இந்திய ஸ்டார்ட் அப்களில் நடப்பு ஆண்டில் 2,30,000 வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
நிதி சேவை தளமான Strideone- ன் அறிக்கையின் படி, 2022, ஆ௶இல் இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் 2,30,000 வேலைகளை உருவாக்கியுள்ளது.
ஸ்டார்ட் அப் நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட மொத்த வேலைகளின் எண்ணிக்கை 2017 - 22ல் இடையே 78% வளர்ச்சி கண்டுள்ளது. இது 2022 - 27ல் 24% வளர்ச்சி காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
70 மடங்கு அதிகரிக்கும்
மத்திய அரசு தொடர்ந்து இந்தியாவில் ஸ்டார்ட் அப்களை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இது 2025ம் ஆண்டளவில் 70 மடங்கு அதிகரிக்கலாம் என்பதையும் கணிப்புகள் சுட்டிக் காட்டுகின்றது. இதற்கிடையில் மத்திய அரசின் கனவினை நிறைவேற்றும் விதமாக இந்த நெருக்கடியான காலகட்டத்திலும் மாபெரும் பணியமர்த்தலானது இருந்துள்ளது.
மொத்த ஸ்டார்ட் அப்கள் எண்ணிக்கை
இந்திய ஸ்டார்ட் அப் சுற்றுச்சூழல் அமைப்பு அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு அடுத்தபடியாக, உலகின் மூன்றாவது பெரிய நாடாக உள்ளது. இந்தியாவில் 7,70,000 ஸ்டார்ட் அப்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 108 யூனிகார்ன்களை உள்ளடக்கிய ஸ்டார்ட் அப்களின் ஒருங்கிணைந்த மதிப்பீடு 400 பில்லியன் டாலராகும்.
வேலைகளை விரிவாக்கம்
Strideone இன் நிறுவனர் இஷ்ப்ரீத் சிங் காந்தி கூறுகையில், ஸ்டார்ட் அப் சூழலின் அமைப்பின் வளர்ச்சியானது, மாற்று நிதியளிப்பு விருப்பங்கள், விரிவாக்கம் போன்ற பல அம்சங்களில் பல வாய்ப்புகளை திறந்துள்ளது. இது மில்லியன் கணக்கான வேலைகளை உருவாக்கும் திறனையும் மேம்படுத்தியுள்ளது.
மூன்றாவது ஸ்டார்ட் அப்கள் நிறைந்த நாடு
ஸ்டார்ட் அப்களின் இந்த எண்ணிக்கையானது, இந்தியாவினை மூன்றாவது பெரிய ஸ்டார்ட் அப் சூழலாக மாறியுள்ளது. இது இந்திய பொருளாதாரத்தை கணிசமாகக் பாதித்துள்ளது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 4.-5% பங்களிக்கும் திறனைக் காட்டுகிறது என்றும் கூறினார்.
மாபெரும் பணி நீக்கம்
நடப்பு ஆண்டில் ஸ்டார்ட் அப்களில் மிகப்பெரிய பணி நீக்கம் என்பது இருந்து வருகின்றது. 2022ல் ஸ்டார்ட் அப் மற்றும் மிகப்பெரிய லார்ஜ் கேப் நிறுவனங்கள் பணி நீக்கம் செய்யப்பட்டன. இதில் பைஜூ, அன் அகாடாமி, ஓலா, ஓயோ உள்ளிட்ட பல நிறுவனங்களும் பணி நீக்கம் செய்துள்ளன. இது மறுசீரமைப்பின் ஒரு நடவடிக்கையாக உள்ளது. டெக் ஜாம்பவான்களான மெட்டா, ட்விட்டர் உள்ளிட்ட பல டெக் நிறுவனங்களும் பணி நீக்கம் செய்து வருகின்றன.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!



Click it and Unblock the Notifications