டெல்லி: அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்திய பொருட்களுக்கு விதித்த 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வருகிறது. இதனால் இந்தியாவை சேர்ந்த ஏற்றுமதி துறை சார்ந்த தொழில்கள் பெரிய அளவில் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.
டிரம்ப் வரி: எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், துணிமணிகள் என பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களும் அதிபர் டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கையின் தாக்கத்தை உணர இருக்கிறார்கள். அமெரிக்காவின் முன்னணி ஸ்மார்ட் போன் பிராண்ட் ஆன ஆப்பிள் நிறுவனம் தன்னுடைய ஐபோன் உற்பத்தி மையமாக படிப்படியாக இந்தியாவை மாற்றி வருகிறது. சீனாவை மட்டுமே ஐபோன் உற்பத்திக்காக சார்ந்திருந்த ஆப்பிள் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை அதிகரித்து வருகிறது.

ஐபோன் உற்பத்தி: ஆப்பிள் நிறுவனத்தை பொருத்தவரை ஐபோன் உற்பத்திக்கான ஒரு மையமாகவும் ஐபோன் விற்பனைக்கான ஒரு மையமாகவும் இந்தியா படிப்படியாக உருவெடுத்து வருகிறது. இந்த சூழலில் தான் அமெரிக்க அதிபர் டிரம்பின் 50 சதவீத வரி விதிப்பு நடவடிக்கை அமலுக்கு வருகிறது. இருந்தாலும் டிரம்ப்பின் இந்த வரி விதிப்பு மிரட்டலுக்கு தாங்கள் அடிபணிய போவதில்லை என ஆப்பிள் நிறுவனம் உறுதிப்படுத்தி இருக்கிறது.
இந்தியாவில் விரிவாக்கம் உறுதி: இந்தியாவில் தங்களுடைய செயல்பாடுகளை விரிவாக்கம் செய்யும் எண்ணத்தில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என ஆப்பிள் தலைமை அதிகாரிகள், மத்திய அரசுக்கு உத்தரவாதம் கொடுத்திருக்கிறார்களாம். இந்தியாவில் ஐபோன் உற்பத்தி தரமாகவும் , அதற்கான சிறந்த கட்டமைப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ள ஆப்பிள் தலைமை,இந்தியாவை நாங்கள் கைவிட மாட்டோம் என உறுதி அளித்திருக்கிறார்கள். மத்திய அரசு அதிகாரிகள் இந்த தகவலை டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்துள்ளனர்.
டிரம்ப் மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம்: ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் 2.5 பில்லியன் டாலர்களை முதலீடு செய்து ஆண்டுக்கு 40 மில்லியனில் இருந்து 60 மில்லியன் வரையிலான ஐபோன்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டு இருக்கிறது. இவ்வாறு இந்தியாவில் உற்பத்தி செய்யக்கூடிய ஐபோன்களில் பெரும்பாலானவை அமெரிக்காவுக்கு தான் ஏற்றுமதி செய்யப்பட உள்ளன. அடுத்த மாதம் ஐபோன் 17 தொடர் போன்கள் வெளியாக இருக்கும் சூழலில் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் அதற்கான உற்பத்தியையும் ஏற்கனவே தொடங்கிவிட்டது.
தமிழ்நாட்டில் உற்பத்தி: இந்த சூழலில் தான் டிரம்பின் வரி விதிப்புக்கு அடிபணிந்து இந்தியாவில் தங்களுடைய முதலீட்டையும் செயல்பாட்டையும் நிறுத்திக்கொள்ள போவதில்லை என ஆப்பிள் நிறுவனம் உத்தரவாதம் அளித்துள்ளது. ஃபாக்ஸ்கான் மற்றும் டாடா ஆகிய நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உற்பத்தி ஆலைகளை அமைத்து ஐபோன்களை தயாரித்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றன.
டிம் குக் உறுதி: முன்னதாக டிரம்பே ஆப்பிள் நிறுவன தலைவர் டிம் குக்கிடம் இந்தியாவில் உங்கள் முதலீட்டை மேற்கொள்ளாதீர்கள் எனக் கூறியிருந்தேன் என வெளிப்படையாகவே அறிவித்திருந்தார். ஆனால் ஆப்பிள் தலைமை செயல் அதிகாரியான டிம் குக் இந்தியாவில் தங்களுடைய ஐபோன் உற்பத்தியை விரிவாக்கம் செய்வதில் தொடர்ந்து தீவிரமாக இருக்கிறார்.கடந்த ஆண்டில் 17 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஐபோன்களை இந்தியாவில் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்திருக்கிறது.
நேரடி விற்பனை நிலையம்:இந்திய உள்நாட்டு சந்தையில் ஐபோன் விற்பனை இரண்டு இரண்டு இலக்க வளர்ச்சியை எட்டி இருக்கிறது. ஆப்பிள் நிறுவனம் கூடிய விரைவில் பெங்களூரு,புனே ஆகிய நகரங்களில் நேரடி விற்பனை நிலையங்களை திறக்க இருக்கிறது. இதன் மூலம் ஆப்பிள் நிறுவன கடைகளின் எண்ணிக்கை 6ஆக அதிகரித்துள்ளது.
More From GoodReturns

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

ஈரானை சீண்டும் டிரம்ப்.. மீண்டும் போர் தீவிரமாகுமா..?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

Trump முன்னுக்கு பின் முரண்.. வெள்ளை கொடி தூக்கிய பின்பு ஈரானில் தாக்குதல்.. 2 எரிவாயு தளங்கள் துவம்சம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

5ஆவது வாரத்தில் ஈரான் போர்...!! அடுத்ததாக அமெரிக்காவின் நடவடிக்கை என்ன?

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!

பொட்டில் அடித்தது போல் சொன்ன Iran.. டிரம்ப் மீது சுத்தமா நம்பிக்கையில்லை.. JD Vance வர சொல்லுங்க..!!

அமெரிக்காவுக்கு ஈரான் தந்த ’ரகசிய பரிசு’ – அதிபர் டொனால்ட் டிரம்ப் சூசகம்..!!

டிரம்ப் ஊதும் மகுடிக்கு கெவின் வார்ஷ் ஆடுவாரா..? தலைதூக்கும் ரெசிஷன் அச்சம்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்வது என்ன?

அமெரிக்காவுக்கு மூச்சு முட்ட வைக்கும் சீனாவின் 'அனகொண்டா' தந்திரம்.. 2026ல் அடுத்த போர் தைவான் நாட்டில் தானா?!



Click it and Unblock the Notifications