இந்திய டெலிகாம் சந்தையில் ஜியோ உருவாக்கிய வர்த்தகப் போட்டியில் சிக்கித்திணறி வரும் டெலிகாம் நிறுவனங்களுக்குப் புதிய பிரச்சனையாகப் பிராண்ட்பேன்ட் சேவைத் துறைக்குள் எலான் மஸ்க்-ன் ஸ்டார்லிங்க் நுழைய உள்ளது.
இந்திய டெலிகாம் சந்தையில் ஜியோ உருவாக்கிய வர்த்தகப் போட்டியில் சிக்கித்திணறி வரும் டெலிகாம் நிறுவனங்களுக்குப் புதிய பிரச்சினையாகப் பிராண்ட்பேன்ட் சேவைத் துறைக்குள் எலான் மஸ்க்-ன் ஸ்டார்லிங்க் நுழைய உள்ளது.
மத்திய டெலிகாம் துறை ஆய்வு
இந்நிலையில் இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவை விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ள ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், இந்திய டெலிகாம் துறையிடம் அனுமதி கோரியுள்ளது. இந்நிலையில் டெலிகாம் துறை எலான் மஸ்க்-ன் இந்த ஸ்டார்லிங்க் திட்டத்தில் ஏதேனும் பிரச்சனை உள்ளதா? இந்திய அரசின் அனைத்து டெலிகாம் மற்றும் தொழில்நுட்ப விதிகளையும் பூர்த்தி செய்கிறதா..? என்பதை ஆய்வு செய்கிறது.
முக்கியச் சட்டங்கள்
இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவையைக் கொண்டு வர இந்திய டெலிகிராப் சட்டம் 1885, இந்திய வையர்லெஸ் டெலிகிராபி விதி 1933, இந்திய சேட்காம் பாலிசி 2000, தகவல் தொழில்நுட்ப விதி 2000 ஆகியவற்றை முழுமையாகப் பூர்த்தி செய்ய வேண்டும்.
சரி அப்படி ஸ்டார்லிங்க் திட்டத்தில் என்ன இருக்கு..? மற்ற பிராண்ட்பேன்ட் சேவைக்கும் எலான் மஸ்க் - ஸ்பேஸ்எக்ஸ் இந்தச் சேவைக்கும் என்ன வித்தியாசம்? வாங்கப் பார்ப்போம்.
இண்டர்நெட் இணைப்பு வித்தியாசம்
பொதுவாக நாம் பயன்படுத்தும் இண்டர்நெட் இணைப்பு அனைத்தும் டெலிகாம் நிறுவனங்கள் வாயிலாகவும், Sea cable வாயிலாகவும் தான் பெறுகிறோம். மேலும் டெலிகாம் நிறுவனங்களின் டெலிகாம் சிக்னல் டவர்களைப் பொருத்தே நம்முடைய இண்டர்நெட் இணைப்பின் வேகம் இருக்கும். குறிப்பாகப் பிராண்ட்பேண்ட் சேவை பெற வேண்டும் என்றால் கேபிள் வாயிலாகத் தான் பெற வேண்டும், அதிலும் அதிக வேகம் கொண்ட இணைப்பும் வேண்டும் என்றால் பைபர் ஆப்டிக் கேபிள் கட்டாயம்.
செயற்கைக்கோள் மூலம் இண்டர்நெட்
இந்தக் கட்டமைப்பு எதுவுமே இல்லாமல் இண்டர்நெட் சேவை அளிப்பது தான் இந்த ஸ்டார்லிங்க். எலான் மஸ்க்-ன் கனவுத் திட்டமாக இருக்கும் இந்த ஸ்டார்லிங்க் சேவை மூலம் செயற்கைக்கோள்-ல் இருந்து நேரடியாக நம் வீட்டிற்கே நேரடியாக இண்டர்நெட் இணைப்பைப் பெற முடியும். இதனால் எந்த டெலிகாம் நிறுவனத்தையும் நம்பியிருக்கத் தேவையில்லை, இதுமட்டும் அல்லாமல் இந்தச் சேவையைப் பெறுவதும் பயன்படுத்துவதும் மிகவும் எளிது.
அதிவேக இண்டர்நெட்
ஒரே ஒரு Antenna வாங்கினால் போது, 24X7 மணிநேரமும் எவ்விதமான தடையும் இல்லாமல், காடு, மலை என எந்த வித்தியாசமும் இல்லாமல் செயற்கைக்கோள்-ல் இருந்து நேரடியாக அதிவேக இண்டர்நெட் சேவையைப் பெறலாம்.
ஸ்டார்லிங்க் இண்டர்நெட் சேவையை உலகம் முழுவதும் விரிவாக்கம் செய்வதற்காகத் தொடர்ந்து செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது ஸ்பேஸ்எக்ஸ்.
300 MBPS இண்டர்நெட் வேகம்
எலான் மஸ்க் தலைமையிலான ஸ்டார்லிங்க் சேவையில் தற்போது 50 முதல் 150 MBPS வேகத்தில் மட்டுமே இண்டர்நெட் சேவை கிடைத்து வரும் நிலையில், 2021 முடிவிற்குள் இதன் அளவீட்டை 300 MBPS வேகத்திற்கு உயர்த்த திட்டமிட்டு உள்ளது. இதற்காக அடுத்தடுத்த செயற்கைகோள்கைகளை விண்ணில் செலுத்தி வருகிறது ஸ்பேஸ்எக்ஸ்.
பெரு நகரங்களில் முதலில் அறிமுகம்
ஸ்டார்லிங்க் இணையத் தளத்தில் இந்தியாவில் இச்சேவையைப் பெறுவதற்காக ப்ரீ புக்கிங் சேவை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
முதற்கட்டமாக ஸ்டார்லிங்க் சேவை இந்தியாவில் முக்கிய நகரங்களான டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத், பெங்களூரு ஆகிய நகரங்களில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது ஸ்டார்லிங்க நிறுவனம்.
More From GoodReturns

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications