டெல்லி அரசின் கிடுக்குபிடி.. 62 லட்சம் பேர் தவிப்பு.. பெட்ரோல் பங்க்-ல் ANPR கேமரா..!!

இந்திய தலைநகர் டெல்லியில் சுற்றுசூழல் பாதிப்பின் தாக்கம் ஒவ்வொரு வருடமும் அதிகரித்து வரும் வேளையில், இதை கட்டுக்குள் கொண்டு வர டெல்லி அரசும் மத்திய அரசும் பல முயற்சிகளை செய்து வருகிறது. இந்த நிலையில் டெல்லி சுற்றுசூழலை அதிகளவில் மாசுபடுத்தும் பழைய வாகனங்களின் பயன்பாட்டை குறிப்பாக இதன் பயன்பாட்டை குறைக்க அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

மத்திய அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் (CSE) நவம்பர் 2024 அறிக்கையில், டெல்லியின் சுற்றுசூழலை மாசுபாடு செய்வதில் 51% பங்கீடு வகிப்பது வாகனங்கள் தான் உறுதி செய்யப்பட்டது. இதை கருத்தில் கொண்டு, வாயு தர மேலாண்மை ஆணையம் (CAQM) உத்தரவு எண் 89 மூலம், NCR பகுதியில் ஆயுள் முடிந்த வாகனங்களுக்கு அதாவது 15 வருடம் முடிந்த பெட்ரோல் வாகனங்கள், 10 வருடம் முடிந்த டீசல் வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க கூடாது என உத்தரவிடப்பட்டு உள்ளது.

டெல்லி அரசின் கிடுக்குபிடி.. 62 லட்சம் பேர் தவிப்பு.. பெட்ரோல் பங்க்-ல் ANPR கேமரா..!!

இந்த தடை உத்தரவில் வர்த்தக வாகனங்கள், பயணிகள் வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள், பழைய வாகனங்கள் என அனைத்தும் அடங்கும். இந்த உத்தரவு மூலம் NCR பகுதியில் இருக்கும் பெட்ரோல் நிலையங்களை ஆயுள் முடிந்த வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க கூடாது.

இந்த உத்தரவின் மூலம் டெல்லியில் மட்டும் 61.14 லட்சம் பழைய வாகனங்கள் பாதிக்கப்படும். மார்ச் 2025 நிலவரப்படி, ஹரியானாவில் 27.5 லட்சம், உத்தரபிரதேசத்தில் 12.69 லட்சம், ராஜஸ்தானில் 6.2 லட்சம் வாகனங்கள் ஆயுள் முடிந்தவை என புள்ளிவிபரங்கள் கூறுகிறது.

அமலாக்க செய்ய அதிரடி நடவடிக்கை:
NCR பகுதிகளில் பழைய வாகனங்களுக்கு எரிபொருள் வழங்குவதை தடுக்கும் நோக்குடன் டெல்லி காவல்துறை, போக்குவரத்து காவல்துறை, மற்றும் டெல்லி மாநகராட்சி இணைந்து இப்பகுதிகளில் இருக்கும் 350 பெட்ரோல் நிலையங்களில் கண்காணிப்பு செய்யப்பட உள்ளது. ஒவ்வொரு பெட்ரோல் நிலையத்திலும் ஒரு போக்குவரத்து காவலர் மற்றும் இரு காவலர்கள் சட்டம் ஒழுங்கு காக்க ஈடுப்படுத்தப்படுவார்.

மேலும் பழைய வாகனங்களை சரி பார்க்க 498 பெட்ரோல் பங்க்-ல் தானியங்கி எண் பலகை அடையாள கேமராக்கள் பொருத்தப்பட்டு, இதை VAHAN தரவுத்தளத்துடன் இணைக்கப்பட்டு, பழைய வாகனங்களை கண்டறிந்து கைப்பற்றி அழிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பழைய வாகன உரிமையாளர்களுக்கு பாதிப்பு:
பழைய வாகனங்களுக்கு பெட்ரோல்/டீசல் நிரப்ப முடியாது, இதனால் அவை பயன்படுத்த முடியாமல் போகலாம். இந்த பழைய வாகனங்கள் கண்டிறியப்பட்டு கைப்பற்றப்பட்டால் அரசால் அழிக்கப்படும், இதனால் உரிமையாளர்கள் வாகனத்தை இழக்க நேரிடும். இதனால் உரிமையாளர்கள் புதிய வாகனங்களை வாங்க வேண்டியிருக்கும், இது கூடுதல் செலவை ஏற்படுத்தும்.

பழைய வாகன சந்தைக்கு பாதிப்பு:
இந்தக் கட்டுப்பாடுகள் காரணமாக செகண்ட் ஹேண்ட் வாகன சந்தையை பெரிதும் பாதிக்கும். பழைய வாகனங்களின் மதிப்பு குறையும், விற்பனை குறைவதால் இந்தத் துறையில் மந்தநிலை ஏற்படலாம். இதனால் வாகனங்களஐ வாங்குபவர்கள் புதிய அல்லது குறைந்த காலம் பயன்படுத்தப்பட்ட வாகனங்களைத் தேடுவர், இதனால் செகண்ட் ஹேண்ட் சந்தை பெரிய அளவில் பாதிக்க வாய்ப்புள்ளது.

ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மற்றும் வாகன மதிப்பு:
ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பழைய வாகனங்களை (கார்) பொதுவாக குறைந்த மதிப்பில் ஏற்கின்றன. இந்தக் புதிய கட்டுப்பாடுகள் காரணமாக, பழைய வாகனங்களுக்கு மதிப்பு கூடுதலாக குறையலாம். இருப்பினும், சில நிறுவனங்கள் புதிய வாகனங்களின் விற்பனையை ஊக்குவிக்க, பழைய வாகனங்களுக்கு அதிக விலையை வழங்கவும் வாய்ப்புள்ளது. தற்போது சில இரு சக்கர வாகனங்களும் பழைய வாகனங்களை வாங்குகிறது.

வாகன அழிப்பு கொள்கை:
பழைய வாகனங்கள் அதிக மாசு ஏற்படுத்துவதால், அவற்றை அழிப்பது காற்று தரத்தை மேம்படுத்தும் என டெல்லி அரசு மட்டும் அல்லாமல் மத்திய அரசும் நம்புகிறது. இதற்காவே மத்திய அரசு ஸ்கிரேபேஜ் கொள்கையை அறிமுகம் செய்தது.

தற்போதைய டெல்லி அரசின் அறிவிப்பு மத்திய அரசின் ஸ்கிரேபேஜ் கொள்கையின் பயன்பாட்டை அதிகரிக்கும். இது ஆட்டோமொபைல் துறைக்கு ஜாக்பாட் ஆக மாறலாம். இதேவேளையில் புதிய, சுற்றுச்சூழலுக்கு உகந்த வாகனங்களை விற்பனையை இந்த புதிய விதிகள் மூலம் அதிகரிக்க செய்யலாம்.

இறுதியாக டெல்லி மற்றும் NCR பகுதிகளில் பழைய வாகனங்களுக்கு எதிரான இந்தக் கட்டுப்பாடுகள் காற்று மாசைக் குறைக்க முக்கியமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. ஆனால், இது வாகன உரிமையாளர்களுக்கு பெரும் தலைவலியாக பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் இப்படியொரு அறிவிப்பு வந்தால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா..?

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+