லஸ்ஸி விற்பனையில் மாதம் இவ்வளவு வருமானமா? வியக்க வைக்கும் டெல்லி இளைஞர்..!!

நாம் வாழ்வில் எவ்வளவு பெரிய துயரங்கள் வந்தாலும், விடாமுயற்சி இருந்தால் அதை எல்லாம் கடந்து வந்து சாதிக்க முடியும் என்பதற்கு டெல்லியில் லஸ்ஸி விற்பனை செய்யும் ஒரு இளைஞர் முன் உதாரணமாக மாறியுள்ளார். சமூக வலைதளங்களில் இவரது வளர்ச்சி தான் பிரம்மிக்க வைக்கும் விஷயமாக நெட்டிசன்களால் பார்க்கப்படுகிறது.

உபென் வர்மா (Upen Verma) என்பவர் இன்ஸ்டாவில் பிரபலமானவர். இவர் ஒரு லஸ்ஸி விற்பனையாளரை நேர்காணல் செய்து வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். இதன்படி அந்த இளைஞர் சிறிய வயதிலேயே தனது தந்தையை இழந்தவராம். என் தந்தை இறந்தபோது, எங்களிடம் தங்குவதற்கு ஒரு வீடு கூட இல்லை என உருக்கமாக கூறும் அந்த நபர், வறுமையின் காரணமாகவே தனது தந்தை உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார்.

லஸ்ஸி விற்பனையில் மாதம் இவ்வளவு வருமானமா? வியக்க வைக்கும் டெல்லி இளைஞர்..!!

தந்தையின் மறைவுக்கு பிறகு, குடும்பத்தின் மொத்த பொறுப்பும் அந்த 11 வயது சிறுவனின் தோள்களில் விழுந்தது. அன்றாட வாழ்க்கையை நடத்த மிக இளம் வயதிலேயே கடின உழைப்பை போட வேண்டிய கட்டாயத்திற்கு அவர் தள்ளப்பட்டார். தந்தை உயிரோடு இருந்தபோது ஒரு நாளைக்கு 250 ரூபாய் வருமானம் கிடைத்து வந்த நிலையில், அவர் இல்லாத சூழலில் குடும்பத்தை வழிநடத்த வேண்டியது பெரிய சவாலாக இருந்ததாம். எனவே லஸ்ஸி கடை போட்டாரம்.

தனது கடின உழைப்பை நிறுத்தாமல் தொடர்ந்த அவர், இன்று டெல்லியில் லஸ்ஸி விற்பனை செய்து மாதத்திற்கு 80,000 முதல் 90,000 ரூபாய் வரை வருமானம் ஈட்டுகிறார். தனது உழைப்பின் பலனாக, அவர் தனது உடன்பிறந்தவர்களின் திருமணங்களை நடத்தி முடித்துள்ளார். தற்போது சொந்தமாக வீடும் வைத்துள்ளார். உத்தர பிரதேசத்தில் தனது குடும்பத்திற்காக அழகான இரண்டு அடுக்கு மாடி வீட்டை கட்டியுள்ளார்.

Also Read

வாழ்க்கையில் தோல்வியடைந்துவிட்டதாக நினைப்பவர்களுக்கு "என் நண்பர்களே, அப்படி எதுவும் இல்லை. கடினமாக உழையுங்கள். உழைப்பதை நிறுத்தாதீர்கள், கடவுள் நிச்சயம் உங்களுக்கு அருள் புரிவார். ஒரு நாள் நீங்கள் நிச்சயமாக வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைவீர்கள்" என அவர் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

இந்த நேர்காணலை வெளியிட்ட உபென் வர்மா, தான் இதுவரை பதிவு செய்த நேர்காணல்களில் இது மிகவும் வியக்கத்தக்க அனுபவம் என்று குறிப்பிட்டுள்ளார். வெற்றியை தீர்மானிப்பது மன உறுதி மட்டுமே என்பதை இந்த லஸ்ஸி விற்பனையாளரின் கதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. ஏராளமான நெட்டிசன்கள் இவர் ஒரு முன் உதாரணம் என பாராட்டியுள்ளனர்.

Recommended For You

தொடர்ச்சியாக ஒரு வேலையை நம்பிக்கையுடன் தொடர்ந்தால் படிப்படியாக நீடித்த நிலையான வெற்றியை வாழ்க்கையில் அடைய முடியும் என்பதே இந்த இளைஞர் நமக்கு உணர்த்தும் பாடம். கடவுளிடம் ஒரு வரம் கேட்டால் என்ன கேட்பீர்கள் என்ற கேள்விக்கு என் தந்தையை திருப்பி தர வேண்டும் என கேட்பேன் என்கிறார். அவரது வீடியோவை இந்த லிங்கினை கிளிக் செய்து பார்க்கலாம் (https://www.instagram.com/reel/DcLo2hhPf2x/?igsh=aDZqaTk0cmsxbHBu&igsi=aDZqaTk0cmsxbHBu ).

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+