பாகிஸ்தானுக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் கடன் வாங்குவதற்கு சர்வதேச நாணய நிதியமான ஐஎம்எஃப் ஒப்புதல் அளித்துள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா ஆபரெஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்களை குறி வைத்து இந்தியா தாக்குதல் நடத்தியது. இதனை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இரு நாடுகளும் பரஸ்பரம் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்தியாவில் ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களை குறிவைத்து பாகிஸ்தான் டிரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலை இந்தியா தன்னுடைய வான் பாதுகாப்பு அமைப்பை பயன்படுத்தி முறியடித்து வருகிறது. பாகிஸ்தானிலும் பிரதான நகரங்களில் எல்லாம் இந்திய ராணுவம் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் நெருக்கடியில் இருக்கும் பாகிஸ்தான் பொருளாதாரத்தை மீட்டெடுக்க பாகிஸ்தான் அரசு சர்வதேச நாணயத்திடம் கடன் கேட்டிருந்தது. சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானுக்கு 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் வழங்குவது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடத்தியது.
ஐஎம்எஃப் அதிகாரிகள் நடத்திய கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு கடன் வழங்குவதற்கான மதிப்பாய்வு நடந்தது. இதனை அடுத்து வாக்கெடுப்பும் நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை. மேலும் ஐஎம்எஃபின் கடன் பணத்தை பாகிஸ்தான் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதாக இந்தியா குற்றச்சாட்டை முன்வைத்தது.
இந்த சூழலில் இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி பாகிஸ்தானுக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் வழங்குவதற்கு ஐஎம்எஃப் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் ஐஎம்எஃப் இதுவரை பாகிஸ்தானுக்கு வழங்கியுள்ள கடன் தொகை 2.1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதி உதவியை வழங்கியுள்ளது. நிதி உதவி தவிர்த்து பருவநிலை மாற்ற பாதிப்புகளை தடுப்பதற்கான திட்டத்தின் கீழ் பாகிஸ்தானுக்கு கூடுதலாக 1.4 பில்லியன் டாலர்கள் நிதி வழங்குவது தொடர்பாகவும் ஐஎம்எஃப் பரிசீலனை செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த 1.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் தொகையானது பருவநிலை மாற்றங்களால் பாகிஸ்தானில் ஏற்படும் பாதிப்புகளை தடுப்பதற்கும் மேக்ரோ பொருளாதார நிலை தன்மைக்கும் பயன்படுத்தப்படும் என சொல்லப்படுகிறது.
இதனிடையே பாகிஸ்தானில் பொருளாதாரம் மேம்பட்டு வருவதாகவும் பணவீக்கம் சற்றே குறைந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். 2025 ஏப்ரலில் பாகிஸ்தானில் பணவீக்க விகிதம் 0.3 சதவீதம் குறைந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தானில் வெளிநாட்டு கரன்சி கையிருப்பு 9.4 பில்லியன் டாலர்களாக இருந்து, இந்த ஆண்டு ஏப்ரலில் 10.3 மில்லியன் டாலர்களாக அதிகரித்திருக்கிறது. ஜூன் மாதத்திற்குள் இந்த வெளிநாட்டு கரன்சிகளின் கையிருப்பு அளவு 13.9 மில்லியன் டாலர்களாக இருக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது. தற்போதைக்கு பாகிஸ்தான் 131 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடனை வைத்திருக்கிறது.
More From GoodReturns

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications