சர்வதேச அளவிலான பிரபலமான முதலீட்டு வங்கியான டாய்ச் வங்கி, நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக தெரிகிறது.
குறிப்பாக பிரிட்டன் ஊழியர்கள் இந்த பணி நீக்கத்தில் பாதிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது, இதன் பிரிட்டன் ஊழியர்கள் மத்தியில் பெரும் கவலையினை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து ராய்ட்டர்ஸ் முதலீட்டு வங்கி பிரிவில் ஆலோசனை பிரிவு, ஜீனியர் பிரிவு உள்பட பல பிரிவுகளில் பணி நீக்கம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எங்கு பணி நீக்கம்?
இந்த பணி நீக்கமானது நியூயார்க் மற்றும் லண்டனில் அதிகளவில் இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் எத்தனை பேர் பணி நீக்கம் செய்யப்படலாம் என்பது குறித்தான தகவல்கள் வெளியாகவில்லை.
எனினும் இதன் காரணமாக டஜன் கணக்கான ஊழியர்கள் பணியினை இழக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
செலவு குறைப்பு நடவடிக்கை
இந்த பணி நீக்கம் என்பது அனைத்து பிரிவிலும் இருக்கலாம் என தெரிகிறது. இது செலவு குறைப்பின் ஒரு பகுதி நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
சர்வதேச அளவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில், வங்கி துறையானது பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மத்திய வங்கிகளானது வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ள நிலையில், இதுவும் வங்கிகளின் வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக கடன் வளர்ச்சியானது பாதிக்கப்படலாம் என தெரிகிறது.
கடினமான சூழல்
மந்த நிலைக்கு மத்தியில் வங்கி துறையில் கடினமான சூழலே இருந்து வருகின்றது. ஒப்பந்தங்கள் சரிவினைக் கண்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த வார தொடக்கத்திலேயே நியூயார்க்கினை தளமாகக் கொண்ட முதலீட்டு வங்கியில் ஜீனியர் வங்கியாளர்கள் மற்றும் ஒரு சில மூத்த வங்கியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
மந்த நிலை
இத்தகைய சூழலில் தான் தனியார் முதலீட்டு வங்கியானது பணி நீக்க நடவடிக்கையினை கையில் எடுத்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது முதலீட்டு வங்கி என்பதால் மந்த நிலைக்கு மத்தியில், இதன் முதலீடுகளும் சரிவடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்தத்தில் பணி நீக்கம் என்பது நிச்சயம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications