இந்தியாவில் பெரிய வீடுகளுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டின் முதல் பாதியில், அதாவது ஜனவரி முதல் ஜூன் வரையிலான மாதங்களில் குறைந்தது 51 சதவீதம் பேர் 3 BHK வீடுகளையும் மற்ற 39 சதவீதம் பேர் 2 BHK வீடுகளையும் தேர்ந்தெடுத்ததாக திங்களன்று வெளியான ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Anarock-FICCI நடத்திய சமீபத்திய ஆய்வின்படி, பிரீமியம் மற்றும் லக்சரி வீடுகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. ஏனெனில் 28 சதவீதம் பேர் இப்போது ரூ.90 லட்சம் ரூபாய் முதல் ரூ 1.5 கோடி வரை விலையுள்ள வீடுகளை விரும்புகின்றனர். இது கோவிட் தொற்றுநோய் காலத்திற்கு முன்பு 18 சதவீதமாக இருந்தது.

கோவிட் 19 தொற்று நோய்க்குப் பிறகு மலிவு விலை வீடுகளுக்கான தேவை குறைந்து வருகிறது. ஆரம்பத்தில் இந்தப் பிரிவில் தொற்றுநோய் காரணமாக நிதி ரீதியாக பாதிக்கப்பட்ட ஏராளமான வாடிக்கையாளர்கள் இருந்தனர். ஆனால் இப்போது இந்த பிரிவின் கீழ் வீடு வாங்குபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
அதேபோல கணக்கெடுப்பில் குறைந்தபட்சம் 53 சதவீத வீடு வாங்குபவர்கள் முக்கியமான நகரங்களில் கிடைக்கக்கூடிய மலிவு விலை வீடுகள் குறித்து அதிருப்தி அடைந்துள்ளதாகவும் கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.
"எங்கள் ஆய்வில் கலந்து கொண்ட அதிருப்தியடைந்த மலிவு விலையிலான வீடு தேடுபவர்களில், 92% பேர் வீட்டின் இருப்பிடத்தை மிகப்பெரிய குறைபாடு என்று அடையாளம் கண்டுள்ளனர். அதே நேரத்தில் 84% பேர் குறைந்த கட்டுமான தரம் மற்றும் வடிவமைப்பு கூறுகளை முக்கிய தடையாகக் குறிப்பிடுகின்றனர். சுமார் 68% பேர் மலிவு விலை வீடுகளுக்கான அளவு மிகச் சிறிய அளவில் உள்ளதாக கருதுகின்றனர்", என்று அனராக் குழுமத்தின் தலைவர் அனுஜ் பூரி கூறினார்.
கடந்த 1 வருடத்தில் ரியல் எஸ்டேட் விலை தொடர்ந்து அதிகரித்திருந்தாலும் பெரிய அளவிலான வீடுகளை வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 3 BHK வீடுகளுக்கான தேவை குறிப்பாக சென்னை, ஹைதராபாத், டெல்லி என்சிஆர் மற்றும் பெங்களூரில் அதிகமாக இருப்பதாக நகரவாரியான பகுப்பாய்வு சுட்டிக்காட்டுகிறது. கணக்கெடுப்பில் கலந்து கொண்ட 50 சதவீதத்திற்கு அதிகமானோர் மற்ற பிளாட்டுகளை விட பெரிய அளவிலான வீடுகளை அதிகம் விரும்புவதாகவும் பதில் அளித்துள்ளனர். மாறாக, கொல்கத்தா, மும்பை மற்றும் புனேவில் 40 சதவீதத்துக்கும் அதிகமானோர் 2BHK வீடுகள் தங்களுக்கு விருப்பமாக உள்ளதாகக் கூறியுள்ளனர்.
2024-ஆம் ஆண்டின் முதல் பாதியில் குடியேறுவதற்கு தயாராக இருக்கக்கூடிய வீடுகளின் தேவை விகிதம் 20:25 ஆக உள்ளது. இது 2020-ஆம் ஆண்டின் முதல் பாதியில் 46:18 ஆக இருந்தது. இந்த மாற்றத்திற்கான ஒரு முக்கிய காரணம் பெரும்பாலான வீடு வாங்குபவர்கள் பிரபல டெவலப்பர்களின் திட்டங்களையே விரும்புகின்றனர். இவர்கள் சரியான நேரத்தில் தங்களுடைய வீடுகளை குடியேற ஒப்படைப்பார்கள் என்றும் மக்கள் நம்புவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!



Click it and Unblock the Notifications