அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதும் வர்த்தகம் செய்யும் முன்னணி தொழில்நுட்பம் மற்றும் கம்ப்யூட்டர் தயாரிப்பு நிறுவனமான டெல் கர்நாடகாவின் தலைநகரான பெங்களூரில் தனது புதிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை (R&D Center) மேம்படுத்த கூடுதலாக முதலீடு செய்ய விரும்பவதாக தெரிவித்துள்ளது.
அமெரிக்க பொருளாதாரத்திலும், ஏற்றுமதியிலும் முக்கிய பங்கீட்டை கொண்ட டெல் ஏற்கனவே இந்தியாவின் சிலிக்கான் வேலியான பெங்களூரில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை வைத்துள்ளது. இதை மேம்படுத்தவும், வரிவாக்கம் செய்யவும் கூடுதலாக முதலீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடக மாநிலத்தின் பெரிய மற்றும் நடுத்தர தொழில்கள் மற்றும் உள்கட்டமைப்பு துறை அமைச்சர் எம்பி பாட்டீல் உடன் டெல் நிறுவன அதிகாரிகள் முக்கிய ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சந்திப்பில் டெல் நிறுவனத்தின் சார்பாக SEZ செயல்பாடுகளில் இறக்குமதி கட்டுப்பாடுகளை சமாளிக்க ஆதரவை கேட்டுள்ளது.
உலகளவில், அமெரிக்காவின் டெல் நிறுவனம் சுமார் 25 உற்பத்தி தொழிற்சாலைகளை நடத்துவதாகக் கூறுகிறது, இவற்றில் 14 தளங்கள் R&D-க்காக பிரத்தியேகமாக கட்டமைக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்காவில் இருந்தும், அமெரிக்க நிறுவனங்களிடம் இருந்தும் முதலீடுகளை ஈர்ப்பதற்காக கர்நாடகா அமைச்சகத்தின் பிரதிநிதிகள் குழு, செமிகண்டக்டர் உற்பத்தி நிறுவனமான குளோபல் ஃபவுண்டரிஸ் உட்பட பல நிறுவனங்களை சமீபத்தில் சந்தித்தது.
பெங்களூர் நகரத்தில் பணியாளர்களை அதிகரிக்க விருப்பம் கர்நாடகா அரசு பல துறையில் புதிய முதலீடுகளை ஈர்க்க துவங்கியுள்ளது. இதேபோல் வெளிநாட்டில் இருந்து அதிகப்படியான முதலீடுகளை ஈர்ப்பதில் தென் மாநிலங்கள் மத்தியில் தற்போது பெரும் போட்டி நிலவுகிறது. தமிழ்நாட்டு 2024 ஆம் ஆண்டில் மாபெரும் முதலீட்டு மாநாட்டை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications