ஒரு ஊழியர் மிகவும் வித்தியாசமான காரணத்தை எழுதி தான் பணிபுரியும் நிறுவனத்திலிருந்து ரிசைன் செய்ய இருப்பதாக கூறியுள்ளார். அவருடைய கடிதம் தற்போது சமூக ஊடகங்களில் சூறாவளி போல பரவி வருகிறது. காரணம் அவர் நகைச்சுவையாக தனது அதிருப்தியை தெரிவித்ததனால் தான். இன்ஜினியரிங் ஹப் என்ற நிறுவனத்தின் இணை நிறுவனரான ரிஷப் சிங், அந்த ஊழியரின் கடிதத்தை தனது X தளத்தில் பகிர்ந்துள்ளார். அந்த ஊழியரின் கடிதம் நகைச்சுவையாக இருந்தாலும், பணியில் தான் அடைந்த விரக்தியையும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
ரிஷப் பகிர்ந்துள்ள கடிதத்தில் "ரெஸிக்னேஷன் லெட்டர்" என்று தலைப்பிடப்பட்ட மெயிலின் ஸ்கிரீன்ஷாட் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் அந்த ஊழியர் 2 வருட அர்பணிப்பு மற்றும் கடின உழைப்பிற்கு பிறகு எனது சம்பளம் அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தேன். ஆனால் என் நம்பிக்கையை போலவே சம்பளமும் அப்படியே இருக்கிறது.

அதோடு தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்திய அந்த ஊழியர் பணிவிலகல் குறித்த காரணத்தையும் தெரிவித்திருந்தார். ரூ. 51,999 விலையுள்ள iQOO 13 ஸ்மார்ட் ஃபோனை டிசம்பர் 5-ஆம் தேதி அன்று முன்பதிவு செய்ய விரும்பியதாகவும், ஆனால் தற்போதைய சம்பளத்தில் அதை வாங்க முடியவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
அதன் பிறகு நகைச்சுவையாக இந்தியாவில் வேகமான ஒரு போனை கூட வாங்க முடியவில்லை என்றால், எனது தோழிலில் எப்படி வேகமான முன்னேற்றம் இருக்கும் என்ற கேள்வியையும் எழுப்பியிருந்தார். அதோடு அந்த ஊழியர் தனது கடைசி வேலை நாளை டிசம்பர் 4, 2024 என அறிவித்து தனது அனுபவத்திற்காக, நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்து எழுதியிருந்தார்.

அவருடைய கடிதம் இணையத்தில் வேகமாக பகிரப்பட்டது. நகைச்சுவையாக அதே சமயத்தில் நேர்மையாக எழுதிய கடிதத்திற்காக பலர் அவரை பாராட்டினர். பயனர்கள் தங்கள் கருத்துக்களையும் தெரிவித்திருந்தனர். ஒரு பயனர், அவருக்கு போனை வாங்கி கொடுங்கள் என்று பதிவிட்டிருந்தார். மற்றொரு பயனர் போனுக்கான ப்ரோமோஷன் ஈ-மெயில் போல தெரிகிறது என்று பதிவிட்டிருந்தார்.
சிலர் பணிச்சுமை, உடன் பணி புரியும் சக ஊழியர்களுடன் பிரச்சனை போன்றவற்றின் காரணமாக ரிசைன் செய்வர். ஆனால் தன்னால் ஒரு மொபைல் போனை வாங்க முடியவில்லை அதற்கு சம்பளம் போதவில்லை என உண்மையைக் கூறி இவர் எழுதிய கடிதம் தற்போது பிரபலமாக பேசப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications