டெல்லி: கொளுத்தும் வெயில் காரணமாக டெல்லி போன்ற பல நகரங்களில் ஏர் கண்டிஷனர்கள் (AC) இல்லாமல் மனிதர்களால் இருக்கவே முடிவதில்லை. இது போன்ற சூழல் இருப்பதாலோ என்னவோ, மின்சார கட்டணமும் விண்ணை எட்டத் தொடங்கியுள்ளது. சமீப காலமாக பலரும் தங்களின் அதிக அளவிலான மின்சார கட்டணத்தை சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தனது 30,280 ரூபாய் மின்சார கட்டணத்தை, ஒருவர் ரெட்டிடில் பகிர்ந்து உள்ளார்.
BSES மின்சார வாரியம், ஜூன் மாதத்திற்கான மின்சாரக் கட்டணத்தை டெல்லியில் உள்ள அமன் என்பவருக்கு அனுப்பியுள்ளது. அவர் அந்த கட்டணத்தை பார்த்தவுடன் திகைத்துப் போனார். ஏனெனில் அவருக்கு கட்டணமாக 30,280 ரூபாய் வந்துள்ளது.

2 நாட்களுக்கு முன்பு, இந்த கட்டணத்தை தனது Reddit பக்கத்தில் அமன் பகிர்ந்துள்ளார். இது சக குடியிருப்பாளர்களிடையே ஆச்சரியத்தையும் அனுதாபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
வேதனை அளிக்கிறது! இது எப்படி சாத்தியம்? என்ற வரிகளுடன் அமன் தனது மின்சார கட்டணத்தைப் போஸ்ட் செய்துள்ளார். அதில் அமன் BSES-இல் இருந்து அனுப்பப்பட்ட மின்சார கட்டணத்தை ஸ்கிரீன்ஷாட் எடுத்து இணைத்துள்ளார், ஜூலை 9 ஆம் தேதிக்குள் ரூ. 30,280 செலுத்த வேண்டும் என்று அதில் குறிப்பிடபட்டுள்ளது.
அவர் சமீபத்தில் தனது 16 வருட பழைய ஏர் கண்டிஷனருக்கு ( Air conditioner) பதிலாக புதிய ஐந்து ஸ்டார் AC-யை வாங்கியதாக கூறியுள்ளார், அவை தனது மின்சார செலவை குறைக்கும் என்று எண்ணியதாகவும், ஆனால் அவை நான் எதிர்பார்த்த சேமிப்பை வழங்கவில்லை என்றும் அமன் கூறியுள்ளார்.
பணத்தை மிச்சப்படுத்தலாம் என்று நினைத்து புதிய ஏசிகளை வாங்கினேன். ஆனால், பணம் மிச்சமாகவில்லை. மொத்தம் 4 ஏசிகள் இருக்கின்றன, அவற்றில் குறைந்தது 2 ஏசிகள் எப்போதும் இயங்கிக் கொண்டிருக்கும், என்று அமன் தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அவருடைய பதிவு விரைவில் பலராலும் கவனிக்கப்பட்டது. அவருடைய பதிவுக்கு பல பயனர்கள், 4 ஏர் கண்டிஷனர்களுக்கு மின்சார கட்டணம் ஒன்றும் அதிகமாக இல்லை என்று சுட்டிக்காட்டி உள்ளனர்.
நீங்கள் 4 ஏசிகளைப் பயன்படுத்துகிறீர்கள், அவற்றில் ஒரே நேரத்தில் இரண்டு ஏசிகள் இயங்குகின்றன. அவை 5 ஸ்டார் ரேட்டிங் கொண்ட ஏர் கண்டிஷனர்களா? என்று எங்களுக்கு தெரியவில்லை. ஆனால் நீங்கள் ஒரே நேரத்தில் இரண்டு 2 ஸ்டார் ஏசிகளைப் பயன்படுத்தினால், இது சாதாரண கட்டணமே. அவற்றோடு, நீங்கள் வேறு சாதனங்களையும் இயக்குகிறீர்கள் என்றால் இவ்வளவு அதிக கட்டணம் வருவது சாத்தியமே, என்று ஒரு பயனர் கருத்து தெரிவித்தார்.
ஜூன் மாதத்தில் மின்சாரக் கட்டணம் எல்லா இடங்களிலும் உயர்ந்துள்ளது. என்னிடம் 2 ஏசிகள் உள்ளன, மே மாதத்தை ஒப்பிடும் பொழுது ஜூன் மாதத்தில் ஏசியை அதிகம் பயன்படுத்தவில்லை. ஆனால் மே மாதத்திற்கான மின்சார கட்டணம் ரூ. 7,000-ஆக இருந்தது. அனால், ஜூன் மாதம் ரூ. 20,000-ஆக அதிகரித்துள்ளது என்று மற்றொருவர் கூறியுள்ளார்.
இந்த மாத தொடக்கத்தில், ஜாயின் ஹூட் செயலியின் இணை நிறுவனர் ஜஸ்வீர் சிங், மாதம் ரூ.45,491 மின்கட்டணத்தைப் பெற்றதை பகிர்ந்த பின்னர், சமூக ஊடகங்களில் இதேபோன்று பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications