இந்திய டெலிகாம் சந்தையில் ஏற்கனவே போட்டி அதிகமாக இருக்கும் நிலையில் எலான் மஸ்க்-ன் ஸ்டார்லிங்க் தனது சேவையை இந்தியாவில் விரிவாக்கம் செய்ய விரும்புவதாக அறிவித்த போது, பிராண்ட்பேன்ட் சேவையில் இருக்கும் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
எலான் மஸ்க் ஸ்டார்லிங்க் சேவைவை அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளைத் தொடர்ந்து இந்தியாவில் இச்சேவையை விரிவாக்கம் செய்யச் சில நாட்களுக்கு முன்பு டொலிகாம் அமைச்சகத்திடம் அனுமதி கோரினார்.
இந்தியாவில் ஸ்டார்லிங்க்
ஸ்பேஸ்க் எக்ஸ் நிறுவனத்தின் தலைமையில் இயங்கும் ஸ்டார்லிங்க் சேவையின் விண்ணப்பத்தை ஆய்வு செய்த டெலிகாம் துறை அமைச்சகம், சேவையை இந்தியாவில் துவங்கத் தேவையான அனுமதிகளைப் பெற அறிவுறுத்தியுள்ளது. இதன் மூலம் ஸ்டார்லிங்க் சேவை இந்தியாவில் துவங்க எவ்விதமான மறுப்பும் மத்திய அரசு தெரிவிக்கவில்லை என்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது.
முக்கியமான விதிகள்
எலான் மஸ்க் இந்தியாவில் தனது ஸ்டார்லிங்க் சேவையைத் துவங்க வேண்டும் என்றால் சில முக்கிய இந்தியச் சட்ட விதிகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். இதன் படி இந்திய டெலிகிராப் சட்டம் 1885, இந்திய வையர்லெஸ் டெலிகிராபி விதி 1933, இந்திய சேட்காம் பாலிசி 2000, தகவல் தொழில்நுட்ப விதி 2000 ஆகிய முக்கியமான சட்ட விதிகளை முழுமையாகப் பூர்த்தி செய்தால் மட்டுமே இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவை விரிவாக்கம் செய்ய முடியும். இல்லையெனில் அனுமதி வழங்கப்படமாட்டாது.
இந்திய டெலிகாம் சந்தை
இந்திய டெலிகாம் சந்தையில் ஜியோ அறிமுகத்திற்குப் பின் மிகப்பெரிய வர்த்தக மாற்றங்கள், வர்த்தகம் பாதிப்பு, சிறிய டெலிகாம் நிறுவனங்கள் மூடல் அல்லது விற்பனை எனப் பல மோசமான நிலைகளைத் தாண்டி தற்போது வெறும் 4 நிறுவனங்கள் மட்டுமே போட்டிப்போட்டு வருகிறது.
டெலிகாம் நிறுவனங்களின் நிலை
ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா, பிஎஸ்என்எல் - எம்டிஎன்எல் ஆகிய நிறுவனங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் வோடபோன் ஐடியா, பிஎஸ்என்எல் - எம்டிஎன்எல் ஆகிய இருதரப்பும் தொடர்ந்து வாடிக்கையாளர்கள் மற்றும் வர்த்தகத்தை இழந்து தவித்து வருகிறது. ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் வாடிக்கையாளர்களைத் தக்க வைப்பதில் போராடி வருகிறது.
முகேஷ் அம்பானிக்கு சவால்
இந்நிலையில் டாப் டெலிகாம் நிறுவனங்களுக்கு அதிக லாபம் பார்க்கும் பிராண்ட்பேன்ட் சேவையில் தற்போது எலான் மஸ்க்-ன் ஸ்டார்லிங்க் போன்ற சிறப்பான சேவை வரும் போது பெரிய அளவிலான வர்த்தகப் பாதிப்பை எதிர்கொள்ள வேண்டி வரும்.
இந்திய டெலிகாம் நிறுவனங்களை ஓரம்கட்டி வந்த முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ எலான் மஸ்க்-ன் ஸ்டார்லிங்க்-ஐ எப்படி எதிர்கொள்ளப் போகிறது..?!


Click it and Unblock the Notifications