வசதியாக இருப்பதற்காக பலரும் கணக்கு வழக்கு இன்றி செலவு செய்யும் வேகமான உலகில் டெல்லியைச் சேர்ந்த ஒரு பெண்ணின் பாய் ஃப்ரெண்ட் ரூ.80 கூடுதல் கட்டணத்தை தவிர்க்க 42 நிமிடங்கள் வரை பொறுமையாக காத்திருந்துள்ளார். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் அவர் ஆண்டுக்கு ரூ.42 லட்சம் சம்பளம் பெறுபவர் என்பதுதான். தனது பாய் பிரண்ட் எவ்வளவு சிக்கனமாக இருக்கிறார் என்பதை அந்தப் பெண் தனது X பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
டெல்லியைச் சேர்ந்த அந்த நபர் குவிக் டெலிவரி செயலியான செப்டோவில் ஆர்டர் செய்துள்ளார். அப்போது செப்டோ அப்ளிகேஷனில் 80 ரூபாய் கூடுதல் கட்டணம் காண்பிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூடுதல் கட்டணத்தை தவிர்க்கும் பொருட்டு சுமார் 42 நிமிடங்கள் வரை பொறுமையாக காத்திருந்துள்ளார்.

இதனை எழுத்தாளரும் கலைஞருமான அணு ஸ்ரீவத்சவா தனது அதிகாரப்பூர்வ X தளத்தில் பகிர்ந்திருந்தார். அதில் ரூ.42 லட்சம் சம்பாதிக்கும் அவருடைய காதலர் கூடுதல் ரூ.80 செலுத்துவதற்கு பதிலாக செப்டோவின் உயர் கட்டணம் எப்போது குறையும் என்று காத்திருந்ததாக போஸ்ட் செய்துள்ளார். அவருடைய சிக்கனம் செல்வத்தை சம்பாதிப்பதில் மட்டுமல்ல பராமரிப்பதிலும் இருக்கிறது என்பதை சுட்டிக் காட்டுகிறது. அவர் பணக்காரராக இருப்பதிலும், அப்படியே இருப்பதிலும் வல்லவர் என்று அனு எழுதி இருந்தார்.
இந்தப் போஸ்ட் விரைவில் பிரபலமானது. பல பயனர்களும் அவருடைய நிதி ஒழுக்கத்தை பாராட்டினர். இது கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் என்று ஒரு X பயனர் கருத்து தெரிவித்திருந்தார். மற்றொரு பயனர் பணத்திற்காக ஒரு பையனுடன் டேட்டிங் செய்யும் பெண்களுக்கு இது புரியாது என்று கருத்து தெரிவித்திருந்தார். அதற்கு பதில் அளித்த அனு அவருடைய முடிவை நான் மதிக்கிறேன். நீங்கள் எவ்வளவு சம்பாதித்தாலும் சம்பாதிக்கும் பணத்தை மதிப்பிடுவது தான் முக்கியம் என்று பதிலளித்திருந்தார்.
பிற பயனர்களும் இதே போன்றே தங்களுடைய கமெண்ட்ஸ்களை தெரிவித்திருந்தனர். அதில் ஒருவர் CEO அளவுக்கு வழங்கப்படும் சம்பளம், ஆனால் கல்லூரி மாணவரின் செலவு என்று கருத்து தெரிவித்திருந்தார். இன்னொரு பயனர் இதில் எந்தவித தவறும் இல்லை உண்மையிலேயே சம்பளம் அதிகமாக இருந்தாலும், அவர் இந்த சிறிய தொகையை சேமிப்பதில் ஆர்வமாக இருப்பது என்னை கவர்ந்தது என்று கூறியிருந்தார்.
ஒரு பயனர் கூடுதல் கட்டணங்கள் விதிக்கப்படும்போது சொமேட்டோவில் உணவை ஆர்டர் செய்வேன் டெலிவரி செய்யும் நபருக்கு கால் செய்து வரும் வழியில் பால் வாங்கி வரச் சொல்வேன். அதற்கு பதிலாக அவருக்கு டிப்ஸ் கொடுத்து விடுவேன். இது இரண்டு பேருக்கும் நன்மையானதுதானே என்று நகைச்சுவையாக கமெண்ட் செய்திருந்தார்.
பலரும் அவருடைய சிக்கன மனப்பான்மையை பாராட்டி இருந்தாலும் சிலர் அதிக வருமானத்தை வைத்துக் கொண்டும் இவ்வளவு பொறுமை தேவையா என்று கேள்வி எழுப்பினர். நிதி சார்ந்த விஷயத்தில் கவனமுடன் இருப்பதன் முக்கியத்துவத்தை இந்த பதிவு எடுத்துக்காட்டுகிறது.


Click it and Unblock the Notifications