நொய்டா, டெல்லி: தைவான் நாட்டை சேர்ந்த டெல்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் 500 மில்லியன் டாலர்களை முதலீடு செய்ய இருப்பதாக 2015ல் அறிவித்திருந்தது, இந்த முதலீட்டை தற்போது முதலீடு செய்ய உள்ளது.
டெல்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் மின்னணு சாதன உற்பத்தி நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் உலகில் 200 இடங்களில் உற்பத்தி ஆலை, ஆய்வு மற்றும் மேம்பாட்டு மையங்கள், விற்பனை நிலையங்கள் உள்ளிட்டவற்றை வைத்திருக்கிறது. ஆப்பிள் மற்றும் டெஸ்லா நிறுவனங்களுக்கு தேவையான மின்சார உபகரணங்களை இந்த நிறுவனம்தான் தயாரித்து வழங்கி வருகிறது. இது தவிர மின்சார வாகனங்கள், சார்ஜர்கள் , கணினிகளுக்கான உபகரணங்களையும் தயாரிக்கிறது.

இந்த நிறுவனம் இந்தியாவில் தங்களுடைய தொழிலை விரிவாக்கம் செய்ய இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கிரேட்டர் நொய்டா பகுதியில் நடைபெற்ற Elecrama 2025 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது டெல்டா எலக்ட்ரானிக்ஸ் இந்தியா நிறுவனத்தின் தலைவர் பெஞ்சமின் லின் இந்தியாவில் 2003 ஆம் ஆண்டிலிருந்து தங்களுடைய நிறுவனம் வெற்றிகரமாக இயங்கி வருகிறது எனக் கூறினார்.
மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவில் தங்களுடைய செயல்பாடுகளை விரிவாக்கம் செய்ய இருப்பதாகவும் இதற்காக 500 மில்லியன் டாலர்களை முதலீடு செய்ய இருப்பதாகவும் அப்போது அவர் கூறினார். டெல்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தை பொருத்தவரை இந்தியா தங்களுடைய முக்கியமான சந்தை என அவர் குறிப்பிட்டார். மேலும் இந்தியாவில் தொழில் மற்றும் எரிசக்தி துறையில் முக்கிய நிறுவனமாக டெல்டா எலக்ட்ரானிக்ஸ் செயல்படும் என சுட்டிக்காட்டிய அவர் கிருஷ்ணகிரியில் அமைந்திருக்கும் தங்களுடைய ஆலையில் பல்வேறு பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.
கிருஷ்ணகிரி உற்பத்தி ஆலையை விரிவாக்கம் செய்ய இருப்பதாகவும் 500 மில்லியன் டாலர்களை அதற்காக ஒதுக்கீடு செய்ய இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். சர்வதேச தரத்திலான மின்னணு சாதனங்களுக்கு தேவையான உபகரணங்களை தங்கள் நிறுவனம் இந்தியாவில் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய போகிறது என்றார்.
தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டெல்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கே மின்சார வாகனங்களுக்கு தேவையான சார்ஜிங் வசதிக்கான உள்கட்ட அமைப்புகள் மற்றும் கன்வெர்ட்டர், ரெக்டிஃபையர்கள் உள்ளிட்டவற்றை உற்பத்தி செய்கிறது.
டெல்டா நிறுவனம் தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சாலையில் 2016 ஆம் ஆண்டிலிருந்து தங்களுடைய உற்பத்தி ஆலையை நிறுவி செயல்படுத்தி வருகிறது . அதேபோல உத்தராகண்ட் மாநிலம் ருத்ராபூரில் 2008 ஆம் ஆண்டிலிருந்து உற்பத்தி ஆலையை நிறுவி பல்வேறு உபகரணங்களை தயாரித்து ஏற்றுமதி செய்து வருகிறது. டெல்லி அருகே குருகுவானிலும் இந்த நிறுவனத்தின் உற்பத்தி ஆலை இயங்கி வருகிறது.
Story written by: Devika
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications