சென்னை: 2024-2025 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கான கருத்துக் கணிப்பை டெலாய்ட் நிறுவனம் வெளியிட்டு உள்ளது. டெலாய்ட் நிறுவனத்தின் "India's Economic Outlook" என்ற அறிக்கையின்படி, இந்தியாவில் ஜிடிபி வளர்ச்சி 6.6 சதவீதமாக இருக்கும் என்று கணித்துள்ளது.
ஜிடிபி என்பது ஒரு நாட்டில் குறிப்பிட்ட காலக் கட்டத்தில் கணக்கிடப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி. இதனை 'Gross Domestic Product (GDP)' என்று ஆங்கிலத்தில் கூறுவர். இதனைக் கருத்தில் கொண்டு தான் ஒரு நாட்டின் பொருளாதாரம், அந்தந்த நிதியாண்டில் குறைந்துள்ளதா கூடியுள்ளதா எனக் கணக்கிடப்படுகிறது.

டெலாய்ட் நிறுவனம் கடந்த 2023-24 நிதியாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.6 - 7.8 சதவீதமாக இருக்கும் என்று கூறியுள்ளது.
2024ஆம் நிதியாண்டில், டெலாய்ட் நிறுவனத்தின் 7.8% GDP கருத்துக்கணிப்புடன் ஒப்பிடும்போது, 2025 ஆம் நிதியாண்டுக்கான குறைந்த ஜிடிபி வளர்ச்சி விகிதத்தை இந்நிறுவனம் கணித்துள்ளது.
2023-24 முதல் 2024-25 வரையிலான GDP வளர்ச்சி குறைவாக இருப்பினும், நடுத்தர வர்க்கத்தின் வளர்ச்சி காரணமாக பிரீமியம் மற்றும் ஆடம்பர பொருட்களுக்கான வளர்ச்சி வலுவான நிலையை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் அந்த அறிக்கையின்படி, 2030 முதல் 2031ஆம் அண்டுக்குள் நடுத்தர முதல் உயர் வருமானம் பெரும் குடும்பங்களின் எண்ணிக்கை, இரண்டு குடும்பங்களில் ஒன்றாக இருக்கும் என்று கணித்துள்ளது. தற்போது நான்கில் ஒரு குடும்பமே உயர் வருமானம் பெரும் நிலையில் உள்ளது.
கடந்த நிதியாண்டிற்கான GDP வளர்ச்சி கணிப்பை 7.6 முதல் 7.8 சதவீதமாக டெலாய்ட் நிறுவனம் மாற்றியுள்ளது. கடந்த ஜனவரியில், 6.9 - 7.2 சதவீத GDP வளர்ச்சியை கணித்திருந்த நிலையில், இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.
டெலாய்ட் நிறுவனத்தின் அறிக்கையின்படி, 2024 - 2025ஆம் நிதியாண்டில், GDP வளர்ச்சி 6.6 சதவீதமாகவும், அடுத்த நிதி ஆண்டில் 6.75 சதவீதமாகவும் இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சமீபத்தில் 2025 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கான கருத்துக் கணிப்பை உலக வங்கி வெளியிட்டது. உலக வங்கி இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 6.6 சதவீதமாக இருக்கும் என்று கணித்துள்ளது. GDP வளர்ச்சியின், டெலாய்ட் நிறுவனத்தின் கருத்துக்கணிப்பும் உலக வங்கியின் கருத்துக்கணிப்பு ஒத்து இருக்கிறது.
மேலும், பணவீக்கம் குறையும் என்றும் உலக வங்கி கணித்துள்ளது, நிதி நிலைமைகள் மேம்படும். வலுவான பொருளாதார வளர்ச்சி மற்றும் சிறப்பாக நிர்வகிப்பு முயற்சிகள் காரணமாக அரசாங்கத்தின் கடன் காலப்போக்கில் குறையும் என்றும் கணித்துள்ளது. இதனை ஏப்ரல் 2024க்கான சௌத் ஏசியன் டெவெலப்மென்ட் அப்டேட்டில் உலக வங்கி தெரிவித்துள்ளது.
2024-25 ஆம் ஆண்டில் தெற்காசியப் பகுதி 6.0 - 6.1% வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளது. இந்தியாவின் வலுவான பொருளாதார நடவடிக்கை காரணமாக, இந்த வளர்ச்சி மற்ற வளர்ந்து வரும் சந்தை மற்றும் வளரும் பொருளாதாரங்களுடன் ஒப்பிடுகையில் பெரிய அளவில் இருக்கும் என்றும் கூறுகிறது. தெற்காசியாவில் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மாலத்தீவுகள், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகியவை அடங்கும்.


Click it and Unblock the Notifications