டெல்லியை சேர்ந்த ஒரு மென்பொருள் டெவலப்பர் சமீபத்தில் ரெடிட் (Reddit) தளத்தில் பகிர்ந்த ஒரு பதிவு, இணையத்தில் அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றி வரும் இவர், பெங்களூருவைச் சேர்ந்த ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் இருந்து தொலைதூர வேலைவாய்ப்பு மூலம் செயல்படக் கூடிய Software Development Engineer (SDE1) வேலைக்கு தேர்வு செய்யப்பட்டார்.
ஆனால், இறுதி கட்ட பேச்சுவார்த்தையில் HR எதிர்பாராத மற்றும் நியாயமற்ற நிபந்தனைகள் முன்வைத்ததாக அவர் கூறியுள்ளார். இது அவருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரிடம், frontend development-இல் சிறப்பு கவனம் செலுத்தும் சாப்ட்வேர் டெவலப்மெண்ட் இன்ஜினியர் பணிக்கு முழுமையாக தொலைதூர வேலை என கூறப்பட்டிருந்தது. ஆனால், HR உடன் நடந்த இறுதி பேச்சுவார்த்தைக்குப் பிறகு தான் முழு விவரம் தெரியவந்துள்ளது.

முதலாவது, அந்த நிறுவனம் ஆண்டிற்கு 4 முறை பெங்களூருவில் 7 முதல் 10 நாட்கள் வரை நேரில் சந்திப்புகளில் கலந்து கொள்ள வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. அது மட்டுமின்றி, இந்த பயணங்களுக்கான விமான டிக்கெட், தங்குமிடம் உள்ளிட்ட செலவுகளை தாங்களாகவே பார்த்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளது.
அடுத்ததாக நிறுவனத்தின் Bring Your Own Device கொள்கையின்படி, வேலைக்காக தனிப்பட்ட லேப்டாப்பையே பயன்படுத்த வேண்டும். அதேபோல், நிறுவனத்தின் தரவுகளை பாதுகாக்கும் நோக்கில் சில பாதுகாப்பு மென்பொருட்கள் மற்றும் கட்டுப்பாடுகள் உங்கள் தனிப்பட்ட சாதனத்தில் நிறுவ வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. HR கூறியதுபடி, இந்த பாதுகாப்பு மென்பொருட்கள் தனிப்பட்ட பயன்பாட்டை பாதிக்காது என்றாலும், அது சில சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
இதுதொடர்பான பதிவு, Reddit-இல் பகிரப்பட்டதும், ஏராளமானோர் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். பலர் இந்த வேலைவாய்ப்பை மிகவும் சந்தேகத்திற்குரியதாக கூறுகின்றனர். சிலர் அதை நேரடியாக ஏமாற்று வேலைவாய்ப்பு எனவே கூறியுள்ளனர். நம்பகமான நிறுவனங்கள், வேலைக்கான லேப்டாப்புகளை தாங்களே வழங்கும் என்றும் தனிப்பட்ட சாதனங்களில் மென்பொருட்கள் நிறுவ வேண்டும் என்பதே ஆபத்தானது என்றும் பலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தனது Reddit பதிவை தொடர்ந்து, அதே டெவலப்பர் மேலும் சில முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளார். வேலையின் ஒரு பகுதியாக நிறுவனம் நிறுவச் சொல்லும் மென்பொருள் குறித்து சந்தேகமடைந்த அவர், மீண்டும் HRஐ தொடர்புகொண்டு விளக்கம் கேட்டுள்ளார். அதற்கு அவர், அந்த மென்பொருள் லேப்டாப்பில் பின்னணியில் இயங்கி, பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா..? என்பதை கண்காணிக்கும் என தெரிவித்திருக்கிறார்.
HR-ன் பதிலால் திருப்தி அடையாத அந்த டெவலப்பர், தனிப்பட்ட தரவுகள் பாதிக்கப்படக் கூடாது என்று பணிக்காக மட்டும் வேறொரு தனி லேப்டாப்பை வாங்க யோசித்து வருகிறார். இதற்கான முழு செலவையும் அவரே தான் ஏற்றுக் கொள்ள வேண்டும். மேலும், இந்த வேலைக்கு சுமார் ரூ.35 லட்சம் வருட வருமானம் வேண்டும் என பலர் கருத்து தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், ஒவ்வொரு காலாண்டிலும் நடைபெறும் பயணங்களுக்கு ரூ.20,000 முதல் ரூ.30,000 வரை செலவாகும் என்று அந்த டெவலப்பர் கணித்துள்ளார். இது அவரது சேமிப்புகளை பெரிதும் பாதிக்கக்கூடும் என அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
2025 மார்ச் மாதம் பணிநீக்கம் செய்யப்பட்ட பின்னர் வேலை இல்லாத நிலையில் உள்ள அந்த டெவலப்பர், இந்த வேலை வாய்ப்பை ஏற்க வேண்டுமா? இல்லையா? என்பதை தீவிரமாக ஆய்வு செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications