டெல்லி பார்கள், ரெஸ்டாரென்ட் மற்றும் 4 மற்றும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் உள்ள உணவகங்கள் உரிமம் பெற்ற பிறகு வாரத்தில் 7 நாளும் 24 மணி நேரமும் செயல்பட முடியும்.
புத்தாண்டு நாளில் டெல்லி மக்களுக்கு அளிக்கப்பட்ட குட்நியூஸ் ஆக இது உள்ளது. இந்தியாவில் நைட் லைப் என்பது மிகவும் குறைவு என அனைவருக்கும் தெரியும், ஆனால் ஒரு பெரு நகரங்களுக்கு, குறிப்பாக வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் பொருளாதார நாடுகளுக்கு நைட் லைப் மிகவும் முக்கியம் எனப் பல ஆய்வுகள் கூறுகிறது.
இந்த நிலையில் 2023ல் டெல்லி மக்களைக் குஷிப்படுத்தும் வகையில், அரசு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது.
புதிய விதிமுறைகள்
புதிய விதிமுறைகளின்படி, ஐந்து மற்றும் நான்கு நட்சத்திர ஹோட்டல்களில் உள்ள அனைத்து உணவகங்கள், விமான நிலையம், ரயில் நிலையம் மற்றும் ISBT வளாகத்தில் உள்ளவை, புதிய தளர்த்தப்பட்ட விதிமுறையின் கீழ் உரிமத்திற்குத் தேவையான கட்டணம் செலுத்திய பிறகு 24X7 அடிப்படையில் செயல்பட அனுமதிக்கப்படும்.
1 மணி வரை
மேலும், 5 நட்சத்திர மற்றும் 4 நட்சத்திர ஓட்டல்களில், ஒரே ஒரு உணவகத்திற்கு மட்டுமே பார் உரிமம் பெற அனுமதி அளிக்கப்படும் உச்சவரம்பு இப்புதிய விதிமுறையின் கீழ் நீக்கப்பட்டுள்ளது.
பார் உரிமம்
மேலும், 5 நட்சத்திர மற்றும் 4 நட்சத்திர ஓட்டல்களில், ஒரே ஒரு உணவகத்திற்கு மட்டுமே பார் உரிமம் பெறு அனுமதி அளிக்கப்படும் உச்சவரம்பு இப்புதிய விதிமுறையின் கீழ் நீக்கப்பட்டுள்ளது.
வி கே சக்சேனா
லெப்டினன்ட் கவர்னர் வி கே சக்சேனா 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உணவகங்கள் / உணவுக் கடைகளுக்கான உரிமத் தேவைகளை எளிதாக்குவதற்கு ஒரு குழுவை அமைத்தார், மேலும் தற்போதுள்ள விதிமுறைகளை ஆய்வு செய்து உரிமம் வழங்கும் செயல்முறைகளை விரைவுபடுத்துவதற்கான வழிகளைப் பரிந்துரைக்குமாறு அறிவுறுத்தினார்.
MHA உரிமம்
இக்குழுவின் அறிக்கையைச் சமர்ப்பித்த பிறகு, புதிய விதிமுறைகள் குறித்து இறுதி முடிவை எடுக்கப் பல சுற்றுக் கூட்டங்கள் நடந்தப்பட்ட பின்பு அதிகாரிகள் தெரிவித்தனர். இப்புதிய விதிமுறைகள் தற்போது தேசிய தகவல் மையத்திற்கு (NIC) அனுப்பப்பட்டுப் புதிய விண்ணப்பத்தில் தேவையான மாற்றங்களைக் கொண்டு வந்து MHA உரிமம் வழங்கும் போர்ட்டலில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.
3 வாரம்
அடுத்த 3 வாரத்தில் டெல்லியில் உள்ள தொழில் முனைவோர் புதிய மாற்றங்கள் அடங்கிய உரிமத்தை பெற்று வாரத்தில் 7 நாளும் 24 மணிநேரமும் இயங்க முடியும். இந்த வர்த்தகச் சந்தையில் பெறும் மாற்றத்தை ஏற்படுத்தும், சமீபத்தில் தமிழக நிதியமைச்சர் பிடிஆர், தெலுங்கானா தொழிற்துறை அமைச்சர் கேடிஆர் ஆகியோர் நைட் லைப் முக்கியதுவத்தைச் சில பேட்டிகளில் பேசியிருந்தனர்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications