டெல் நிறுவனம் தங்களுடைய ஊழியர்கள் அனைவரும் அலுவலகத்திற்கு வந்து வேலை செய்ய வேண்டும் என அறிவித்துள்ளது. டெல் நிறுவனம் செப்டம்பர் 30ஆம் தேதி முதல் சர்வதேச அளவில் செயல்படக்கூடிய விற்பனை பிரிவு ஊழியர்கள் அனைவரும் வாரத்திற்கு ஐந்து நாட்களும் அலுவலகத்திற்கு வந்து மட்டுமே பணி புரிய வேண்டும் என அறிவித்துள்ளது.
இனிமேல் ஹைபிரிட் வேலை நடைமுறையில் இருக்காது என்றும் டெல் நிறுவனம் கூறியுள்ளது. அண்மையில் தான் அமேசான் நிறுவனமும் தங்களுடைய ஊழியர்கள் அனைவரும் அடுத்த ஆண்டு முதல் கட்டாயம் அலுவலகத்தில் மட்டும் அலுவலகத்தில் மட்டுமே வந்து பணிபுரிய வேண்டும் என அறிவித்திருந்தது. இதனை தொடர்ந்து தற்போது டெல் நிறுவனமும் இப்படி ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. ஆனால் டெல் நிறுவனத்தின் இந்த அறிவிப்புக்கு ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

டெல் நிறுவனம் இது தொடர்பாக ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில் தற்போது தொழில் உலகம் பெரிய அளவிலான மாற்றங்களை கண்டு வருகிறது. குறிப்பாக தொழில்நுட்ப உலகம் நொடிதோறும் மாற்றம் அடைந்து வருகிறது. இந்த மாற்றங்களுக்கு ஏற்ற வகையில் நாம் நம்மை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
மேலும் இந்த உலகம் இயங்குகிற வேகத்திற்கு இணையாக நாம் இயங்க வேண்டும். எனவே அனைவரும் அலுவலகத்திற்கு வந்து பணிபுரிவது தான் சிறந்ததாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி டெல் நிறுவனத்தின் விற்பனை பிரிவில் செயல்படக்கூடிய அனைத்து ஊழியர்களும் வாரத்தில் ஐந்து நாட்களும் அலுவலகத்தில் மட்டுமே பணி புரிய வேண்டும். டெல் நிறுவன ஊழியர்கள் இது தொடர்பாக ரெட்டிட் தளத்தில் தங்களுடைய அதிருப்தியை பதிவு செய்துள்ளனர்.
இதுபோல அலுவலகத்திற்கு வந்து செல்வதால் போக்குவரத்தில் பாதி நேரம் முடிந்துவிடும் என பலர் கருத்து தெரிவித்துள்ளனர். தற்போது வீட்டில் இருந்தே பணிபுரியும் போதே நிறுவனம் சிறப்பாக தானே செயல்படுகிறது ஏன் அதனை மாற்ற வேண்டும் என கேள்விகள் முன் வைக்கப்பட்டுள்ளன.
ஊழியர்கள் மத்தியில் அதிருப்தி இருந்தாலும், டெல் நிறுவனம் தன்னுடைய முடிவை மாற்றுவதாக இல்லை. முன்னதாக அமேசான் நிறுவனம் ஊழியர்கள் அனைவரும் அலுவலகத்துக்கு வந்து பணிபுரிய வேண்டும் என அறிவித்தபோது பிளைன்ட் என்ற சமூக வலைத்தளத்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அதில் அலுவலகத்திற்கு வந்து பணிபுரிய வேண்டும் என கட்டாயப்படுத்தப்பட்டால் வேறு வேலைக்கு சென்று விடுவோம் என 73 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதித்தன. பின்னர் அது வாரத்தின் சில நாட்கள் வீட்டில் இருந்து வேலை, சில நாட்கள் அலுவலகத்தில் இருந்து வேலை என மாற்றப்பட்டது. தற்போது பெரும்பாலான நிறுவனங்கள் பழைய முறைப்படி ஊழியர்கள் அலுவலகத்திற்கு வர வேண்டும் என அறிவித்துள்ளன.
Story written by: Devika
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications