இப்படி ஏமாந்துட்டாரே.. கண்ணு முன்னாடி போன 3.5 லட்சம் ரூபாய்.. டெல்லி நபருக்கு நேர்ந்த ஷாக்

டெல்லி: நீங்கள் இதற்கு முன்பு, விசா நிராகரிக்கப்பட்ட காரணத்தால் ஏதேனும் பெரிய தொகையை இழந்துள்ளீர்களா? அப்படி ஒரு சம்பவம் டெல்லியைச் சேர்ந்த மயங்க் ஷர்மாவுக்கு நடந்துள்ளது.

டெல்லியில் வசிக்கும் மயங்க் ஷர்மா, ஏற்கனவே விமானங்கள் மற்றும் ஹோட்டல்களை முன்பதிவு செய்துள்ளார். அனால் அதன் பின் அவருடைய ஷெங்கன் விசா ரிஜெக்ட் செய்யப்பட்டதால் ரூ. 3.5 லட்சத்தை இழந்துள்ளார்.

 இப்படி ஏமாந்துட்டாரே.. கண்ணு முன்னாடி போன 3.5 லட்சம் ரூபாய்.. டெல்லி நபருக்கு நேர்ந்த ஷாக்

ஷெங்கன் விசா என்றால் என்ன?: ஷெங்கன் விசா என்பது ஐரோப்பிய நாடுகள் சேர்ந்து உருவாக்கிய ஒரு விசா முறையாகும். ஐரோப்பிய நாடுகளுக்கு வரும் பயணிகள், தனித்தனியாக விசா பெறாமல், இந்த ஒரே ஒரு விசாவை வைத்து உள்ளிருக்கும் நாடுகளில் பயணிக்கலாம். ஐரோப்பிய நாடுகளுக்கு வருவதற்கும் அல்லது ஐரோப்பிய நாடுகளுக்குள் பயணிக்கவும் இந்த ஒரு விசா போதுமானது.

மயங்க் ஷர்மா கிரீஸ் நாட்டை சுற்றி பார்ப்பதற்காக ஷெங்கன் விசா பெற விண்ணப்பித்துள்ளார். அதன் பின், இந்தியாவை விட்டு வெளியேற திட்டமிடப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு அவரது விசா கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. விமானம் மற்றும் ஹோட்டல் முன்பதிவுக்காக செலவிட்ட ரூ.3.5 லட்சத்தை சர்மா இழந்தார். எதிர்காலத்தில் ஐரோப்பாவிற்கு பயணம் செய்வதை தவிர்க்க ஷர்மா முடிவு செய்துள்ளார்.

இந்தியாவை விட்டு கிளம்புவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, அவருடைய ஷெங்கன் விசா ரிஜெக்ட் செய்யப்பட்டது. இதனால் அவர் ஐரோப்பிய நாடுகளில் தங்கி இருப்பதற்காக விமானம் மற்றும் ஹோட்டலுக்கு முன்பதிவு செய்த தொகையை இழந்ததாகக் கூறப்படுகிறது.

இதன் மூலம் மயங்க் ஷர்மா ரூ. 3.5 லட்சத்தை இழந்துள்ளார். இது குறித்து தனது விரக்தியை மயங்க் X தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் தான் ரூ. 3.5 லட்சத்தை, ஹோட்டல் மற்றும் விமான முன்பதிவிற்காக இழந்ததாகவும், இனிமேல் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதை தவிர்க்க உள்ளதாக முடிவெடுத்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த பிரச்சனையை அவர் மட்டும் சந்திக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. டெலிபோர்ட்டின் கூற்றுப்படி, 2022ஆம் ஆண்டில் மட்டும் 100,000 இந்தியர்களின் ஷெங்கன் விசா நிராகரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஷெங்கன் விசா விண்ணப்பத்திற்கு தேவைப்படும் ஆவணங்கள் யாவை?: ஷெங்கன் விசாவிற்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்களுக்கு கீழ்கண்ட ஆவணங்கள் தேவைப்படலாம்.

1) நீங்கள் ஷெங்கன் பகுதியை விட்டு வெளியேற திட்டமிட்ட தேதியில் இருந்து, குறைந்தது மூன்று மாதங்களுக்கு செல்லுபடியாகும் பாஸ்போர்ட்.
2) தெளிவாகப் பூர்த்தி செய்யப்பட்ட விசா விண்ணப்பப் படிவம்.
3) பாஸ்போர்ட் சைஸ் போட்டோ.
4) உடல் நலனைக் கருதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டால் தேவைப்படும் மருத்துவ காப்பீட்டு ஆவணங்கள்.

ஷெங்கன் விசா விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதற்கான காரணங்கள்?: நிராகரிக்கப்படுவதற்கான சில காரணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1) முழுமையற்ற அல்லது தவறான விண்ணப்பப் படிவங்கள்.
2) உங்களின் நிதி சார்ந்த விஷயங்களில் போதுமான ஆதாரம் இல்லாமல் இருப்பது.
3) உங்கள் பயணம் குறித்த தெளிவான விவரங்கள் இல்லாமல் இருப்பது.
4) நீங்கள் தங்குமிடம் மற்றும் உங்களுடைய பயண திட்டங்கள், சந்தேகிக்கும் வகையில் இருத்தல்.
5) பாஸ்போர்ட் தொடர்பான சிக்கல்கள்.
6) முந்தைய விசா மீறல்கள் மற்றும் குற்றப் பதிவுகள்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+