அரசு அனுமதி உண்டு.. ஆனாலும் அத்தியாவசிய பொருட்கள் டெலிவரியில் நீடிக்கும் பிரச்சனை.. என்ன செய்வது!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாடு முழுவதிலும் நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், கடந்த சில தினங்கள் முதல் கொண்டு இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் மக்கள் அதிகமாக கூடும் இடங்கள், மக்கள் யாரும் முக்கியமான அத்தியாவசிய தேவை தவிர, அத்தியாவசிய தேவை தவிர யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்றும் கூறபட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆன்லைன் சில்லறை வர்த்தக நிறுவனங்களான அமேசான், பிளிப்கார்ட், ஸ்விக்கி, சோமேட்டோ கூட தடை செய்யப்பட்டன. எனினும் தங்கள் அத்தியாவசிய தேவைக்காக மக்கள் அதிகளவில் வெளியே வரும் நிலையில், ஆன்லைன் சில்லறை வர்த்தக நிறுவனங்களுக்கு மட்டும் தற்போது சற்று தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

நீடித்து வரும் சிக்கல்

நீடித்து வரும் சிக்கல்

எனினும் நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ள 144 தடை கட்டுப்பாடுகள் காரணமாக டெலிவரி செய்வதில் பல சிக்கல்கள் நீடித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக தங்களது டெலிவரி சேவை மிக பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் மத்திய மாநில அரசுகள் டெலிவரி செய்ய அனுமதி கொடுத்தாலும், உள்ளூர் அத்தாரிட்டிகள் அனுமதி கொடுப்பதில் சில சிக்கல்களை சந்தித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

ஆர்டர்கள் குறைவு

ஆர்டர்கள் குறைவு

இது குறித்து வெளியாக அறிக்கையில் அத்தியாவசிய பொருட்களை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் அரசின் வழிகாட்டுதல்கள் இருந்த போதிலும், உள்ளூர் அதிகாரிகள் தடை விதித்துள்ளமையால் நாங்கள் முழுமையாக செயல்படவில்லை என்றும் டெலிவரி நிறுவனங்கள் கூறியுள்ளன. குருகிராமை அடிப்படையாகக் கொண்ட ஈ-காமர்ஸ் தளமான பிக்பாஸ்கெட் நிறுவனம் மும்பையில், சாதாரண நாட்களை விட, தற்போது ஆர்டர்கள் குறைந்துள்ளதாகவும் கூறியுள்ளது.

டெலிவரியில் பிரச்சனை
 

டெலிவரியில் பிரச்சனை

மேலும் உள்ளூர் அதிகாரிகள் கிடங்குகளை மூடவும் கூறி வருகின்றனர். மேலும் வாகனங்கள் மாநில எல்லையை தாண்டுவதை தடுக்கின்றனர். இதனால் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் பிரச்சனை ஏற்படுகிறது. குறிப்பாக மும்பை, என்சிஆர், கொல்கத்தா, சென்னை, அகமாதாபாத், ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் டெலிவரி சரிவர செய்ய முடிவதில்லை என்றும் டெலிவரி நிறுவனங்கள் கூறுகின்றன.

விநியோக சங்கிலியிலும் பிரச்சனை

விநியோக சங்கிலியிலும் பிரச்சனை

இதனால் நாங்கள் எங்கள் விநியோக சங்கிலியில் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறோம். இதனால் எங்களால் வீட்டு உபயோகப் பொருட்கள், சுகாதாரப் பொருட்கள், குழந்தைகளுக்கு தேவையான மருந்துகள், மருந்துகள் என பல பொருட்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறோம். ஆனால் சில கட்டுப்பாடுகளால் எங்களால் டெலிவரி செய்ய முடியவில்லை. இதனால் விற்பனையாளர்களிடம் நாங்கள் வாங்குவதை கூட குறைத்துள்ளோம்.

டெலிவரியில் தாமதம்

டெலிவரியில் தாமதம்

இந்த நிலையில் மார்ச் 23ம் தேதி வாக்கில், ஆன்லைன் சில்லறை வர்த்தக நிறுவனங்கள் 40% டெலிவரி குறைந்துள்ளதாக கூறியுள்ளன. குறிப்பாக ஸ்னாப்டீல் டெலிவரி நிறுவனம் தனது வழக்கமான டெலிவரியில் 40% மட்டுமே செய்து வருவதாகவும், இதே அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனம் தங்களது டெலிவரி செய்வதிம் தாமதமாகி வருவதாகவும் தெரிவித்துள்ளன. இதே சாப்ட் பேங்க் ஆதரவுடைய குரோபர்ஸ் நிறுவனம் தனது சேமிப்பு நிலையங்களில் 20% மட்டுமே ஆப்ரேட் செய்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

மீண்டும் சேவையை தொடங்கலாம்

மீண்டும் சேவையை தொடங்கலாம்

எனினும் வரவிருக்கும் காலங்களில் 60% சேவைகளை மீண்டும் தொடங்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதே உணவு டெலிவரி நிறுவனங்கள் ஸ்விக்கி சோமேட்டோ உள்ளிட்ட நிறுவனங்களுக்கு கூட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் அவர்களும் பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர். இதே போல் ஆன்லைன் மருந்து நிறுவனங்களும் பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வருவதாகவும் கூறியுள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Despite govt clearance, eCommerce sites find it difficult to deliver essential things

Online pharmacies, Food deliveries, retail firms reported that supply of medicines and other important things delivery was under pressure due to local authorities conditions about coroinavirus.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X