2016 நவம்பர் 8ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியாவில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என அறிவித்தார். இதனை கடுமையாக விமர்சனம் செய்தவர் தான் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங். ஒரு பொருளாதார நிபுணராக இந்த பணமதிப்பு நீக்க நடவடிக்கை நாட்டு மக்களிடையே எந்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்த விரிவான பார்வையை அவர் அப்போது வெளியிட்டு இருந்தார்.
இந்தியாவில் சுமார் 85 சதவீதத்திற்கும் அதிகமானவர்களின் கைகளில் இருக்கக்கூடிய ஒரு பணம் இனி செல்லாது என அறிவித்து ஒரு மில்லியன் இந்தியர்களின் நம்பிக்கையை அழித்துவிட்டார் பிரதமர் மோடி என மன்மோகன் சிங் தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். ஒரு அவசர முடிவு கோடிக்கணக்கான இந்தியர்கள் தங்களையும் தங்கள் பணத்தையும் பாதுகாக்கும் என அரசின் மீது வைத்திருந்த நம்பிக்கையை மோடி தகர்த்தெறிந்து விட்டார் என கூறியிருந்தார்.

இந்தியாவில் கருப்பு பணத்தை ஒழிக்க வேண்டும் , எல்லைக்கு அப்பால் இருக்கும் எதிரிகளிடம் போலி தாள்கள் சென்று நாச வேலைகளுக்கு பயன்படுத்தப்படுவதை தடுக்க வேண்டும் என்ற நோக்கம் வரவேற்கக் கூடியது , ஆனால் இந்த பணமதிப்பு நீக்க நடவடிக்கையை செயல்படுத்திய விதம் ஒரு நிர்வாகத் தோல்வி எனக் குறிப்பிட்டார்.
இந்தியாவில் கருப்பு பணம் அனைத்துமே ரொக்கமாக தான் இருக்கிறது என்ற ஒரு பிம்பத்தை அரசு கொண்டு வந்திருக்கிறது. ஆனால் அது உண்மை கிடையாது என கூறினார். இந்தியாவில் கிட்டத்தட்ட 90 சதவீத தொழிலாளர்கள் இன்னமும் தங்களுடைய சம்பளத்தை ரொக்கமாகத்தான் வாங்குகின்றனர் என்றார்.
கட்டுமான பணியாளர்கள் தொடங்கி , வேளாண் ஊழியர்கள் வரை ரொக்கமாகத்தான் அவர்களிடம் பணம் செல்கிறது. நீங்கள் அந்த பணத்தை தான் கருப்பு பணம் எனக் கூறுகிறீர்களா என கேள்வி எழுப்பியிருந்தார் . சாதாரண மக்கள் புழங்கக்கூடிய பணத்தை கருப்பு பணம் எனக் கூறி நூற்றுக்கணக்கான ஏழை மக்களின் வாழ்க்கையை சிதைப்பது மிகப்பெரிய துயரம் என தெரிவித்திருந்தார். மேலும் மத்திய அரசின் இந்த பண மதிப்பு நீக்க முடிவு மக்களுக்கு அரசு ஆற்ற வேண்டிய அடிப்படை கடமைக்கு எதிரானது என கூறினார்.
கருப்பு பணத்தை ஒழிக்க வேண்டும் என்பது முக்கியமானது தான் ஆனால் கருப்பு பணம் அனைத்துமே ரொக்கம் ஆகத்தான் இருக்கிறது என்ற வாதத்தை தான் ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்தார். 500 ரூபாய் ,1000 ரூபாய் நோட்டை ஒழிக்கிறேன் எனக் கூறி 2000 ரூபாய் நோட்டுகளை கொண்டு வந்து உண்மையாகவே கருப்பு பணம் பதுக்குபவர்களுக்கு சாதகமான ஒரு நிலையை தான் அரசு கொண்டு வந்திருக்கிறது என மன்மோகன் சிங் அப்போது சாடினார்.
இந்தியாவில் கோடிக்கணக்கான ஏழை இந்தியர்கள் தங்களுடைய அடிப்படை வாழ்வாதத்திற்காக பணம் எடுக்க நீண்ட வரிசையில் காத்திருப்பதை பார்க்கும்போது மனம் உடைகிறது, போர்க்காலத்தில் உணவுக்காக நீண்ட வரிசையில் நின்று வந்தவன் நான். ஒரு நாள் என்னுடைய சொந்த நாட்டு மக்கள் இப்படி பணத்திற்காக நீண்ட வரிசையில் காத்திருப்பார்கள் என நான் கற்பனை கூட செய்ததில்லை இந்த துன்பங்கள் அனைத்தும் ஒரு அவசர முடிவின் விளைவு என தெரிவித்தார்.
பின்னர் நாடாளுமன்றத்திலும் இது சம்பந்தப்பட்ட விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய மன்மோகன் சிங், மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை திட்டமிடப்பட்ட திருட்டு; சட்டப்பூர்வ கொள்ளை என்றார்.
மத்திய அரசின் இந்த நடவடிக்கை மீது குற்றம், குறை கண்டுபிடிக்க வேண்டும் என்பது எனது இலக்கல்ல என கூறிய அவர் பணமதிப்பு நீக்க நடவடிக்கை எதிர்காலத்தில் நல்ல விளைவை ஏற்படுத்தும் என்பவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது ஜான் கென்னியின் "நாட்கள் நகர நாம் அனைவரும் செத்து மடிவோம்" என்ற வார்த்தைகளை தான் என்றார். மன்மோகன் சிங்கின் இந்த அதிரடியான பேச்சு பலரையும் சிந்திக்க வைக்கும் வகையில் அமைந்தது.
Story written by: Devika
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!



Click it and Unblock the Notifications