கொரோனா தொற்றின் முதல் அலையில் இருந்து இந்திய பொருளாதாரம் மீண்டு வர அனைத்து தரப்பிலும் பல்வேறு சலுகை அளிக்கப்பட்ட நிலையில், 2வது அலை தொற்று பொருளாதார வளர்ச்சியைக் கடந்த சில மாதங்களாகப் பாதித்து வருகிறது.
இந்நிலையில் இந்தியா-வில் தற்போது அதிகரித்து வரும் டெல்டா வகைக் கொரோனா வைரஸ் நாட்டின் பொருளாதாரத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என்றும், நாட்டின் பணவீக்கத்தைப் பெரிய அளவில் அதிகரிக்கும் என்றும் ரெயூட்டர்ஸ் பொருளாதார வல்லுனர்கள் குழு தெரிவித்துள்ளது.
இந்திய பொருளாதாரம்
இந்திய பொருளாதாரம் தற்போது இருக்கும் சூழ்நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி தனது கொள்கையில் முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டியது கட்டாயமாகியுள்ளது. இது மட்டும் அல்லாமல் கடந்த 2 மாதமாக நாட்டின் பணவீக்கம் அப்பர் லிமிட் ஆன 6 சதவீதத்தைத் தாண்டியுள்ளது.
ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கி கடந்த வாரம் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடைய சிறப்பான வாய்ப்புகள் உள்ளது, ஆனால் பணவீக்கம் அதிகரிப்பு பெரும் பிரச்சனையாக இருக்கும் என அறிவித்ததுள்ளது. இதன் மூலம் நாட்டின் முன்னணி வங்கிகளின் கணிப்பை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
டெல்டா வகைக் கொரோனா வைரஸ்
ஆனால் தற்போது இந்தியாவில் சில மாநிலங்களில் டெல்டா வகைக் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வாய்ப்புகளைப் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரெயூட்டர்ஸ் கருத்துக் கணிப்பு
52 பொருளாதார வல்லுனர்கள் பங்கு கொண்ட ரெயூட்டர்ஸ் கருத்துக் கணிப்பில் டெல்டா வகைக் கொரோனா வைரஸ் பாதிப்பு 2021-22 நிதியாண்டின் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும் எனத் தெரிவித்துள்ளது. இதேபோல் பலர் பணவீக்கம் முக்கியப் பிரச்சனையாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளனர்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications