அதானி போர்ட்ஸ் & ஸ்பெஷல் எகனாமிக் சோன் லிமிடெட் நிறுவனத்தின் ஆடிட்டரான பிரபல டெலாய்ட் நிறுவனம், சில பரிவர்த்தனைகள் குறித்து முழுமையாக தரவுகளை வெளியிடவில்லை என்றால், நிறுவனத்தின் கணக்குகள் ஆய்வு செய்து அது குறித்து தகுதியான கருத்தை மட்டுமே வெளியிட முடியும் என்று கூறியுள்ளது.
Deloitte Haskins & Sells LLP நிறுவனம், அதானி போர்ட்ஸ் & SEZ நிறுவனம் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத மூன்று நிறுவனங்களுடனான பரிவர்த்தனைகள் குறித்து செவ்வாய்க்கிழமை முக்கிய கருத்தை வெளியிட்டது.

இந்த 3 நிறுவனங்களும் உண்மையில் தொடர்பில்லாதவை என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை என்றும், அதை நிரூபிக்க உதவும் ஒரு independent external examination-ஐ பெற அதானி போர்ட்ஸ் & SEZ நிறுவனம் மறுத்துவிட்டதாகவும் தணிக்கையாளர் நிறுவனமான டெலாய்ட் தெரிவித்துள்ளது.
டெலாய்ட் நிறுவனத்தால் செய்யப்பட்ட மதிப்பீட்டில், தணிக்கைக்கு போதுமான உறுதியான ஆதாரங்களை கொண்டிருக்கவில்லை என்று குறிப்பிட்ட Deloitte நிறுவனம், இதனால் அதானி போர்ட்ஸ் & SEZ நிறுவனம் இந்திய சட்டங்களுடன் முழுமையாக இணங்கியுள்ளதா என்பதை தெரிவிக்க முடியாது என்று தெரிவித்துள்ளது.
அமெரிக்க ஷாட் செல்லரான ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனத்தின் குற்றச்சாட்டுகளை நிரம்பிய அறிக்கையில் அதானி குழுமத்தின் சந்தை மதிப்பில் இருந்து $100 பில்லியனுக்கும் அதிகமான மதிப்பீட்டை இழந்தது. இதன் அடிப்படையில் அதானி போர்ட்ஸ் & SEZ நிறுவனத்தின் கணக்குகளை ஆய்வு செய்து முதல் முறையாக தணிக்கையாளர் நிறுவனமான டெலாய்ட் முக்கிய கருத்தை வெளியிட்டு உள்ளது.

இந்த அறிவிப்பு மூலம் அதானி குழுமத்தின் நிதி பரிவர்த்தனைகளில் தகவல் பற்றாக்குறை அல்லது தகவல் மறைப்பு பற்றிய சந்தேகங்களை அதிகரித்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் ஹிண்டன்பர்க் ரிசர்ச்-ன் கார்ப்பரேட் மோசடி குற்றச்சாட்டுகளை கடந்து செல்லவும் இது தடையாக விளங்குகிறது.
ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டுகளை அதானி குழுமம் மறுத்துள்ள வேளையிலும், ஹிண்டன்பர்க் ரிசர்ச் தனது அறிக்கையில் அதானி குழுமம் குறித்து பட்டியலிட்டு உள்ள குற்றச்சாட்டுகளை ஆய்வு செய்ய செபிக்கு உத்தரவிட்டு, செபியின் விசாரணையை கண்காணிக்க சுப்ரீம் கோர்ட் சிறப்பு குழுவை நியமித்துள்ளது. இதன் அடிப்படையில் செபி தனது விசாரணை அறிக்கையை ஆகஸ்ட் மாதம் சமர்ப்பிக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications