ஐரோப்பிய வங்கிகளின் ஸ்திரத்தன்மை பற்றிய அச்சம் கிரெடிட் சூயிஸ் பணபுழக்க அளவுகள் மூலம் அதிகரித்த நிலையில், UBS தலையீடும், கைப்பற்றல் வாயிலாக அச்சம் சற்று தணிந்தது.
இந்த நிலையில் Deutsche Bank மூலம் ஐரோப்பிய சந்தைக்கு அடுத்த பெரிய பிரச்சனை உருவாகியுள்ளது. வியாழன் இரவு முதல் Deutsche Bank-ன் credit default swaps அளவு பெரிய அளவில் அதிகரித்த நிலையி் வெள்ளிக்கிழமை காலை ஐரோப்பிய பங்குச்சந்தை துவங்கியது முதல் Deutsche Bank பங்குகள் சுமார் 13%-க்கு மேல் சரிந்துள்ளது.
Deutsche Bank மூலம் அடுத்த பூகம்பம் ஐரோப்பிய சந்தையில் வெடிக்க உள்ளதாக..? credit default swaps என்றால் என்ன..? இதனால் வங்கிகள் திவாலாகும் அளவிற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதா..?
மத்திய வங்கிகள்
பணவீக்கத்தை குறைக்க உலக நாடுகளின் மத்திய வங்கிகள் அனைத்தும் பென்ச்மார்க் வட்டி விகிதத்தை உயர்த்தி வரும் வேளையில் பொருளாதாரம், வர்த்தகம் அனைத்தும் பாதிக்கப்பட்டு தற்போது நீண்ட கால ரெசிஷனுக்கு தள்ளப்படும் அபாயம் இருப்பதாக பல கணிப்புகள் வரும் வேளையில் அமெரிக்கா, ஐரோப்பிய சந்தையில் இருக்கும் வங்கிகள் திவாலாகும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.
கிரெடிட் சூயிஸ் திவால்
கிரெடிட் சூயிஸ் திவாலாகும் நிலையில் இருந்து சுவிஸ் மத்திய வங்கி மற்றும் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பு மூலம் UBS வங்கிக்கு 3 பில்லியன் பிராங்க் தொகைக்கு கைப்பற்றப்பட்டு பெரும் தடுமாற்றத்தில் இருந்து சுவிஸ் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி காப்பாற்றப்பட்டது.
Deutsche Bank பங்குகள்
இந்த நிலையில் ஜெர்மன் வங்கியான Deutsche Bank பங்குகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக சரிந்து வருகிறது. புதன்கிழமை 9.96 யூரோவுக்கும் வர்த்தகம் செய்யப்பட்ட அவ்வங்கி பங்குகள் இன்று 8.06 யூரோ வரையில் சரிந்துள்ளது. இது மட்டும் அல்லாமல் இந்த மாதத்தில் இதுவரை Deutsche Bank-ன் மொத்த சந்தை மதிப்பில் ஐந்தில் ஒரு பங்கிற்கு மேல் இழந்துள்ளன.
கிரெடிட் டீஃபால்ட் ஸ்வாப்ஸ்
கிரெடிட் டீஃபால்ட் ஸ்வாப்ஸ் - ஒரு நிறுவனத்தின் பத்திரதாரர்களை வைத்திருப்பவர்களுக்கான திவாலாகாமல் காப்பற்றும் உத்தரவாதம் வழங்க கூடிய காப்பீட்டு வடிவம். புதன் கிழமை 142 அடிப்படை புள்ளிகளில் இருந்து வியாழன் இரவு 173 அடிப்படை புள்ளிகளுக்கு உயர்ந்தது. இதன் எதிரொலியாக தான் இன்று பங்குகள் பெரும் சரிவை சந்தித்துள்ளது.
அமெரிக்கா டூ ஐரோப்பா
அமெரிக்காவில் சிலிக்கான் வேலி வங்கி, சிக்னேச்சர் வங்கி திவாலான பின்பு அவசர அவசரமாக திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்ட First Republic Bank-ஐ சுமார் 11 வங்கிகள் நிதியுதவி செய்து காப்பாற்றியது. இதன் எதிரொலியாக தான் கிரெடிட் சூயிஸ் வீழ்ந்து UBS கைப்பற்றல் மூலம் காப்பாற்றப்பட்டது.
சங்கிலி தொடர் பாதிப்பு
இதன் சங்கிலி தொடர் பாதிப்பாக தான் தற்போது ஜெர்மனி நாட்டின் மிகப்பெரிய வங்கியாக இருக்கும் Deutsche Bank-ன் கிரெடிட் டீஃபால்ட் ஸ்வாப்ஸ் அளவு அதிகரித்து பங்குகள் 14 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. இதேபோல் ஜெர்மனி நாட்டிள் அதிக கார்பரேட் கடன்களை கொண்டு இருக்கும் Commerzbank பங்கு விலை 9 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. பிரான்ஸ் நாட்டின் Societe Generale 7 சதவீதத்திற்கும் மேல் சரிந்துள்ளது.
பூதத்தை திறந்து விட்டது
கிரெடிட் சூயிஸ் போலவே வெள்ளிக்கிழமை பூதத்தை திறந்து விட்டு முதலீட்டாளர்களை வீக்என்ட் நாட்கள் தூக்கத்தை கெடுக்க உள்ளது Deutsche Bank. இவ்வங்கியின் பிரச்சனை சற்று வித்தியாசமாக இருக்கும் காரணத்தால் ஜெர்மனி மத்திய வங்கி தலையீடுமா அல்லது பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் பதம் பார்க்குமா..? எது எப்படி இருந்தாலும் திங்கட்கிழமை மாஸ்டர் பிளான் உடன் வர்த்தகத்தை துவங்க தயாராக இருங்க.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications