசுகள், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யும் அமைப்புகள் என பலர் ஹோட்டல்களில் முழு தளங்களையே முன்பதிவு செய்துள்ளனர்.

எந்தெந்த ஹோட்டல்களில் எவ்வளவு விலை?
டெல்லியின் தாஜ் பேலஸ் ஹோட்டலில் ஒரு கார்டன் லக்சரி சூட் (Garden Luxury Suite) பிப்ரவரி 16-20 காலகட்டத்தில் ஒரு இரவுக்கு ரூ.27.55 லட்சம் என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் வரி சேர்த்தால் மொத்தம் சுமார் ரூ.32 லட்சத்தை தொடுகிறது.
சாதாரண நாட்களில் (பிப்ரவரி 13-14) அதே அறை ரூ.2 லட்சத்திற்கு கிடைக்கிறது-இது 15 மடங்கு உயர்வு.
இதேபோல அன்டாஸ் டெல்லி (Andaz Delhi) போன்ற ஹோட்டல்களில் சில சூட்கள் ரூ.4 லட்சத்திற்கு மேல் விலைக்கு உள்ளன. லீலா பேலஸ், ITC மவுர்யா, ஷாங்க்ரி-லா எரோஸ் போன்ற பிற ஐந்து நட்சத்திர ஹோட்டல்களும் இதே போன்ற விலை உயர்வை காட்டுகின்றன. சில இடங்களில் ரூ.5 லட்சத்தை தாண்டியுள்ளன.
மேலும் டெல்லி சுற்றுவட்டாரத்தில் இருக்கும் பெரும்பாலான ஹோட்டல்கள் 90-95% ரூம்கள் புக் செய்யப்பட்டு உள்ளன அல்லது முழுமையாக புக் செய்யப்பட்டு உள்ளது.
டெல்லி மட்டுமல்ல, NCR பகுதியும் பாதிப்பு
டெல்லி மட்டுமல்ல, நொய்டா, குர்கான் உள்ளிட்ட NCR பகுதி ஹோட்டல்களும் கிட்டத்தட்ட முழுமையாக புக் செய்யப்பட்டு உள்ளன. சில விருந்தினர்கள் மாநாட்டுக்குப் பிறகு ஜிம் Jim Corbett அல்லது முக்தேஷ்வர் போன்ற அருகிலுள்ள இடங்களில் ஓய்வு எடுக்க திட்டமிடுகின்றனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் நடுத்தர வகை ஹோட்டல்களுக்கும் தேவை அதிகரித்துள்ளது.
இந்த AI Impact Summit 2026 டெல்லியின் ஹோட்டல் துறைக்கு பெரிய ஜாக்பாட் ஆக மாறியுள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications