பெங்களூரு: தைவான் நாட்டை சேர்ந்த டெல்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் தங்களுடைய செயல்பாடுகளை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் தற்போது நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கையை 3,000இல் இருந்து 6,000ஆக உயர்த்துவது என முடிவு செய்துள்ளது. டெல்டா எலக்ட்ரானிக்ஸ் ஓசூரில் மிகப்பெரிய தொழிற்சாலைகளை வைத்துக்கொண்டு இயங்கி வருகிறது குறிப்பிடத்தக்கது.
தைவானை சேர்ந்த டெல்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியாவில் இருக்கும் தங்களுடைய ஊழியர்களின் எண்ணிக்கையை இரண்டு மடங்காக உயர்த்துவது என இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. அண்மையில் தான் டெல்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் பெங்களூருவில் தங்களுடைய மிகப்பெரிய ஆய்வு மையத்தை நிறுவியது.

இதன் மூலம் இந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த புதிய ஆய்வு மற்றும் மேம்பாட்டு மையம் இந்தியாவில் தங்களுடைய செயல்பாடுகளை மேற்கொண்டு விரிவாக்கம் செய்வதற்கு உதவியாக இருக்கும் என டெல்டா எலக்ட்ரானிக்ஸ் கூறுகிறது.
இந்த நிறுவனம் கூடிய விரைவில் இந்தியாவில் 500 மில்லியன் டாலர்களை முதலீடு செய்ய இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. டெல்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் 2015 -16ஆம் ஆண்டிலேயே இந்தியாவில் தங்களுடைய நிறுவனத்தை பெரிய அளவில் விரிவாக்கம் செய்வது என முடிவு செய்திருந்தது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக அது தடைப்பட்டது. தற்போதைய சூழலில் டெல்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் இந்தியாவின் மூன்று இடங்களில் தன்னுடைய ஆய்வு மற்றும் மேம்பாட்டு மையங்களை நிறுவியுள்ளது.
தற்போது இதன் தலைமையகம் குருகுராமில் அமைந்திருக்கும் நிலையில் கூடிய விரைவில் இது பெங்களூருக்கு மாற்றப்படும் என தெரிகிறது. டெல்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தமிழ்நாட்டிலும் உற்பத்தி ஆலைகளை செயல்படுத்தி வருகிறது. எனவே இதற்கு அருகிலேயே தங்களுடைய ஆய்வு மையமும் தலைமையகமும் இருக்க வேண்டும் என இந்த நிறுவனம் கருதுகிறது. பெங்களூரு இந்தியாவின் சிலிக்கான் வேலி என அழைக்கப்படுகிறது.
பெரும்பாலான தொழில்நுட்ப நிறுவனங்களின் மையமாக பெங்களூரு திகழ்ந்து வருகிறது. எனவே டெல்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் பெங்களூருவில் தங்களுடைய ஆய்வு மற்றும் மேம்பாட்டு மையத்தை நிறுவுவதன் மூலம் அதிக திறன் கொண்ட ஊழியர்கள் தங்களுக்கு பணிக்கு கிடைப்பார்கள் என்றும் இது நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவும் என்றும் நம்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் வெளிநாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் இந்தியாவில் 118 global capability centreகளை நிறுவியுள்ளன. இதன் மூலம் இந்தியாவில் தற்போது செயல்பட்டு வரும் global capability centreகளின் எண்ணிக்கை 1660 என உயர்ந்துள்ளது. இது 2030ஆம் ஆண்டுக்குள் இன்னும் அதிகரித்து நாட்டின் ஜிடிபியில் சுமார் 2 சதவீதம் பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Story written by: Devika
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

ஈரான் போரை மையமாக வைத்து புதிய தொழில்: கோடிகளை அள்ளும் டிரம்ப் மகன்கள்!! வெளிச்சத்துக்கு வந்த உண்மை!!



Click it and Unblock the Notifications