டொனால்ட் டிரம்ப் அதிரடி..! பார்ட் டைம் வேலையை கைவிடும் இந்திய மாணவர்கள்..!

டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் சட்ட விரோதமாக அமெரிக்காவில் குடியேறும் நபர்கள் மீது கடும் நடவடிக்கையை எடுத்து வருகிறது. அமெரிக்காவில் உயர் கல்வி பயிலும் சில இந்திய மாணவர்கள் கல்லூரி நேரத்திற்கு பிறகு பகுதி நேரமாக வேலை செய்து வருகின்றனர். ஆனால் ட்ரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையின் காரணமாக தங்கள் பகுதிநேர வேலையிலிருந்து மாணவர்கள் வெளியேற தொடங்கியுள்ளனர்.

ஏனெனில் அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற வெறும் 3 நாட்களில் 538 பேர் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியதை அடுத்து கைது செய்யப்பட்டனர். இதில் நூற்றுக்கணக்கானோர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

 டொனால்ட் டிரம்ப் அதிரடி..! பார்ட் டைம் வேலையை கைவிடும் இந்திய மாணவர்கள்..!

அமெரிக்கா போன்ற லிவிங் காஸ்ட் அதிகம் உள்ள நாட்டில் பகுதி நேரமாக வேலை செய்வதற்கான தேவையும், வருமானம் அதிகமாக இருக்கும் காரணத்தால் வெளிநாட்டு மாணவர்கள் பகுதி நேர வேலைக்கு செல்வது அதிகம். இந்த நிலையில்

டிரம்ப் அதிரடி நடவடிக்கையில் சிக்கிவிட கூடாது என்ற அச்சத்தில் இந்திய மாணவர்கள் சொந்த ஊருக்கே திரும்பிச் சென்று விடுவோமோ? என்ற பயத்தில் தங்கள் பார்ட் டைம் வேலைகளை விட்டுவருகின்றனர்.
அதிலும் சில மாணவர்கள் அவர்களது குடும்பத்தினர் தங்கள் கல்விக்காக வாங்கிய லோன்களை கருத்தில் கொண்டு இது போன்ற வேலைகளை செய்து வந்தனர். டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் இந்த முடிவால் பலரும் தங்களுடைய வேலைகளை இழந்துள்ளனர்.

அமெரிக்காவில் மாஸ்டர்ஸ் டிகிரி படிக்கும் மாணவர் ஒருவர், "தன் பெற்றோர் உயர்கல்விக்காக அமெரிக்கா அனுப்ப கடன் வாங்கியதாகவும், அவர்களின் சுமையை அதிகரிக்காமல் இருக்க சிறு வேலைகளை செய்து வருவதாகவும், வகுப்புகளுக்கு பிறகு பகுதிநேர வேலை செய்யாமல் இங்கு வாழ்வது கடினம்" என்றும் கூறியுள்ளார்.

மற்றொரு மாணவர் "எனது மாதாந்திர செலவுகளை ஈடுகட்ட கல்லூரி நேரத்திற்கு பிறகு ஒரு சிறிய ஹோட்டலில் வேலை செய்கிறேன். இங்கு ஒரு மணி நேரத்திற்கு 7 டாலர் சம்பாதிக்கிறேன். ஒவ்வொரு நாளும் 6 மணி நேரம் வரை வேலை செய்கிறேன் என்று கூறியுள்ளார். குடியேற்ற அதிகாரிகள் அங்கீகரிக்கப்படாத வேலை வாய்ப்புகளை எதிர்த்து நடவடிக்கை எடுப்பார்கள் என்ற பயத்தில் தான் வேலையை விட்டு வெளியேற வேண்டி இருந்தது என்று மற்றொரு மாணவர் கூறியுள்ளார்.

F-1 விசாக்களில் அமெரிக்காவில் உள்ள பல மாணவர்கள், வாரத்திற்கு 20 மணிநேரம் வரை வேலை செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். தங்கள் அன்றாட செலவுகளை ஈடுகட்ட பகுதிநேர வேலைகளை நம்பியுள்ளனர். ஆனால் அமெரிக்க அரசு குடியேற்ற கொள்கைகளை தீவிரமாக கடைபிடிப்பதால் சொந்த நாடுகளுக்கு திரும்பி விடுவோமோ? என்ற பயத்தில் மாணவர்கள் பலர் வேலையை விட்டு வெளியேறியுள்ளனர்.

டொனால்ட் டிரம்பின் கடுமையான குடியேற்ற கொள்கைகள் நடைமுறைக்கு வந்த முதல் நாளே.. அமெரிக்காவிலிருந்து நூற்றுக்கணக்கான நபர்கள் சட்ட விரோதமாக குடியேறியதை அடுத்து ராணுவ விமானங்கள் மூலம் தங்கள் நாடுகளுக்கு அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+