பெய்ஜிங்: சீனாவுக்கு சொந்தமான பைட் டேன்ஸ் நிறுவனத்தின் செயலியான டிக்டாக் உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கிறது. குறிப்பாக அமெரிக்காவில் இந்த செயலியின் பயனர்கள் எண்ணிக்கை அதிகம். ஆனால் டிக்டாக் செயலி நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என அமெரிக்க அரசு கூறி வருகிறது. டிக்டாக் செயலியை முழுவதும் தடை செய்வதற்கான பணிகளை மேற்கொண்டிருக்கிறது. தற்போது பகுதியளவு தடை அமலில் இருந்தாலும் டிக்டாக் மூலம் அதன் தாய் நிறுவனமான பைட் டேன்ஸ் பெருமளவு லாபம் பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது.
டிக் டாக் செயலியின் உரிமையாளரான பைட் டேன்ஸ் நிறுவனத்தின் லாபம் கடந்த 2023ஆம் ஆண்டில் 60% அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. பைட் டேன்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் லாபமானது அதன் போட்டியாளர் நிறுவனங்களான டென்சன் ஹோல்டிங்ஸ் லிமிடெட் மற்றும் அலிபாபா குரூப் ஹோல்டிங்ஸ் லிமிடெட் ஆகியவற்றை விட பல மடங்கு அதிகரித்து இருப்பது செய்திகளில் தெரிய வந்திருக்கிறது. பைட் டேன்ஸ் நிறுவனத்தின் வரிக்கு முந்தைய வருவாய் என்பது 2022 ஆம் ஆண்டில் 25 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்து. 2023 ஆம் ஆண்டு 40 பில்லியன் டாலர்கள் உயர்ந்துள்ளது.

முதன்முறையாக பைட் டேன்ஸ் நிறுவனம் அதன் போட்டி நிறுவனங்களை விட அதிக அளவு வருவாய் மற்றும் லாபத்தை பெற்றிருக்கிறது. உலக அளவில் மிக வேகமாக வளர்ந்து வரக்கூடிய ஒரு நிறுவனமாகவும் பைட் டான்ஸ் நிறுவனம் மாறி இருக்கிறது. வீ சாட்டை விட டிக்டாக் செயலியானது சீனர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலம் அடைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன . குறிப்பாக வெளிநாடுகளில் டிக் டாக் ஷாப் எனப்படும் ஈ காமர்ஸ் செயலியையும் பைட் டேன்ஸ் நிறுவனம் தொடங்கியது.
டிக்டாக் ஷாப் மூலம் தொழில்முனைவோர் நேரடியாக தங்களின் தயாரிப்புகளை விற்பனை செய்ய முடியும். இது தான் பைட் டேன்ஸின் மிகப்பெரிய லாபத்துக்கு காரணம். அமெரிக்காவில் மட்டும் இந்த நிறுவனத்தின் ஈகாமர்ஸ் வணிக பல லட்சம் வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளது. அந்த நாட்டில் மட்டும் 170 மில்லியன் பயனாளர்களை டிக் டாக் ஷாப் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு முழுமையான தடை விதிக்கப்படும் பணிகள் நாடாளுமன்ற மூலம் முன்னெடுக்கப்பட்டன. இதனை அடுத்து டிக் டாக் உரிமையாளரான பைட் டேன்ஸூக்கு பெரிய அளவில் அடி விழும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கு எதிர் மாறாக நிறுவனத்தின் லாபம் அதிகரித்திருக்கிறது.
பைட் டேன்ஸ் நிறுவனமானது தங்களுடைய சொந்தமான ஜெனரேட்டிவ் ஏஐ தொழில்நுட்பத்தை தயாரித்து வருவதாகவும் மிகப்பெரிய லாங்குவேஜ் மாடல்களையும் சேட் பாட்டுகளையும் உருவாக்கி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
Story written by: Devika


Click it and Unblock the Notifications