பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அறிவித்தது. இதன் மூலம் ஊழல் மற்றும் கருப்பு பணத்தை ஒழிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அந்த நெருக்கடியான காலகட்டத்தில் மக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகினர். பலரும் கைகளில் பணம் இருந்தும் அதனை தேடி அலையும் சூழலே இருந்து வந்தது. பலரும் வங்கி வாசல்களில் மயங்கி விழுந்த சம்பவங்கள் பலவும் உண்டு.
கடும் குற்றச்சாட்டுகள்
ஆனாலும் இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கருப்பு பணம் என்பது ஒழிக்கப்படவில்லை என எதிர்கட்சிகள் தாறுமாறாக குற்றம் சாட்டின. பழைய ரூபாய் தாள்கள் செல்லாது என அறிவித்த அரசு, புதியதாக 2000 ரூபாய் உள்ளிட்ட பல தாள்களை அறிமுகம் செய்தது. இது பதுக்கலுக்கு இன்னும் உதவிகரமாக இருப்பதாகவும் ஒரு தரப்பு குற்றசாட்டும் இருந்து வருகின்றது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லாது
இதற்கிடையில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையானது செல்லாது என அறிவிக்ககோரி பல வழக்குகள் தொடரப்பட்டது. இது குறித்தான வழக்கில் பணமதிப்பிழப்புக்கு முன் மத்திய அரசுக்கும், இந்திய ரிசர்வ் வங்கிக்கும் இடையே ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. இதனை செயல்படுத்துவதற்கு ஒரு நியாயமான தொடர்பும் இருந்துள்ளது. இதனால் பெரிய பாதிப்பு இல்லை.
உச்ச நீதிமன்றம் ஆதரவு
பணமதிப்பிழப்பு நீக்கத்தினை கொண்டு வர ரிசர்வ் வங்கிக்கு சுதந்திரமான அதிகாரம் இல்லை. மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் இது குறித்தான ஆலோசனைக்கு பிறகு இப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆக பணமதிப்பிழப்பின் நோக்கம் எட்டப்பட்டதா என்பது முக்கியத்துவம் பெறவில்லை. எனினும் மத்திய அரசு கொண்டு வந்த இந்த நடவடிக்கையை உச்ச நீதிமன்றம் ஆதரித்துள்ளது.
முடிவு எட்டப்படவில்லை
இதற்கிடையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாக ப சிதம்பரம் தெரிவித்துள்ளார். மேலும் அவரின் ட்விட்டர் பக்கத்தில், உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். இருப்பினும், பணமதிப்பிழப்பிற்காக கூறப்பட்ட நோக்கங்கள் எட்டப்பட்டதா என்பதை நீதிபதிகள் சுட்டிக்காட்ட வேண்டியது அவசியம் என கூறியுள்ளார்.
மாறுபட்ட தீர்ப்பு
உச்ச நீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பு வழங்கி பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் உள்ள சட்டவிரோதம் மற்றும் முறைகேடுகளை சுட்டிக்காட்டியதில் மகிழ்ச்சியடைகிறோம்.
உச்ச நீதிமன்ற வரலாற்றில் பதிவுசெய்யப்பட்ட புகழ்பெற்ற கருத்து வேறுபாடுகளில் இந்த மாறுபட்ட தீர்ப்பு இடம் பெறும் என்று சிதம்பரம் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
வழக்குகள் தள்ளுபடி
உச்ச நீதிமன்றத்தில் பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், 5 நீதிபதிகள் இந்த விவகாரத்தில் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளனர். இது பொருளாதார ரீதியிலான கொள்கை மதிப்பு என்பதால் இது செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 5 நீதிபதிகளில் ஒருவர் மட்டும் எதிராக தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.
கருப்பு பணம் ஒழிந்துவிட்டதா?
பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் சில பெரும் கைகள் காப்பாற்றப்பட்டு இருப்பதாகவும், ஆனால் பாமர மக்கள் தான் இதனால் ஏற்பட்ட பிரச்சனையை எதிர்கொண்டுள்ளனர் என்றும் ஒரு தரப்பு வாதிட்டு வருகின்றது. எது எப்படியோ கருப்பு பணம் ஒழிந்துவிட்டதா? ஊழல் ஒழிந்து விட்டதா? என்பது தான் மக்களின் கேள்வியாக உள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications