சாமானிய மக்களின் பல பதிவுகள் சமுக வலைத்தளத்தில் மிகப்பெரிய அளவில் டிரெண்டாகி வருகிறது, இதற்கு முக்கியமான காரணம் அந்த பதிவு பலருடைய வாழ்க்கையுடன் தொடர்புடையதாகவும், இணைத்து பார்க்க கூடிய ஒன்றாகவும் இருப்பது தான். இந்த வகையில் தற்போது Reddit தளத்தில் வெளியான பதிவு ஓன்று தான் இது.
டெல்லியை தேர்ந்த ஒரு இளைஞர் சமீபத்தில் புதிய வேலையில் சேர்ந்துள்ளார், புதிய அலுவலகத்தில் சேர்ந்த முதல் நாளே நமக்கு இது செட்டாகாது என முடிவு செய்து ராஜினாமா செய்துள்ளார். இதற்கு இவர் சொல்லும் காரணம் பெரிய விவாதத்தை சமுக வலைத்தளத்தில் உருவாக்கியுள்ளது.

ரெட்டிட் தளத்தில் பதிவிட்ட அந்த நபர் தனது அலுவலகம் குருகிராமில் உள்ளது, தான் டெல்லியின் வடமேற்கு பகுதியில் வசித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். தினமும் நீண்டநேரம் பயணம் செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கும் காரணத்தால், தூங்கும் நேரத்தைத் தவிர்த்து 3 மணிநேரம் மட்டுமே அவருக்கு வீட்டில் இருக்க நேரம் இருப்பதாக உணர்ந்து முதல் நாளே ராஜினாமா செய்துள்ளார்.
ரெட்டிட் தளத்தில் பதிவிட்ட இந்த நபர் செய்த பதிவில் நல்ல சம்பளத்தில் நல்ல நிறுவனத்தில் வேலை கிடைத்தது. சில சுற்று இண்டர்வியூவ்-க்கு பின்பு உடனே என்னை வேலைக்கு அமர்த்தினார்கள். இது எனது முதல் வேலை என்பதால் மிகவும் மிகழ்ச்சியுடனும், உற்சாகமாகவும் இருந்தேன்.
ஆனால் என் வீட்டில் இருந்து அலுவலகம் பயணம் செய்யும் நேரம் மிகவும் அதிகமாக இருப்பதை உணர்ந்தேன். நான் டெல்லியின் வடமேற்குப் பகுதியில் வசிக்கிறேன் (பிங்க் லைன்) மற்றும் என்னுடைய அலுவலகம் மௌல்சாரி அவென்யூ (Moulsari Avenue) பகுதியில் இருந்தது.
நான் இன்ட்ரோவர்ட் என்பதால் ஆன்-சைட் அனுபவம் மிகவும் முக்கியமானது என்பதை உணர்ந்தேன். அலுவலக வேலை நேரம் + பயண நேரத்தை கணக்கிடுகையில் ஒரு நாளுக்கு 3 மணிநேரம் மட்டுமே வீட்டில் இருப்பதை உணர்ந்தேன், இதற்கு மேல் பயணம் செய்வதற்கு சுமார் 5000 ரூபாய் செலவாகும்.

மேலும் என்னால் இடமாற்றம் செய்ய முடியாத நிலையில் உள்ளேன், இதனால் முதல் நாளே பணியை ராஜினாமா செய்தேன் என இப்பதிவு முடிகிறது.
இந்த பதிவுக்கு பலர் தாங்களும் இதேபோன்று தான் தினமும் பயணம் செய்து வருவதாக கூறியுள்ளனர். பயண நேரத்தை பயனுள்ளதாக மாற்றிக்கொள்ளவும், பயணத்தை எளிதாக்கும் வகையில் மாற்று ஏற்பாடுகளை செய்துக்கொள்ளவும் பரிந்துரை செய்துள்ளனர்.
இன்னும் சிலர் கஷ்டப்படாமல் எதுவும் கிடைக்காது என்பது போல் பதிவிட்டனர். இந்த கமெண்ட்களை பார்த்த அந்த நபர் இத்தனை பேர் அவ்வளவு நேரம் தினமும் பயணம் செய்வதை கண்டு வியந்துள்ளார். மேலும் தான் முதல் நாளிலேயே பணியை ராஜினாமா செய்தது பெரும் தவறு எனவும் உணர்ந்துள்ளார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!



Click it and Unblock the Notifications