டீ கடைகளுக்கு போட்டியாக வரும் நவீன காஃபி ஷாப்கள்.. மாசம் 20 லட்சம் சம்பாதிக்கும் இளைஞர்கள்!

80கள், 90களில் பிறந்தவர்களுக்கு எப்படி டீ கடை ஒரு எமோஷனோ அதேபோல் இன்றைய இளம் ஜென்Z, ஜென் ஆல்ஃபா தலைமுறையினருக்கு காஃபி மீதும் காஃபி ஷாப் மீதும் பெரும் ஆர்வம் உள்ளது. எந்த கடையாக இருந்தாலும், எங்கு இருந்தாலும் சரி இவர்களின் கூட்டம் தான்.

மில்லினியல் மக்கள் எப்படி டீ-க்கு அடிமையாகி இருக்கிறார்களோ இவர்கள் காஃபி-க்கு.. ஆனால் ஒவ்வொரு கடையிலும் இதன் விலை 100 முதல் 600 ரூபாய் வரையில் விற்கப்படுவதால் கடந்த 3 ஆண்டுகளாக இந்தியா முழுவதும் பட்ஜெட் காஃபி கடைகளின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது.

டீ கடைகளுக்கு போட்டியாக வரும் நவீன காஃபி ஷாப்கள்.. மாசம் 20 லட்சம் சம்பாதிக்கும் இளைஞர்கள்!

இதை கவனித்த டெல்லி பல்கலைகழக மாணவர்கள் 3 பேர் தங்கள் கையில் இருந்து சிறு சேமிப்பை வைத்து துவங்கிய Kofi Kafi என்ற கடை தற்போது ஒட்டுமொத்த டெல்லியை கலக்கி வருகிறது என்றால் மிகையில்லை.

வைபவ் அரோரா மற்றும் வான்ஷ் மோர் ஆகியோர் இணைந்து Kofi Kafi என்ற காஃபி ஷாப்-ஐ திறந்தனர். இது உட்கார்ந்து காஃபி குடிக்கும் கடையாக இல்லாமல் கிசோக் போன்ற குட்டி கடையாக திறக்கப்பட்டது, காஃபியை வாங்கிக்கொண்டு மக்கள் தங்களுக்கு விருப்பமான இடத்தில் குடிக்கலாம்.

ஒரு நாளுக்கு 4-5 கப் காஃபி குடுக்கும் மக்கள் குறைந்தபட்சம் 500 முதல் 1000 ரூபாய் செலவு செய்ய வேண்டியிருக்கும் வேளையில், இதை குறைக்க வேண்டும், அதேபோல் தரமாகவும் இருக்க வேண்டும் என திட்டமிட்டு இருவரும் கையில் இருக்கும் 3 லட்சம் ரூபாய் தொகை கொண்டு Kofi Kafi கடையை திறந்தனர்.

ஒரு காஃபி இயந்திரமே 4 லட்சம் ரூபாய் விலையில் விற்கப்படுவதால் அதை வாங்காமல் திருமணங்களை பயன்படுத்தும் பெரிய சைஸ் காஃபி மேக்கரை வாங்கி கடையை திறந்தனர். முதல் கடை டெல்லியில் ரோஹினி என்னும் பகுதியில் ஒரு தள்ளுவண்டி கடையாக அமைந்தது.

அதிகளவிலான இளம் வாடிக்கையாளர்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காக 50 முதல் 85 ரூபாய் பட்ஜெட் விலையில் மெனுவை தயாரித்து விற்பனையை துவங்கினர். பட்ஜெட் குறைவாக இருந்த காரணத்தால் தினமும் 100-150 கப்கள் வரை விற்கப்பட்டது. இதன் மூலம் முதல் மாதமே 3-3.5 லட்சம் வரையிலான வருமானத்தை ஈட்டினர்.

டீ கடைகளுக்கு போட்டியாக வரும் நவீன காஃபி ஷாப்கள்.. மாசம் 20 லட்சம் சம்பாதிக்கும் இளைஞர்கள்!

இந்த வெற்றியின் தொடர்ச்சியாக அடுத்தடுத்து கடைகளை டெல்லியின் முக்கிய பகுதிகளிலும், இளம் தலைமுறையினர் அதிகமாக கூடும் இடத்தில் என மொத்தம் 5 கடைகளை திறந்ததனர்.

தற்போது மாதம் 20 லட்சத்திற்கும் அதிகமான வருவாயை ஈட்டும் Kofi Kafi பிராண்டு வருடத்திற்கு குறைந்த பட்சம் 2.5 கோடி வரையில் வருமானம் ஈட்டுவதாக தெரிவித்துள்ளனர் இக்கடையின் உரிமையாளர்களான வைபவ் அரோரா மற்றும் வான்ஷ் மோர். தற்போது இவர்கள் டெல்லியில் ஒவ்வொரு 2 கிலோமீட்டருக்கு ஒரு கடை திறக்க வேண்டும் என இலக்குடன் பயணித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+